Saturday, October 27, 2012

பொன்னுக்கிழவி


பொன்னுக்கிழவியின் உயிர் இப்பவோ இக்கணமோ என்று இருக்கிறது.உறவினர்கள்,தெரிந்தவர்கள்,வேண்டியவர்கள் வந்து பார்த்துக்கொண்டுபோகிறார்கள்.வரமுடியாதவர்கள் வந்து பார்த்துப்போனவர்களிடம், "எப்பிடி இருக்கு? இப்பபோகுமோ?" என்று வினவினார்கள்.

  வெளி இடங்களில் உள்ளவர்களுக்குத்தந்தியிலும்,தொலைபேசியிலும் நிலைமை அறிவிக்கப்பட்டது.காணிப்பிரச்சினைகாரணமாக கிழவியுடன் மூன்று வருடமாகப்பேசாதிருந்த சீதா ஓடிவந்து தலைமாட்டில் இருக்கிறாள்.

 கிழவிக்குக்கிட்டப்போய் "எணை ஆச்சி என்னைத்தெரியுதேணை" எனயாராவதுகேட்டால் போதும் சீதாவும் ஓடிப்போய் "எணை ண்ணை முளிச்சுப்பாரணை நான் சீதா ந்திருக்கிறன்".என்று தானும் இருப்பதாகற்றர்களுக்குக்காட்டிக்கொண்டாள்.

  "இளந்தாரிப்பொடியள் திடீர்திடீரெனச்சாகுதுகள்.இதுபோகமாட்டன் எண்டு இளுபறிப்படுது".கிழவி இன்னமும் சாகவில்லை என்றஎரிச்சலில் இருவர் பிரலாபித்தார்.விபுலன் தோளில் சால்வையும் கையில் தாசிக்கட்டுமாகஅலுவல் பாக்கிறான்.

  வாய்கொள்ளாதவெற்றிலையைப்போட்டுக் குதப்பிக்கொண்டு மடியிலும் வெற்றிலையையும் சுருட்டையும் கட்டிக்கொண்டு தைக்கமுடியாமல் பிறகு ருகிறேன் எனச்சைகையில் காட்டிவிடு டையைக்கட்டினார் சின்னராசு.எட்டு முடிவற்கிடையில் அவர்வீட்டில்

வெற்றிலைக்கடை ஆரம்பித்துவிடும்.

  "எடே செல்வன் சுறுட்டைக்கொண்டந்து குடடா. சுறுட்டுக்கேட்டு என்னைக் கரைச்சல் படுத்துகினம்" சுருட்டுக்கேட்டு செல்வனை ஏவினார் கந்தவனம். ஒரு தட்டில் சுருட்டையும் கயிற்றுத்தணலையும் கொண்டுவந்து கந்தவனத்துக்கும் இன்னும் சிலருக்கும் இடையில் வைத்தான் செல்வன்.
  

 கந்தவனம் ஒரு சுறுட்டை எடுத்து வலது காதில் செருகினார். இன்னொன்றை வாயில் வத்து புகையை வெளியேவிட்டார்.சுருட்டு பாதிபுகைந்ததும் இன்னொரு சுருட்டை எடுத்து மடியிலே வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார்.

  ஒருவருக்கும்தெரியாமல்  இரவு இரண்டாவது காட்சிக்குப்போவதற்கு சில இளைஞர்கள் திட்டமிட்டனர்.பொன்னுக்கிழவி.பொன்னாத்தா,பொன்னுப்பேத்தி, என எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் பெயர் பொன்னி என்பது பலருக்குத்தெரியாது..
  பொன்னிக்குப் பத்து வயதாக இருக்கும் போதே அவரின் பாட்டி "எனக்கென்ன என்ரை பொன்னி சாமத்தியப்பட்டாப்போலைதான் கண்ணை மூடுவன்.அதுக்கு முதல் நான் போக மாட்டன்" எனச்சொல்வாள்.
. ஆசை நிறைவேற நான்குவருடங்களுக்கு முன்னமே  பொன்னியின் பாட்டி போய்ச்சேர்ந்து விட்டாள்.

  பொன்னிக்குத்திருமணம்முடிந்து சரஸ்வதி என்ற குழந்தியைப்பெற்
றாள்."என்ரை சரசுவது சாமத்தியப்பட்டாப்போலைதான் சாகுவன்"என்றவபல்லவியைப்பாடத்தொடங்கிய பொன்னியின் தாயும் ஆசை நிறைவேறமுன்னர் காலமானாள்.

 சரஸ்வதி ஆசிரியராகக்கடமியாற்றுகிறாள். அவளது கணவன் பிரபல பாடசாலையின் அதிபர்.அவர்களுக்குப்பிறந்த பெண் குழந்திக்கு சிவசோதி எனப்பெயரிட்டனர்.முன்னோர்க்குத்தான் சற்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்"உவள் சோதி பெரிசானாப்போலைதான் நான் கண் மூடுவன்"என அடிக்கடி கூறினார் பொன்னுக்கிழவி. அவளின்ரை கலியாணவீட்டுக்கும் நீ இருப்பாயணை என ஆறுதல் கூறுவாள் மகள் சரஸ்வதி.

  சிவசோதியும் அம்மாச்சி அம்மாச்சிஎனப்பொன்னியின் டியிலேநெடுகஇருப்பாள். பொன்னுக்கிழவியின் ம்மபரையில் க்காத்து ந்துவிட்டது.சிவசோதி பெரிசாகும்வரை பொன்னுக்கிழவி உயிருடன் இருந்து விட்டாள்.

" சிவசோதிம் லியாணம் கட்டினாப்போலைதான்நான் ண் மூடுவன்" என்றபுதியவியைப்பாடத்தொடங்கினாள் பொன்னுக்கிழவி.சிவசோதியின் திருமத்துக்கிடையில் பொன்னுக்கிழவி எத்தனையோ முறை செத்துப்பிழைத்தாள்.சிவசோதியின் திருமத்தன்று பொன்னுக்கிழவி மிகவும்  உசாராகவேலைசெய்தார்.சாககிடந்தகிழவியா இது எனஅனைவரும் ஆச்சரியப்பர்.

  சிவசோதியின் ன் கொழும்பிலே னியார் நிறுவம் ஒன்றில் பொறுப்புள்ளஅதிகாரியாகக் மை யாற்றுகிறார்.சிவசோதி னுடன் கொழும்புக்குப்புறப்பட்டபோது பொன்னுக்கிழவி அழுதுவிட்டாள்.சிவசோதியும் னை ந்து அழுதுதாள்.

  அம்மாச்சி அம்மாவைக்கமாகப் பார்த்துக்கொள்ளனை எனபொன்னுக்கிழவியிடமும். அம்மா அம்மாச்சியைக்கவமாகப்பார்த்துக்கொள்ளனை எனத்தாயிடமும் கூறினாள் சிவசோதி.   
பொன்னுக்கிழவிக்குப்புதியதொரு ஆசை பிறந்தது."சோதிக்கொரு பெட்டை பிறாந்தாப்போலதான்  நான் சாகுவன்" என்று கூறினார் பொன்னுக்கிழவி.சிவசோதி ர்ப்பமானாள்.சோதிக்குப்பொம்பிளைப்பிள்ளைபிறக்வேண்டும் எனஊரில் உள்ளகோயில்கள் எல்லாவற்றிலும் நேர்த்திவைத்தார் பொன்னுக்கிழவி.எல்லாக்கவுளும் சேர்ந்து  கிழவியை ஏமற்றிவிட்டார்கள். சிவசோதி அழகானஆண் குழந்தையைப்பெற்றெடுத்தாள்.அடுத்தது
 பொம்பிளைப்பிள்ளைதான் என்று தைத்தேற்றினாள் பொன்னுக்கிழவி.
   
  "சா சா" என்று குழஎதையைச்செல்லங்காட்டினாள் பொன்னுக்கிழவி.அப்போது அங்கே ந்தன் "அம்மாச்சி ங்கச்சியின்ரைபேர் சா அல்லசைலஜா " என்று திருத்தினான்.தாய் சிவசோதி அம்மாச்சி என்று கூப்பிடுவதால் அவனும்  அப்படியே கூறினான்.

  பொன்னுக்கிழவி சாகத்துணிந்துவிட்டாள்."பேத்தீன்ரை பொடியளையும் ண்டாச்சு  நான் இனிச்சாகலாம்" என்று  எல்லோரிடமும்சந்தோசமாகக்கூறூவாள்.ஆண்டொண்று போகப்போகஆசைகளும் த்தொடங்கின‌."இன்னும் கொஞ்சக்காலம்தான் சா பெரியபிள்ளையானாப்போலைதான் நான் ண்மூடுவன். அவவும் ன்  எனக்குக்கிட்டமாட்டான்"என்றாள் பொன்னுக்கிழவி.

  சைலஜா பெரியளாகுமுன் பொன்னுக்கிழவியைக்கூட்டிப்போகன் ந்து நிற்கிறான்.அவளை ழியனுப்பிவைக்கஎல்லோடும் ஆயத்தமாகநிற்கிறார்கள்.வாசலில் கார் ந்து நின்றது. சிவசோதியும் னும் பிள்ளைகளும் இறங்கினர்.சிவசோதி அம்மாச்சி எனக்கூப்பிட்டு எனனைத்தெரிகிறதா எனக்கேட்டாள்.பொன்னுக்கிழவி ஒன்றும்பேசாது கிடந்தாள்.சைலஜா கூப்பிட்டபோதும் ஒரு அசைவும் தென்பவில்லை.

சிவசோதிவந்து இரண்டுநாட்களாகிவிட்டது.எல்லாம் அப்படியேதான் உள்ளதுங்கம் உரைச்சுப்பருக்கினால் ஆசை அடங்கும் எனயாரோஒ ருபுத்திசாலி சொன்னார்.அதையும் செய்து பார்த்தார்கள் ஒரு அசைவும் தென்பவில்லை.

 பொண்களிடையே திடீரெனஒருபப்புத்தெனட்டது.த்தம் வெளியேவராமல் தைத்தார்கள். சிலர் ம்பமாட்டாமல் உண்மையா எனஅறிவற்கு வெளியேசென்றர்.அதை அவதானித்தஆண்களும் என்னஎனஅறிவற்கு ஆர்வம் காட்டினர்.ஆண்களும் அறிந்துவிட்டர்.என்னடாப்பா இந்தக்கிளவி இப்பிடிக்கிடஅது அப்பிடியாப்போச்சு என்றர்.

    பொன்னுக்கிழவிக்கருகில் சென்றஸ்வதி மெதுவாகக்குனிந்து காதருகே அம்மா எனமூன்று முறை கூப்பிட்டாள்.கிழவி மெல்லக் ண்ணைத்திறந்து பார்த்தாள்.சைலஜா சாமத்தியப்பட்டுவிட்டாள் என்று ஸ்வதி கூறினாள்.

 கிழவி ண்ணை ன்றாகவிழித்துப்பார்த்துச் சிரித்தாள். ஏதோ சொல்வற்கு முயற்சித்தாள் . வார்த்தைகள் வில்லை.க்கா எனயாரோகூப்பிட்டத்திரும்பிப்பார்த்தஸ்வதி மீண்டும் பொன்னுக்கிழவியைப்பார்த்தபோது ண்கள் மூடி இருந்த‌. அவை நிரந்தமாகமூடிவிட்ட‌.

சூ..விவர் மா 01/02//1981
ஈழநாடு வாரர் 01/02/1981

No comments: