கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய சரித்திரப்படங்களுக்கு உயிரூட்டியது
நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பு.சமூகப்படங்களில் சிவாஜியும்
அரச படங்களில் எம்.ஜி.ஆரும்
கொடிகட்டிப்பறந்தநேரத்தில்
பி.ஆர். பந்துலுவின் கர்ணன்,
வீரபாண்டியகட்டப்பொம்மன் என்பன அரச படங்களில்
நடிக்க சிவாஜியாலும் முடியும் என்று நிரூபித்தன.
அரச படங்களின் வெற்றியைத்தொடர்ந்து
இன்னொரு அரச படத்துக்கான கதையை
எழுதி முடித்துவிட்டு அதில் நடிப்பதற்குநடிகர் ஒருவரை
ஒப்பந்தம் செய்ய ஆயத்தமாக இருந்தார்
பி.ஆர். பந்துலு. திரைப்படத்து றையின் அனுபவம் மிக்க
வீனஸ் கிருஸ்ணமூர்த்தியுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது தனது புதிய படத்தின்
கதையைப்பற்றிக்கூறினார் பந்துலு.
இன்றைய இயக்குனர்களைப்போன்று அன்றைய இயக்குனர்கள்
தமது கதையைப்பொத்தி வைத்திருப்பதில்லை. அனுபவம் உள்ளவர்களிடம் கூறி
ஆலோசனை பெற்றபின்பே படப்பிடிப்பைத்தொடங்குவார்கள். பந்துலுவின் கதையைமுழுமையாகக்கேட்ட வீனஸ் கிருஸ்ணமூர்த்தி
"இது
எம்.ஜி.ஆர் நடிக்கவேண்டியகதை
அவர் நடித்தால்
தான் அருமையாக இருக்கும்" என்றார்.
வீனஸ் கிருஸ்ணமூர்த்தி கூறியதைக்கேட்டதும்
பந்துலு திகைத்து
விட்டார்.தமிழ்த்திரை உலகை எம்.ஜி.ஆர், சிவாஜி என
இரு துருவங்கள்
ஆட்சிசெய்தகாலம். சிவாஜிக்காகக்கதை எழுதி
படம்
தயாரித்து இயக்கியவர்களில் பி.ஆர்.பந்துலுவும்
ஒருவர்.
"அவரை வைத்து நான் படம் எடுக்க முடியுமா?" எனத் தயங்கியபடி
கேட்டார் பந்துலு.
"ஏன்
முடியாது? நான் இதுபற்றி
அவரிடம் கதைக்கிறேன்"என்றார் கிருஸ்ணமூர்த்தி.
தனது படத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்குச்சம்மதம்தெரிவித்ததைஅறிந்த பந்துலு எம்.ஜி.ஆரை நேரில்
சந்திப்பதற்காக ராமாவரம் தோட்டத்துக்கு
போன் செய்து தான் புறப்பட்டு வருவதாகக்கூறினார்.
"நீங்கள் பெரியவர் உங்களை
நான் வந்து சந்திப்பதுதான் முறை
நீங்கள் அங்கேயே இருங்கள்" என்றார் எம்.ஜி.ஆர்.
"இல்லை,இல்லை நாங்கள்
புறப்பட்டுவிட்டோம் நான்
வந்து சந்திப்பதுதான் சரி" என்று கூறிய பந்துலு ராமாவரம் தோட்டத்துக்குச்சென்றார்.
கலைத்திலகம்
பந்துலுவை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வாசலி
எதிர்கொண்டு வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.தனது
படத்தில்
நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்ததற்கு பந்துலு நன்றி
தெரிவித்தார்.இருவரும் சிறிது
நேரம் திரை உலகம் பற்றிக்கதைத்தனர்.எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்.
முற்பணம் எவ்வளவு வாங்குகிறார்
என்பதைத்தெரிந்த பந்துலு அவர் எவ்வளவு கூடுதலாகப்பணம்
கேட்டாலும் கொடுப்பதற்கு
ஆயத்தமாகச்சென்றிருந்தார்.
வழமையான
கதைகள்
முடிந்தபினனர்
திரப்படம்
பற்றிய பேச்சைத்தொடங்கினார் பந்துலு.அப்படத்தின் கதையைக்கேட்டதும்
அது வெற்றிப்படம் என்பதைத்தான் உணர்ந்ததாக எம்.ஜி.ஆர் கூறினார்.படத்தில் நடிப்பதற்கு
எவ்வளவு சம்பளம்,முற்பணம்
எவ்வளவு என்று
பந்துலு கேட்டார்.
சம்பளமா?
முன்பணமா? எனக்கேட்டுவிட்டு ஒரு தொகையைக்கூறினார் எம்.ஜி.ஆர்.அவர் கூறிய தொகையைக்கேட்டதும்
பெட்டியைத்திறந்து பணக்கட்டுகளை
எண்ணத்தொடங்கினார் பந்துலு.
"என்ன
பெட்டியைத்திறந்து எண்ணுகிறீர்கள்
நான் கேட்டதை மட்டும் கொடுங்கள்"
என்றார் எம்.ஜி.ஆர்.
"நான்
கேட்ட ஒரு ரூபாவை
மட்டும் முன்
பணமாகக்கொடுங்கள்" என்றார் எம்.ஜி.ஆர்.
"உங்களிடமிருந்து முன்
பணம்
வாங்க நான் விரும்பவில்லை.இவ்வளவு
தூரம் வந்துவற்புறுத்தியதால் ஒரு ரூபாவை
மட்டும் முன்
பணமாகத்தாருங்கள்" என விளக்கமாகக்கூறினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் கேட்ட
முன் பணத்தொகையைக்கொடுப்பதற்காக சட்டைப்பையில் கையைவைத்த பந்துலு தேள்
கொட்டிய திருடனைப்போல்திகைத்தார். அவரிடம் ஒரு
ரூபா இருக்கவில்லை. கூடவந்தவர்களிடம்
கேட்டுப்பார்த்தார் பந்துலு அவர்களும் திருதிரு
என முழித்தனர்.அதிர்ஷ்டவசமாக
ஒருவரிடம் ஒரு
ரூபா இருந்தது.அதைக்கடனாக வாங்கிய
பந்துலு எம்.ஜி.ஆரிடம்
அட்வான்ஸாகக்கொடுத்தார்.
எம்.ஜி.ஆருக்கு முற்பணம் கொடுக்க
பி.ஆர்.பந்துலு
கடன்
பட்ட ஆயிரத்தில் ஒருவன்
என்ற திரைப்படம்பந்துலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும்
பெரும் புகழைப்பெற்றுக்கொடுத்தது.ஜெயலலிதாவின்
வாழ்க்கையிலும் அப்படம்
பெரியதொரு திருப்பத்தை
ஏற்படுத்தியது.
ரமணி.
வீரகேசரி வார
வெளியீடு 26/10/2003
2 comments:
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய சுவையான திரைச் செய்தி! நன்றி!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment