நிகழ்காலத்தையும்இறந்தகாலத்தையும்துல்லியமாகஅறியத்தருவது,உள்ளங்கையில் உலகம், விரல்நுனியில் தகவல்
ஆகிய பெருமைகளைத் தனனகத்தே கொண்டதுதான் விக்கிபீடியா.சுமார் 185 மொழிகளில் உலகை இணைத்திருக்கும் இதற்கு
ஈடு இணை இல்லை.விக்கிபீடியா
தமிழிலும் இருப்பது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
உலகின்
எங்கோஒரு மூலையில் உள்ள ஒரு சிறிய
நாட்டைப்பற்றி அறிய வேண்டுமானால் விக்கிபீடியாவை
தட்டிவிட்டால் போதும், அந்த நாடு
எந்தக்கண்டத்தில் உள்ளது? எப்போ சுதந்திரம்
பெற்றது? குடியரசானது எப்போ?மக்கள்தொகை,மொழி,கலை,கலாசாரம்,மதம்,
இனம்,அண்டை நாடுகள் போன்ற
அனைத்து விபரங்களையும்
துல்லியமாக அறிந்து கொள்ள
விக்கிபீடியா உதவுகிறது.பிரபலமான ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால்
அவரது பெயரில் தேடுதல்
செய்தால் சகல
விபரங்களும்
கண் முன்னே
வந்துவிடும்.
கட்டுரைகள்,விபரணங்கள் எழுதும்
பலர்
மேலதிக தகவல்களைப்பெறுவதற்கும், தெரிந்த
தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும்
விக்கிபீடியாவை நாடுவது சகஜம்.தனது
தகவல்களை விக்கிபீடியாவில்
இருந்து பெற்றேன் என்று நன்றியுடன் வெளிப்படுத்துபவர்கள்
மிகவும் குறைவு.விக்கிபீடியாவின்
புண்ணியத்தால் பிரபலமானவர்கள் மிகவும் அதிகம்.எல்லோருக்கும் எல்லாம்தெரிந்திருக்க வேண்டும் என்ற விக்கிபீடியாவின் கொள்கை
வரவேற்கத்தக்கது.ஆனால் ஒரு சிலர் விக்கிபீடியா மூலம் தாம் பயனடைவதை வெளிப்படுத்துவதில்லை.
எமக்குத்தெரிந்த தகவல்களை விக்கிபீடியாவில் பகிர்ந்து கொள்ளலாம்.புதிய
ஒரு தலைப்பில் எமக்குத்தெரிந்தவற்றைப் பதிவேற்றலாம்.விக்கிபீடியாவில் உள்ள
ஒருதகவல்
பிழையாக இருந்தால் இன்னொருவர் திருத்தலாம்.
நிறுவனங்கள்,தனி நபர்கள்
நடத்தும்
பத்திரிகை, சஞ்சிகை,வலைப்பூ, இணைய
தளம் ஆகியவற்றில்
இந்த வசதிகள் இல்லை.தமது தவறை மறைப்பதற்கும்
நியாயப்படுத்துவதற்கு முயற்சிப்பவர்களின்
மத்தியில் விக்கிபீடியாவின்
இந்த சேவை மிக மகத்தானது.
விக்கிபீடிய பல போட்டிகளை
நடத்துகிறது.மாணவர்களுக்கானபோட்டிகளை நடத்தி அவர்களையும் ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு
மட்டுமல்லாது
ஆசிரியர்களுக்கும் சிறந்த வழி
காட்டியாக விளங்குகிறது.தமிழ் இலக்கியங்கள்,இதிகாசங்கள்,புராணங்கள்
ஆகியவற்றில் எற்படும் சந்தேகங்களைவிக்கிபீடியாவைப்பார்ப்பதன்மூலம்தீர்த்துக்கொள்ளலாம்.இதேவேளை புகைப்படப்போட்டிகளுக்கும் களம் கொடுக்கிறது.விக்கிபீடியாவில் இருந்து தகவல்களைப்பெறுபவர்களைப்பற்றிக்கவலைப்படாது தனது வெற்றிப்பயணத்தை
அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரபலமான
அறிஞர்கள், கல்விமான்கள்,
தலைவர்கள்
பற்றிய விபரங்கள் ஊடகங்கள் மூலம் உலகுக்குத்தெரியவருகிறது.
ஆரம்ப வகுப்புமுதல் உயர்தர வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் தலர்வர்கள்,
அறிஞர்கள்,பெரியார்கள்
பற்றிய விபரங்கள்
உள்ளன.பரீட்சையில்
அதிக புள்ளிகள் பெறுவதற்காக மாணவர்கள்
அதனை ஒப்புவிப்பார்கள்.
அனால் விக்கிபீடியாவின் மூலம் அவர்களைப்பற்றி
எமக்குத்தெரியாத பல விசயங்களை அறிந்து
கொள்ளலாம்.எமது
கிராமத்திலுள்ள உள்ள பிரபலமானவர்கள் பற்றிய விபரங்களை நாம் விக்கிபீடியாவில்
பதிவேற்றலாம்.அதன் மூலம் உலகத்தின் எங்கோ ஒரு
மூலயில் இருக்கும் ஒருவர் அதனைப்படிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.
இணையதளம்,வலைப்பூ,ஃபேஸ் புக் போன்றவற்றில் தமது ஆக்கங்களைப்பதிவேற்றும்
நம்மவர்களில் பலர் விக்கிபீடியாவுக்குப்
பங்களிப்புச்செய்வது மிகவும்
குறைவு. இந்த நிலை மாறவேண்டும் விக்கிபீடியாவைப்பார்ப்பவர்களின்
தொகை உலக அளவில் அதிகரித்துள்ளது.தமிழின்
தொன்மைகளை உலகின்
மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்செல்லும் விக்கிபீடியாவின் பணி மகத்தானது.
சூரன்.ஏ,ரவிவர்மா
காற்றுவெளி
5 comments:
பயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
விக்கிபீடியா பற்றி விவரமாக ஒரு நன்றிப் பெருக்குடன் எழுதி இருக்கிறீர்கள்.
// இணையதளம், வலைப்பூ, ஃபேஸ் புக் போன்றவற்றில் தமது
ஆக்கங்களைப் பதிவேற்றும் நம்மவர்களில் பலர் விக்கிபீடியாவுக்குப் பங்களிப்புச் செய்வது மிகவும் குறைவு. இந்த நிலை மாற வேண்டும் //
நீங்கள் சொல்லுவது போல இந்த நிலை மாற வேண்டும். தமிழர்களின் பங்களிப்பு வரவேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Ramani S said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
தி.தமிழ் இளங்கோ said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment