Monday, November 11, 2013

உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவாரா ரொனால்டோ?

Ukraine

 
Portugal
பிரேஸிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றும் நாடுகளைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவ வதற்காக ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் வெற்றிபெற்ற ஒன்பது நாடுகள் தகுதிபெற்றுள்ளன. மேலும் நான்கு நாடுகளைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகள் இந்த வாரம் நடை பெறவுள்ளன.
பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் முதன்முதலாக பொஸ்னியா தகுதிபெற்றுள்ளதுஐஸ்லாண்ட்-_ குரோஷியா, போர்த்துக்கல்- சுவீடன், உக்ரெய்ன் - பிரான்ஸ், கிரீஸ்- ரொமானியா ஆகியவற்றில் வெற்றி பெறும் நான்கு நாடுகள் உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறும்.
"' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஐஸ்லாந்தும், "' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஷியாவும் தலா 10 போட்டிகளில் விளையாடின. குரோஷியா எட்டு போட்டிகளிலும், ஐஸ்லாந்து ஐந்து  போட்டிகளிலும் வெற்றிபெற்றன. இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளிலும்தலா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ளன. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் பலமான அணிகளை வீழ்த்தி அரை இறுதிவரை முன்னேறிய குரோ´யா மூன்றாம் இடத்தைப் பெற்றது. நான்கு தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய ஐஸ்லாந்து பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.

"எவ்' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற போர்த் துக்கலும், "சி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுவீடனும் தலா 10 போட்டிகளில் வினையாடி ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. போர்த்துக்கல் மூன்று போட்டிகளையும் சுவீடன் ஆறு போட்டிகளையும் சமப் படுத்தியுள்ளன. போர்த்துக்கல் ஒரு போட்டியிலும் சுவீடன் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. போர்த்துக்கல் 27 புள்ளிகளையும், சுவீடன் 20 புள்ளி களையும் பெற்றுள்ளன.

போர்த்துக்கல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானி ரொனால்டோவின் மீது அளவற்ற மதிப்பு வைத்திருக்கும் ரசிகர்கள் போர்த்துக்கல் வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றனர். 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறிய போர்த்துக்கல், ஸ்பெயினிடம் தோல்விய டைந்து வெளியேறியது. 1966ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் போர்த்துக்கல் மூன்றாம் இடம்பெற்றது. 1958ஆம் ஆண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறிய சுவீடன் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.
"எச்' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற உக்ரைன் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி யடைந்தது. "' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிரான்ஸ் எட்டுப் போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டி களில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து 17 புள்ளிகளைப் பெற்றது.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் முதல் சுற்றுடன் வெளியேறி யது. 1998ஆம் ஆண்டு உலக் கிண்ணத்தை வென்ற பின்னர் பிரான்ஸ் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் உக்ரைன் கால் இறுதிவரை முன்னேறியது.
"ஜி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரீஸும், "டி' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரொமானியாவும் தலா 10 போட்டிகளில் விளையாடின. எட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற கிரீஸ் ஒரு போட்டியை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற கிரீஸ் ஒரு போட்டியைச் சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. கிரீஸ் 25 புள்ளிகளையும், ரொமானியா 19 புள்ளிகளை யும் பெற்றுள்ளன
1994ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரொமானியா கால் இறுதிவரை முன்னேறி யது. இரண்டு தடவைகள் மாத்திரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது கிரீஸ். குரோ´யா, போர்த்துக்கல், உக்ரைன், கிரீஸ் ஆகியவை வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுக்கான தகுதிகாண் போட்டிகளும் அடுத்தவாரம் ஆரம்பமாகும்உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடும் நாடுகளின் பெயர்ப்பட்டியல் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். போட்டியை நடத்தும் பிரேஸில் நேரடி யாகத் தகுதிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா, ஜப்பான், ஈரான், வடகொரியா, கொஸ்ரரிகா, அமெரிக்கா, யஹாண்டூரஸ், ஆர்ஜென் டீனா, சிலி, ஈக்குவாடா, கொலம்பியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதிபெற்றுள்ளன. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கடைசிவரை காத்திருந்து இடம்பிடித்த ஆர்ஜென்டீனா இம்முறை முதல் அணியாக உள்ளே நுழைந்துவிட்டது.
தென் அமெரிக்காவிலிருந்து முதல் அணியாக உள்ளே நுழைந்த ஆர்ஜென்டீனா கடைசிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி யால் ஆர்ஜென்டீனாவுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. பிளே ஓவ் போட்டியில் விளையாடுவதற்காகக் காத்திருக் கும் உருகுவே ஜோர்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் விளை யாடும் தகுதியைப் பெறும்.
ரமணி சுடர் ஒளி 10/11/13

5 comments:

தருமி said...

//பிரேஸிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி//

நினைத்தாலே இனிக்கிறது.

உங்களைப் போன்ற கால்பந்து விளையாட்டை ரசிக்கும் ஒருவர் பதிவுலகில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நிறைய எதிர்பார்க்கலாம் - உங்களிடமிருந்து.
நன்றி

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உலகக்கிண்ண உதை பந்தாட்டம் 201ஒ பற்றியும் விரிவாக எழுதி உள்ளேன். படுத்துப்பாருங்கள்.
அன்புடன்
வர்மா

வர்மா said...

தருமி said...இந்திய நிலை என்ன?

ஐக்கிய அரபுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3_0 கோல் அடிப்படையில் தோல்வியடைந்தது. இந்தியாவில் நடந்த இரண்டாவதி போட்டியை 2 2 கோல் அடிப்படையில் சமப்படுத்தியது. ஐக்கிய அரபு 496 புள்ளிகளுடன் 11 இடங்கள் முன்னேறி 71 ஆவதி இடத்தில் உள்ளது.இந்தியா 151 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 154 ஆவதி இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் மூன்று மஞ்சள் அட்டைகளையும் இரண்டு சிவப்பு அட்டைகளையும் பெற்றது.

தருமி said...

so thorough. great. so hard to find some one for football!!

awaiting more on FIFA 2014

வர்மா said...

கண்டிப்பாக தொடர்ந்து தருவேன்.