இந்தியாவில்
சினிமா அறிமுகமான நூற்றாண்டு விழா என்ற பெயரில்
தமிழகத்தில் நடந்த விழாவில் தமிழ்
சினிமா அவமானப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின்
புகழ் ஓங்கி ஒலித்தது. பத்துக்கோடி
ரூபா செலவில் தமிழக அரசால்
நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசியலை
முன்னிறுத்தி கலைஞர்கள் புறக்கணிக்கப்படார்கள்.சினிமா நூற்றாண்டு விழா
தமிழகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நாளில்
இருந்து கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பிதழ்
அனுப்பப்படுமா இல்லையா
என்ற
பட்டிமன்றம் களைகட்டியது.
கருணாநிதிக்கு
அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற நெருக்கடி அதிகரித்ததனால்
நிலைமையைச் சமாளிப்பதற்காக கடைசி நேரத்தில் ஒப்புக்காக
அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழுடன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று அழைப்பிதழைப்பெற்று தனது மானத்தைக் காப்பாற்றிக்கொண்டார்
கலைஞர் கருணாநிதி.
தமிழக அரசியலும் சினிமாவும்
ஒன்றையொன்று விட்டுப்பிரியாது பின்னிப்பிணைந்துள்ளன.பேரறிஞர்
அண்ணாவின் தலைமையிலான திராவிட
முன்னேற்றக் கழகம் நாடகம், சினிமா
ஆகியவற்றின் மூலம் தனது
கொள்கைகளை வெளிப்படுத்தி
ஆட்சிபீடம் ஏறியது.அறிஞர் அண்ணாவின்
பின் கலைஞர்
கருணாநிதி முதல்வரானார். கருணாநிதியுடனான மனக்கசப்பினால்
கட்சியைவிட்டு
வெளியேறிய எம்.ஜி.ஆர் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து ஆட்சியைக்கைப்பற்றினார். எம்.ஜி.ஆர்
மறைந்ததும் அவரது சினிமா ஜோடியான
ஜெயலலிதா அரசியலில் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.எம்.ஜி.ஆரின்
மனைவி ஜானகியையும் மூத்த அரசியல் தலைவர்களையும் புறம் தள்ளிய
ரசிகர்கள் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தினர்.
தமிழக அரசியலைப் போன்றே தமிழக சினிமாக்
கலைஞர்களும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராகும்
போது அரசியலில் தம்மை வெளிப்படுத்தாத கலைஞர்கள்
விழா எடுத்து மகிழ்வார்கள்.ஜெயலலிதா
முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் சார்பில் விழா எடுக்க முயற்சி
செய்யப்பட்டது. அதற்கான அனுமதியை ஜெயலலிதா
வழங்கவில்லை. சினிமா நூற்றாண்டுவிழா தமிழகத்தில்
நடைபெறும் என அரசு அறிவித்தது.
அந்தப் பொன்னான நாளை எதிபார்த்துக்
காத்திருந்த கலைஞர்களின் மனதை தமிழக அரசு புண்ணாகிவிட்டது.
பாடல்கள்
தான் தமிழ் சினிமா
வின் உயிர்நாடி.பாடல்கள் இல்லாது திரைப்படம் தயாரிக்க
முடியாது.பாடத்தெரியாதவர்களினால் நடிக்க முடியாது என
எழுதப்படாத விதி இருந்த காலத்தில்
தனது கனல் தெறிக்கும் வசனத்தால்
தமிழ் சினிமாவின் தலைவிதியை மாற்றி
அமைத்தவர் கலைஞர் கருணாநிதி.பராசக்தி,அரசிளங்குமரி,பூம்புகார் போன்ற
படங்களின் மூலம்
தமிழ்சினிமா புதிய
அத்தியாயத்தினுள் நுழைந்தது.பாடல்கள் மட்டுமே இசைத்தட்டாக
வெளிவந்த காலத்திலே
கலைஞரின்
திரைப்படவசனங்களும்
ஒலித்தட்டாக வெளியாகி பரபரப்பாக விற்பனையாகின.கருணாநிதி இல்லாத
சினிமா நூற்றாண்டுவிழா மணமகன் இல்லாத
திருமண வைபவம் போல இருந்தது. இவரது கதை
வசனத்தில் உருவான திரைப்படங்கள்
எவையும் நூற்றாண்டு விழாவில் திரையிடப்படவில்லை.அறிஞர்
அண்ணாவின் படங்களும் புறக்கணிக்கப்பட்டன.
தமிழ் சினிமாவில்
இன்று முன்னணியில் இருக்கும்
கமல்,ரஜினி,விஜய்
அகிய மூவரும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர்.முன் வரிசையில் அமரவேண்டிய
சினிமாக் கலைஞர்கள் பின்வரிசைக்குத்
தள்ளப்பட்டனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் தலைவர்கள்
முன் வரிசையில் இருந்து
வேடிக்கை பார்த்தனர்.ஒஸ்கார் விருதின் மூலம் இந்திய சினிமாவை
உலக அரங்கில்
உயர்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்,ராசூல் ஆகியோருக்கு
அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. விருது
பெறும் தகுதி இவர்களுக்கு இல்லை
என தமிழக
அரசு கருதியதால் விருது பெறுபவர்களின்பெயர் பட்டியலில் இவர்களது பெயர் சேர்க்கப்படவில்லை.எம்.எஸ்.விஸ்வநாதன்,பாலுமகேந்திரா,பாரதிராஜா,கவுண்டமணி,வடிவேல்,நாசர்,சுசீலா,ஜானகி , ஸ்ரீ தேவி போன்ற
பலருக்கு
விருது வழங்கப்படவில்லை.
நடிகர் சங்கத்தின் முன்னாள்
தலைவரும்
எதிர்க்கட்சித்தலைவருமான
விஜயகாந்த்,வைரமுத்து,விஜயகுமார்,பிலிம்நியூஸ்ஆனந்தன்ஆகியோரைத்தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த
அன்புவைத்திருந்தசாண்டோசின்னப்பாதேவர்,என்.எஸ்.கிருஷ்ணன்,பி.யு.சின்னப்பா,தியாகராஜபாகவதர்,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,கல்கி,முக்தாசீனிவாசன்,ஆகியோரும் கால ஓட்டத்தில்
மறக்கடிக்கப்பட்டனர்.
சன்,கலைஞர் தொலைக்காட்சிகளில்
பங்குபற்றும்
கலைஞர்கள் அனைவரும்
புறக்கணிக்கப்பட்டனர்.மீனா,சிம்ரன்,விவேக் ஆகியோர்
சிறந்த கலைஞர்களாகக்கணிக்கப்பட்டு விருது
வழங்கி
கெளரவிக்கப்பட்டனர்.தமிழக அரசின்
இந்த எதேச்சாதிகார போக்குக்கு எதிராக எடிட்டர்
லெனின் தனது
டுவிட்டரில் பதிவு
செய்துள்ளார்.மற்றைய அனைவரும் மனம் குமுறினார்களேதவிர
கொதித்து எழவில்லை.அநியாயத்துக்கு எதிராக வீராவேசமாகப்போராடும் கதாநாயகர்கள் அனைவரும் கைகட்டி மெளனமாகத்
தலை குனிந்து
நின்றார்கள்.
No comments:
Post a Comment