Friday, July 11, 2014

இறுதிப் போட்டியில் மோதும் அர்ஜென்டினா, ஜெர்மனி

24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இறுதிப் போட்டியில் மோதும் அர்ஜென்டினா, ஜெர்மனி

 ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு பிடித்த பிரேசில் அணி தோல்வி அடைந்தது. வரும் 13ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் கால்பந்து இறுதிப் போட்டி பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


  இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஜெர்மனி அணி ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

 
எஸ்டடியோ டோ மரகானா ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது. 1950ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் மரகானாவில் இறுதிப் போட்டி நடக்கிறது. அந்த ஸ்டேடியத்தில் 76 ஆயிரத்து 935 பேர் அமரலாம்.

 இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 210 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ. 150 கோடியும் பரிசாக வழங்கப்படும்.


 

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதுவது இது மூன்றாவது முறை ஆகும். 1986ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை அர்ஜென்டினா தோற்கடித்தது. 1990ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை ஜெர்மனி தோற்கடித்தது.



1954, 1974 மற்றும் 1990 என ஜெர்மனி மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978 மற்றும் 1986 என இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது அர்ஜென்டினா.
 
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது இது அர்ஜென்டினாவுக்கு 5வது முறை, ஜெர்மனிக்கு 8வது முறை ஆகும்.
   
இந்த போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றால் பிரேசில்(5 - 1958, 1962, 1970, 1994, 2002), இத்தாலியை(4 - 1934 as hosts, 1938, 1982, 2006) அடுத்து அதிக முறை உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெறும்.
 24
ஆண்டுகள் கழித்து அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

  


வெளிநாட்டு பயிற்சியாளரை கொண்ட எந்த ஒரு அணியும் இதுவரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. அர்ஜென்டினா(சபெல்லா) மற்றும் ஜெர்மனி(ஜோக்கிம்) அணிகளின் பயிற்சியாளர்கள் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
நன்றி தட்ஸ் தமிழ்

No comments: