சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா
குற்றவாளிஎன நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கிய
பின்னர் கருணாநிதிக்கு
எப்போஎனப் பலர்
கேள்வி எழுப்பி
உள்ளனர். ஜெயலலிதாவுக்குத்தண்டனை
கிடைத்ததனால் கருணாநிதியும் தண்டனை அனுபவிக்க வேண்டும்
என்பது அவர்களின்
விருப்பம்.
இரண்டு பிரதான திராவிடக்கட்சிகளும்
யுத்தத்துக்குத்தயாரான அண்டை நாடுகளைப்போன்றே
எந்த நேரமும்
தயார் நிலையில்
உள்ளன. ஜெயலலிதாவுக்கு
எதிரான நீதிமனறத்தீர்ப்பு
அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தைக் கொதிப்படைய வைத்துள்ளது.தாம்
வீழ்ந்து விட்டோம்
என அவர்கள்
நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாது
அமைதியாக இருக்கிறது.
இலங்கைத்
தமிழர்களும் கருணாநிதி அணி
ஜெயலலிதா அணி
எனப்பிரிந்துள்ளனர். கடந்த பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்
கொடுத்த கருணாநிதியின் மீது
பலர் கடுப்பாக உள்ளனர். கருணாநிதிக்குத்
தண்டனை கிடைக்க
வேண்டும் என
அவர்கள் விரும்புகின்றனர். ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைக்கும் என
அவரது அபிமானிகள் எதிர்பார்க்கவில்லை.
கருணாநிதிக்கு எதிராக வலுவான
வழக்கு எதுவும்
இல்லை. ஜெயலலிதா
முதல்வரானபின்னர் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்குற்றம்சாட்டி
நள்ளிரவில் கருணாநிதிகைது செய்யப்பட்டார்.
பிணை பெறமிடுயாதவகையில்
வெள்ளிக்கிழமை நள்ளிரவு கருணாநிதி கதறக்
கதற இழுத்துச்செல்லப்பட்டார்.
அப்போது ஸ்டாலினையும்
பொலிஸ் தேடியது
வெளியூர் சென்ற
ஸ்டாலின் மறுநாள்
சரணடைந்தார். இன்றுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.
தமிழக முதல்வராக 2011 ஆம்
ஆண்டு ஜெயலலிதா
முதல்வரானதும் அழகிரி கைது செய்யப்படுவார் என்ற
எதிப்பார்ப்பு எழுந்தது. அழகிரியை நெருங்குவதற்குரிய
ஆதாரங்கள் வலுவானதாக
இல்லை. சண்
தொலைக்காட்சிக்கு பணம் வழங்கிய முறைகேட்டில் கருணாநிதியின்
மனைவி விசாரணையை
எதிர்நோக்கி உள்ளார். ஸ்பெக்ரம் வழங்கியதில் அரசுக்கு
இழப்பு என்ற
குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு பிணையில்
விடுதலையாகி உள்ளார். ஸ்பெக்ரம் விநியோகம் செய்ததில் அரசுக்கு இழப்பு. இழப்பு ஏன்
ஏற்பட்டது. இலஞ்சம் கைமாறியதா
என்றகோணத்திலே விசாரணை நடைபெறுகிறது.
ஸ்பெக்ரம்
விவகாரத்தில் முன்னாள்பிரதமர் மன்மோகன்
சிங்குக்கு எல்லாம் தெரியும் என ஆர்.
ராசா கூறியுள்ளார்.
ஏர்செல், மேக்சிம்,பி.எஸ்.என்.எல் விவகாரங்களில்
மாறன்
சகோதரர்கள் மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய்யும்
நிலை உள்ளது.ஏர்செல்
வாங்கியதில்
முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி சம்பந்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால்
இந்த வழக்குகளில் பாரதீய ஜனதாக் கட்சி அதிக ஆர்வம் காட்டும்
நிலை உள்ளது
எம்.ஜி.ஆரும்
கருணாநிதியும்
இலங்கைத்தமிழர்களுக்காக
போட்டிபோட்டு குரல் எழுப்பினார்கள்.தெரிந்தும் தெரியாமலும் பலவகையிலும் உதவிசெய்தார்கள். கருணாநிதி ஆட்சியை
இழப்பதற்கு இலங்கை
விவகாரத்தில் அவர் கடைப்பிடித்த கொள்கையும்
ஒரு காரணம். காங்கிரஸ் அரசைக்காப்பாற்றுவதற்காக அவர் இலங்கைத்தமிழர்களக் கைவிட்டுவிட்டார்.
இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் அதிக
அக்கறை
காட்டாத ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில்
இலங்கைத்தமிழர்களுக்கு எதிராகச்செயற்பட்டவர்.. அண்மையில் இலங்கை விவகாரத்தைக்
கையில் எடுத்தார்.
18 வருடங்களாக
இழுத்தடித்த
வழக்கின் தீர்ப்பை
தாமதப்படுத்துவதற்காக
தனக்கு பாதுகாப்பு இல்லை புலிகளினால்
தனக்கு ஆபத்து
எனக்கூறி
தீர்ப்பை வேறு
மாநிலத்துக்கு
மாற்றும் முயற்சி நடைபெற்றது.
ஜெயலலிதாவின் இன்றைய நிலைக்கு தெரிந்தோதெரியாமலோ ராகுலும் ஒரு காரணம். பதவியில் இருக்கும் அரசியல்வாதி ஓருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக பதவி இழக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய பல அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். ராகுலின் கடுமையான எதிர்ப்பினால் அத்திருத்தச்சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. குற்றவளியான அரசியல்வாதி பிணையில் வெளிவந்து பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்பது முன்னைய சட்டம். இப்போது பிணையில் வெளிவந்தாலும் மேன் முறையீட்டின் தீர்ப்பில் நிரபாராதி என்றால்தான் பதவி ஏற்க முடியும்.
No comments:
Post a Comment