வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்
சேர்த்த வழக்கில்
ஜெயலலிதா குற்றவாளி
என பெங்களூர்
சிறப்பு நீதிமன்றம்
தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால்
தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக
அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர்.
நீதிக்கு எதிராகப்
போராட்டம் நடத்த
வேண்டாம் என்று
அறிக்கை விட்டால்
ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
மத்திய மாநில அரசியல்
தலைவர்கள் நீதிமன்றத்தால்
தண்டிக்கப்பட்டபோது இது போன்ற
தொடர் போராட்டங்கள்
நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூலம் அவர்கள் பிணையில்
விடுதலை
செய்யப்பட்டார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான்ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக
பிணையில் விடுதலைசெய்யவேண்டும் என்று
அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்தினர்
குமுறுகிறார்கள்.கருணாநிதியின் அரசியல் பழிவாங்கல்.
காவிரிப்பிரச்சினையில் குட்டு வைத்த
ஜெயலலிதாவை சந்தர்ப்பம் பார்த்து
கர்நாடகம் வஞ்சித்துவிட்டது.பாரதீய ஜனதாக்கட்சியில் அரசியல் சித்து விளையாட்டு
என்ற ரீதியில்
அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகதினர் குற்றம்
சாட்டுகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு
எதிராக 13 வழக்குகள்
தாக்கல்
செய்யப்பட்டன.கலர் ரீவி
வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது நடந்த வன்செயலில் மதர்மபுரியில்
மூன்று மாணவிகள் பஸ்ஸுடன் சேர்த்து
எரிக்கப்பட்டனர்.டான்சி
நிலபேர
வழக்கில் எச்சரிக்கப்பட்டார். இரண்டு வழக்குகள் நிலுவையில்
உள்ளன.
ஏனைய வழக்குகளில் நிரபராதிஎன
விடுதலை
செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு
வழக்கில் இருந்து
தப்ப
முடியாது என்பதை
ஜெயலலிதா அறிந்திருந்தார்.
அதனால்தான்
இந்த வழக்கை இழுத்தடித்தார்.
வருமானத்துக்கு
அதிகமான
பணம் எப்படி
வந்தது என்பதைஜெயலலிதா நிரூபிக்கவில்லை. சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய
மூவருக்கும்
எந்தவிதமான வருமானமும்
இல்லை. பல நிறுவனங்கள ஆரம்பிப்பதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை
அவர்களால் நிரூபிக்க
முடியவில்லை.
ஜெயலலிதாவின் வயது, உடல்நிலை,
பதவி,அந்தஸ்து ஆகியவற்றை காரணம் காட்டி
பிணைமனு
கோரப்பட்டது.
மாநில முதல்வர் இப்படி
மோசடிசெய்தால்
அவரின்
கீழே உள்ளவர்கள் செய்யமாட்டார்களா
என சந்தேகம்
எழுப்பிய நீதிபதி பிணை
வழங்க மறுத்துவிட்டார். அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தில்
ஜெயலலிதா மட்டும் தான்
இப்படிச்செய்யலாம் மற்றவர்கள் நினைத்துக்கூடப்பார்க்க
முடியாது
என்பது நீதிபதிக்குத்தெரியாது.
தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா குற்றவாளிக்கூண்டில்
நின்றது முதலமைச்சர்
பதவிக்கு அவமானம்.
தமிழகத்துக்கு
தலைக்குனிவு.
தொண்டர்கள் என்ற
பெயரில்
தமிழகத்திலிருந்து
சென்றவர்கள்.நீதியை அவமதித்து
விட்டனர். கர்நாடக
பொலிஸாருடன்
தமிழக அமைச்சர்களும்
மல்லுக்கட்டினர்.
தமிழகத்துக்கும்
கர்நாடகத்துக்கும்
இடையேயான பிரச்சினையின் உச்சக்கட்டமாக ஜெயலலிதாவுக்கு
வழங்கப்பட்ட தீர்ப்பை
அண்ணா திராவிட
முன்னேற்றக்
கழகத்தினர் பார்க்கின்றனர்.
அண்ணா திராவிட
முன்னேற்றக்
கழகத்தின்
பெயரிலே
அண்ணா இருக்கிறார்.தேர்தல்
நெருங்கும் போது எம்.ஜி. ஆர்
முன்னிலைப்படுத்தப்படுவார்.வன் செயல்களின்
மெளன சாட்சியாக
கழகக் கொடியிலே அண்ணா
ஒற்றை விரலைக்காட்டியபடி இருக்கிறார்.
அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகம் என்றால்
ஜெயலலிதாதான் என்பதே இன்றைய
நிலை.அவரின் கண்ணசைவிலே
தான் எல்லாம்
நடைபெறுகின்றன. தனக்குப்பின் யார் தலைவர் என்பதை பல தலைவர்கள் சூசகமாகத் தெரிவிப்பார்கள்.ஆனால்
ஜெயலலிதா அப்படி யாரையும்
வழி
நடத்தவில்லை.
அதனால்
அடுத்து என்ன
செய்வது
எனத்தெரியாமல் தடுமாறுகிறது
அண்ணா திராவிட
முன்னேற்றக்
கழகம்.
ஜெயலலிதாவைத்
திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே
பல
சம்பவங்கள் நடைபெறுகின்றன.ஜெயலலிதாவுக்கு எதிரான
தீர்ப்பு வெளியானதும் சிறைத்தண்டனை அதிகம்
அபராதத்தொகை மிகமிக அதிகம் என்ற
மனநிலை பலரிடம் காணப்பட்டது. ஜெயலலிதாவுக்குச்
சார்பாக இருந்த
மக்களின் மனநிலையை
தமக்குச்சாதமாகப்பயன்படுத்த அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தவறிவிட்டனர். ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக்கூடிய
ஆழுமை மிக்க
ஒருவர்
அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து
என்ன செய்வதெனத்தெரியாது
அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும்
எதைச்செய்யக்கூடாது என்ற விபரம்
இல்லாமல் அண்ணா
திராவிட முன்னேற்றக்
கழகத்தினர் தடுமாறுகின்றனர்.
தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம்
செய்த ஓ.பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது.
முதல்வர் பதவிக்கு
இழுக்கு.அமைச்சர்களும்
முக்கிய பிரமுகர்களும்
சிறை வாசலில்
காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை
வெளிப்படுத்துகின்றனர்.
மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி
ரூபா ஊழல்
செய்த லல்லுவுக்கு
பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக
66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு
பிணை கொடுக்கலாம்
தானே என
வாதிடுகிறார்கள். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ்
சவுதாலாவின்
பிணை இரத்துச்செய்யப்பட்டது ஜெயலலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரிய
நியமனத்தில்முறைகேடு
செய்த குற்றத்துக்காக
அவருக்கு 2003 ஆம் ஆண்டு
10 வருட
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல் நலக்குறைபாட்டை
காரணம் காட்டி
பிணை கோரினார்.
நீதிமன்றம் அவருக்கு பிணை
வழங்கியது.
தேர்தல்
பிரசாரக்கூட்டத்தில்
அவர்
கலந்து கொண்டதால் பிணை
இரத்துச்செய்யப்பட்டு
சரணடையும்
படி
உத்தரவிடப்பட்டது.
ஜெயலலிதா பிணையில்
வெளிவந்தாலும்
பொது நிகழ்ச்சிகளிலோ கட்சிக் கூட்டங்களிலோ
கலந்து கொள்ள
முடியாது.
ஜெயலலிதாவுக்கு பிணை
வழங்க ஆட்சேபனை இல்லை
என்று அரசதரப்பு வழக்கறிஞர் கூறியும்
நீதிபதி
பிணை வழங்க மறுத்துவிட்டார்.
இது ஜெயலலிதாவுக்கு
பின்னடைவு.
நீதிபதிக்கு
எதிராகவும்
நீதிமன்றத்துக்கு எதிராகவும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தினர்
நடத்தும் போராட்டங்களை நீதித்துறை
அவதானித்து
வருகிறது. தமிழகத்தில் நடைபெறும்
போராட்டங்களால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால்
அன்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்தின் எதிர்காலம் பாதிப்படையும் நிலை
உள்ளது.இப்போதைய ஆட்சியை
தக்கவைக்க வேண்டிய கடமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னால்
உள்ளது.
இல்லையேல் தலை தூக்க
முடியாத அதல பாதாளத்தில் கட்சி விழுந்து
விடும்.
No comments:
Post a Comment