Sunday, December 6, 2015

கூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. தேர்தலை நடத்துவதற்கு  அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால்,தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.தமிழக ஆளும் கட்சியின் தப்புகள்,தவறுகள், அராஜகங்கள், அலட்சியங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.சிலகட்சிகள் கூட்டணி  பற்றி அறிவித்துவிட்டன. சிலகட்சிகள இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.சில தலைவர்கள் பிடிகொடாமல் நழுவுகின்றனர்.
 தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை சில நிறுவனங்களும் சஞ்சிகைகளும் வெளிப்படுத்துகின்றன.ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளியாகின்றன. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில்  ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கூட்டனிக்கு எந்தக்கட்சியும் வராததனால் வெறுத்துப் போய் இருக்கிறார் கருணாநிதி.வைகோ,திருமாவளவன்,இடதுசாரிகள் ஒன்றாக இருக்கின்றனர். விஜயகாந்த் மதில்மேல் பூனையாக பதுங்குகிறார். ராமதாஸ் மகனை முதல்வர்  வேட்பாளராக்கி தனிவழி போகிறார்.
அரசியல் தலைவர்கள் தாமும் குழம்பி தொண்டர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் மிகத் தெளிவாக  இருப்பதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறியமுடிகிறது.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாட்டில் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய செயற்பாட்டை ஆகா ஓகோ  என்று  அதிகம் புகழவில்லை. அவருடைய செயற்பாடு சுமா ரெண்ரீ அதிகமானூர்  கூறியுள்ளனர்.   மக்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகின்றது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில்  ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.  ஜெயலலிதா இரண்டாவது இடத்திலும் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.  திராவிட முன்னேற்றக்  கழகத்திலும் தமிழகத்திலும் ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருணாநிதியின் விசுவாசிகள் விரும்பவில்லை. ஸ்டாலினின்  ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.


தமிழக சட்டசபைத் தேர்தலில்  எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு மக்கள் அளித்த பதில் அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதிகமாநூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 26.84 சதவிகிதமானோரும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  24.03 சதவிகிதமானோரும்  வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.   2.81 சதவிகித  வித்தியாசமே உள்ளது. வலுவான கூட்டணி சேர்ந்தால்   திராவிட முன்னேரரக் கழகம் வெற்றி பெற்றுவிடும். அதனால்தான் வலுவான  கூட்டணிக்காக கருணாநிதி காத்திருக்கிறார்.
விஜயக்காந்த் வழமைபூல் மூன்றாவது இடத்திலிருக்கிறார். அவருக்கு 7.98 சதவிகிதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  முதல்வரைத் தெரிவு செய்யும் சக்தி அவரிடம் உள்ளது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார். ஆகையால் அவரின் வரவை கருணாநிதி எதிர் பார்க்கிறார். விஜயகாந்தின் மனைவி பிராமளதா  கருணாநிதியையும் அவரது கட்சியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார். ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் விஜயகாந்த சாய்வது சந்தேகம்.
 பாரதீய ஜனதாக் கட்சி நான்காவது  இடத்திலும்  வைகோ தலைமையிலான  கூட்டணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பாரதீய ஜனதாவுடன் இணைய விஜயகாந்த் விரும்புகிறார். மோடிக்கு எதிரான் அலை எழுந்துள்ளதால் விஜயகாந்தின் எண்ணம் பலிக்கப்போவதில்லை.வைகோ தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என இன்னமும் முடிவு செய்யவில்லை. இதனால் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும். முதலமைச்சர் இல்லாத கட்சிக்கு மக்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள்.  அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்,   திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்  மாற்றீடான கட்சி என்ற முத்திரையுடன் புறப்பட்ட வைகோவின் கூட்டணிமமீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறாவது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளன. மக்கள் மத்தியில் செல்வாக்கை  இழந்த பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி இன்றி தேர்தலை  சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னறி தோல்வி உறுதி என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணரவில்லை.  காங்கிரஸு டன் கூட்டணி  சேர  எந்தக்கட்சியும் முன்வரவில்லை
Add caption
 மோடியையும் ஜெயலலிதாவையும் தேர்தலில் வீழ்த்த வடமாநிலத் தலைவர்கள் வ வியூகம் அமைக்க உள்ளனர். அவர்களின் வியூகத்தினுள் காங்கிரஸ் கட்சியும் உள்ளடக்கப்பட்டால் அதற்கு விமோசனம் கிடைக்கும்.தமிழகத்தின் பலமான கட்சியான  திராவிட முன்னேற்றக்  கழகத்தை வடமாநிலத் தலைவர்கள் பலப்படுத்துவார்கள்  அப்போது காங்கிரஸ் கட்சியும் அதற்குள் உள்ளடக்கப்படலாம். சிலவேளை விஜயகாந்தும் வடமாநிலத் தலைவர்களின் வியூகத்தினால் உள்ளீர்கப்படலாம். இப்படிபட்ட ஒரு சந்தர்ப்பத்தையேர் கருணாநிதி எதிர்பார்கிறார்.

21.9 சதவீதமானோர்  ஏனையவர்களுக்கு வாக்களிக்கபோவதாகத்  தெரிவித்துள்ளனர். இவர்கள் எந்தக்  கட்சியையும் சேராதவர்கள். தேர்தலன்றுதான் இவர்களில் பலர் முடிவு செய்வார்கள். அதிகமானோர்  அரசுக்கு எதிரான முடிவையே  எடுப்பார்கள். ஐந்து வருடங்கள் அரசாங்கத்தின் நன்மை தீமைகளை அவதானித்து வாக்களிப்பவர்கள் அந்த ஆட்சியை அகற்றவே விரும்புவார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை விட இவர்களின் வாக்கு வங்கியே அதிக பலமானது
இவை அனைத்தும் தமிழகத்தை சூழ்ந்த வெள்ளத்துக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளே. வரலாறு காணாத வெள்ளம் தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பி  உள்ளது. நிவாரணப் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை.   மத்திய அரசும் மாநில அரசும்  தமது இருப்பை  வெளிகாட்டுவதற்காக தனித் தனியாக உதவி செய்கின்றன.  ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய  உதவிகள் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் இயல்பு நிலை முற்றாக முடங்கி உள்ளது.  ஹிந்து உட்பட சில பத்திரிகைகள வெளிவரவில்லை. ஜெயா,  பொலிமர் ஆகிய  தொலைக்காட்சிகள் இயங்கவில்லை. விமானநிலையம் முடங்கியது.  பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. வீடுகள், தொழிற்சாலைகள்,வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தமிழ சட்டமன்ற தேர்தலின் பேசு பொருளாக வெள்ள  அனர்த்தம் முதன்மைப் படுத்தப்படும்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா. எதிர்க்கட்சிகள் பலமடையுமா என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
ரமணி
தமிழ்த்தந்தி
6/12/15



No comments: