வெற்றிக்களிப்பில்
இந்திய வீரர்கள்
இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை
ஆகியவற்றுகிடையே கொழும்பில் நடைபெறும் முத்தரப்பு ரி20 கிறிக்கெற் போட்டியில் இந்தியா
முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.
பிறேமதாஸ மைதாந்த்தில்
நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இந்தியா ஆறு விக்கெற்வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய
பங்களாதேஷ் எட்டு விக்கெற்களை இழந்து 136 ஓட்டங்கள்
எடுத்தது. 137 என்ற வெற்ரி இலக்குடன் விளையாடிய
இந்தியா நான்கு விக்கெற்களை இழந்து 140 ஓட்டங்கள்
எடுத்தது.
நாணயச் சுழற்சியில்
வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பைத் தேர்வு செய்தார். தமிம்
இக்பாலும் சவும்யா சர்காரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்
பங்களாதேஷ் வீரர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி
கொடுத்தனர். களத்தடுப்பில் தடுமாறியதால் குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்கார் வெளியேறி இருக்க வேண்டியது. பந்தை அவர் தூக்கியடித்தபோது அதனைப் பிடிக்க வாஷிங்டன் சுந்தரும், மனிஷ் பாண்டேவும் ஓடி வந்தனர். அருகில் வந்ததும், ‘அவர் பிடிப்பார் என்றும் இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து முயற்சிக்காமல் நின்றனர். அதற்குள் பந்து கீழே விழுந்துவிட்டது. ஆனாலும் அடுத்த
ஓவரில் சவும்யா சர்கார் [14 ஓட்டங்கள்] வெளியேற்றினார்..
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பங்களாத்ஷ்
அணியினர், அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியதால் ரன்ரேட் பெரிய அளவில் செல்லவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால் 15 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 18ஓட்டங்களிலும்
ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்டநாயகன் விஜய்
சங்கர்
20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெற் இழப்புக்கு 139 ஓட்டங்கள்
மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் பீல்டிங்கில் 3 கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். விஜய் சங்கரின்
ஓவரில் லிவிங்டன் தாஷ் இரண்டுமுறை தப்பினார். இதனால் ஒரு ஓவரில் இரண்டு விக்கெற்களை
வீழ்த்தும் சந்தர்ப்பத்தை விஜய் சங்கர் தவறவிட்டார்.களத்தடுப்பு சிறப்பாக இருந்திருந்தால்
விஜய் சங்கர் ஐந்து விக்கெற்களை வீழ்த்தி இருப்பார்.. இந்திய தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெற்களையும், விஜய் சங்கர் 2 விக்கெற்களையும்
வீழ்த்தினர்..
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 140 ஓட்டங்கள்எடுத்து 6 விக்கெற் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. ஷிகர் தவான் 55 ஓட்டங்களும் (43 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.. 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
No comments:
Post a Comment