Tuesday, July 14, 2020

கொரோனா தடுப்பு மருந்து நவம்பரில் பரிசோதனை - தாய்லாந்து

  

தாய்லாந்து அரசு கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் மருந்து விலங்குகள் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அதில் குறுப்பிடத்தக்க பலன் தெரியவந்துள்ள நிலையில் அம்மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடங்கப்படும் என்று தாய்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஏழு மாதங்களுங்கும் மேலாக அதன் பரவல் நீடித்து வருகிறது. இதுவரைக்கும் கொரோனா வைரஸுக்கென்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவரமாக இறங்கியுள்ளன.

இந்தச் சூழலில் தாய்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்து விலங்குகளிடையே பரிசோதிக்கப்பட்டபோது எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளது. இந்நிலையில் மனித உடல்களில் செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மனித உடல் பரிசோதனை தொடங்க உள்ளது. அதற்கென முதற்கட்டமாக 10,000 மாருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

No comments: