பிரான்ஸில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உயிரிழந்த சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கலைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்களின் அயராத அர்ப்பணிப்பால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ஆனால்,கொரோனாவுக்கு எதிரான போரில் பல மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு
கலைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்த நினைத்தார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ஒபேரா பாஸ்டைல் கட்டடத்தின் முன்பகுதியில் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்
புகைப்படத்தால் அலங்கரித்தார்.
No comments:
Post a Comment