தமிழக
சட்ட சபை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன்
வெற்றி பெற்றபெற்ற திராவிட முன்னேற்றக்
கழகக் கட்சியின் தலைவர்
ஸ்டாலின் எதிர் வரும் 7 ஆம்
திக ஆளுநர் மாளிகையில் எளிய
முறையில் பதவி ஏற்க உள்ளார்.. திராவிட
முன்னேற்றக் கூட்டணி 159 இடங்கலில்
வெற்றி பெற்றது.
திராவிட முன்னேற்றக்
கழகம் தனித்து
125 இடங்களில் வெற்றி உதய
சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8 பேர் வெற்றி
பெற்றதால் திராவிட முன்னேற்றக்
கழகத்தில் பலம் 133 ஆக அதிகரித்துள்ளது.திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில்
போட்டியிட்ட காங்கிரஸ்
கட்சி 18 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள்
ஆகியன தலா 4 தொகுதிகளிலும், மற்ற
கூட்டணிக்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன..அறுதிப்பெரும்பான்மை
பெற்றதால் திராவிட முன்னேற்றக் கழகத்
தலைவர் ஸ்டாலின்
மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக
பதவி ஏற்க உள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப்பின் நேரு உள் அரங்கில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மூன்றாவது
முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி,
ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல்வராகிறார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த
வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக
தீர்ப்பு வெளியானதால் ஓ. பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக
நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்யப்பட்டது. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் குர்ரவாலி என தீர்ப்பு வெளியானதால் தனக்கு விசுவாசமான எடப்பாடை பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தார் சசிகலா.
No comments:
Post a Comment