தமிழக சட்டசபைத்
தேர்தலில் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் தோல்வியடையடைந்தது. பத்து வருடங்களாக ஆளும் கட்சியாக மிளிர்ந்த
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் இப்போது எதிர்க் கட்சியாக
உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் வெற்றி பெற்றால்
எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சர்
என ஓ. பன்னீர்ச்செல்வம் அறிவித்தார். முதல்வராகும் ஆசை ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இருந்தபோதும் எடப்பாடியை முதல்வராக
அறிவித்தார். தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ண திராவிட
முன்னேற்றக் கழகம் வெற்றி
பெறும் என எடப்பாடி நம்பியபோதும் பன்னீர்ச்செல்வத்துக்கு அந்த நம்பிக்கை
இருக்கவில்லை என்பதனால் முதலமைச்சர்
பதவியை விட்டுக்கொடுத்தார். இப்போது
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தனக்குத் தரவேன்டும் என பன்னீர்ச்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெடுஞ்செழியன், கருணாநிதி, க.அன்பழகன், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் எனப் பல தலைவர்கள் தமிழக சட்டசபைத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதத்தை ஒரு கட்சி பெற்றிருந்தால், அக்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும். தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 உருப்பினர்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்த கட்சியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும்.
அமைச்சருக்கு
நிகரான அந்தஸ்த்துடைய இந்தப் பதவிக்கு சலுகைகள் ஏராளம். அரசு பங்களா, பொலிஸ் பாதுகாப்பு,
வாகன வசதி, பயணப்படி, மருத்துவ வசதிகள் என ஆட்சி முடியும் வரை அரசின் சலுகைகளை அனுபவிக்கலாம்.
மிக முக்கியமான விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மீது விரிவான விவாதம் நடத்தக்
கோரவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் முதல் இருக்கையில் அமரவும் எதிர்கட்சித் தலைவருக்கு
உரிமை உண்டு.
கருணாநிதியும்
ஜெயலலிதாவும் நேரடியாகக் களத்தில் மோதிக்கொண்ட ஏழு தேர்தல்களுக்குப் பிறகு, இருவரும்
இல்லாமல் இரண்டு கழகங்களும் முதன் முதலில்
மோதிக்கொண்ட முதலாவது சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின்
வெற்றி பெற்றுள்ளார்.கருணாநிதியின்
வாரிசு எனபதை கடந்த இரண்டு தேர்தல்களில்
ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.
ஆட்சியை இழந்தாலும் கணிசமான வெற்றியுடன் தனது தலைமையை எடப்பாடி வெளிப்படுத்தியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்ளும் கூட்டணித் தலைவர்களும் தமிழகம் எங்கும் பிரசாரம் செய்தனர். எடப்பாடி மடும்தான் தமிழகம் எங்கும் சூறாவளிப் பிரசாரம் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீரும் அமைச்சர்களும் தமது தொகுதிக்குள் முடங்கிவிட்டனர். அவர்கலுக்கு எதிரான கடுமையான போட்டியாளர்களை திராவிட முன்னேற்றக் கழகம் இறக்கியதால் தொகுதியை விட்டு வெளியேற அவர்களால் முடியவில்லை.
எடப்பாடியின் நடவடிக்கைகளினால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் தோல்வியடைந்தது என பன்னீர்ச்செல்வம் கூறுகிறார்.வன்னியருக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு,
தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை என இந்தத் தேர்தலில் தென்மாவட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம்
என பன்னீர் பட்டியலிடுகிறார்.
தேவையில்லாத விவகாரங்களைக் கிளப்பி, தேர்தல் நேரத்தில் பெரிய நெருக்கடியை உருவாக்கி தோல்விக்கு
எடப்பாடிதான் காரணம் எனபதில்
பன்னீர் உறுதியாக இருக்கிறார்.
எல்லா எதிர்ப்பையும் மீறி தென்மாவட்டத்துல 20 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக பன்னீர்தான் இருந்தார். சசிகலா இடையில் புகுந்ததால் எடப்பாடி பலமிக்கவராகிவிட்டார்.
எதிர்க் கட்சித்
தலைஅர் பதவிக்கு ஆசைப்பட்ட
பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இதுபற்றி
ஆலோசித்தார். இதனால் எடப்பாடி அதிர்ச்சியடைந்துள்ளார். எடப்பாடி அனுப்பிய
தூதுவர்களால் பன்னீரைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
சொந்த மாவட்டமான சேலத்திலும், தன்னை ஆதரிக்கும் கொங்கு
மண்டலத்திலும் அசைக்க முடியாத வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார் எடப்பாடி
பன்னீர்ச் செல்வம். தேர்தலில் வெற்றி பெற்றவர்கலில்
அதிகமானோர் எடப்பாடியின் விசுவாசிகள். ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசிகளான
ஜே.சி.டி.பிரபாகரன், மாஃபா பாண்டியராஜன், மதுரை எஸ்.எஸ்.சரவணன், கம்பம் சையது கான்,
மதுரை கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம்
போன்ற பலர் தோல்வியடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற செல்லூர்
ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் பன்னீருக்கு நிச்சயம் தோள் கொடுக்க
மாட்டார்கள். டெல்டா பகுதியில் ஜெயித்த ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் போன்றவர்களும்
எடப்பாடியை எதிர்க்கும் சூழலில் இப்போது இல்லை.
அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற 65 தொகுதிகளில் சரிபாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்துதான் கிடைத்திருக்கிறது என்பதால் எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. எடப்பாடிக்கு விட்டுக்கொடுத்தால் பன்னீர்ச்செல்வம் கடைசிவரை இரண்டாம் இடத்தில்தான் இருக்கவேண்டும்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு எந்த ஒரு சந்தர்ப்பமும் வழங்காத எடப்பாடி மிகப்பெரிய வெற்றி பெற்றார். அவருக்கு இணக்கமாக இருந்துவரும் தங்கமணியும் எஸ்.பி.வேலுமணியும் அதேபோல வெற்றி பெற்றதால் கட்சியில் அவரின் இடத்தை அசைக்க முடியாமல் செய்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்தின் சார்பில் சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பலர் எடப்பாடியின் ஆதரவாளர்கள். எனவே, இப்போதைக்கு எடப்பாடியின் கை ஓங்கியுள்ளது. பிரச்சினை பெரிதானால் இரட்டைத்தலைமையை எடப்பாடி இல்லாதொழித்து சகல அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொள்வார். அப்போது பன்னீர்ச்செல்வம் பனிந்துபோவாரா அல்லது இன்னொரு தர்ம யுத்தத்துக்குத் தயாராவாரா என்பதை அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment