Monday, July 29, 2024

இந்திய பட்ஜெட்டை புறக்கணிக்கும் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் இந்திய கூட்டணி போராட்டம்!


 மோடியில் அரசாங்கம் சமர்ப்பித்த பட்ஜெட்டை எதிர்த்து இந்திய மாநிலங்கள்  குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன.இந்திய கூட்டணி எம்பிக்கை  எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றன. பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அள்ளிக் கொடுத்த மத்திய அரசு மற்றைய மநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுத்துள்ளது.

பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் ஆதரவிலேதான் மத்திய அரசு  கோலோச்சுகிறது.ஆகையால்தான் இந்தப் பாரபட்சம் என எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றன.

 பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  பொறுப்பேற்றார்.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார். 

இதில் பல்வேறு வரி சலுகைகள், வரி குறைப்பு தொடர்பான பல அறிவிப்புகளை  வெளியிட்டார்.  அதேசமயம் பீகார்,  ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விற்கு நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது.

 பட்ஜெத் தாக்கலின்போது தமிழ் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒரு தடவை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கவும் இல்லை. நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழ்நாட்டிலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் துரோகம் என முதல்வர் மு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் நிதி ஆயோக் மாநாட்டை தான் புறக்கணிப்பதாகவும், அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி முதல்வர்களும் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு இந்திய கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்தனர். நாடாளுமன்ற நுழைவாயிலில் கூடி இந்திய கூட்டணி எம்பிக்கள் முழக்கப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, . கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்களும் கலந்து கொண்டனர். மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த சமாஜ்வாதி, திரிணாமுல், காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட எம்பிகளும் பங்கேற்றுள்ளனர். திமுக எம்பிக்கள் கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 27ஆம் திகதி நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது

இந்தியாவிற்கான பட்ஜெட் கிடையாது. பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். முதல்வர் மு..ஸ்டாலின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என்று அதிரடியாக ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மேற்கு வங்கமும் நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தை ஏராளமான முதல்வர்கள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தக்க வைக்க  வேண்டிய பொறுப்பு திராவிட முன்னெற்றக் கழகத்துக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான அதிருப்தியை  வாக்காக  மாற்ற எதிர்க் கட்சிகள் முயற்சி செய்கின்றன.  விக்ரவாண்டி இடைத்தேர்தல் அதனை முறையடித்தது.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வியூகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துவிட்டது. இதற்காகவே திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ..வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு, இந்த குழுவினர் பரிந்துரை செய்ய போகிறார்கள்.

 இளைஞர் அணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் றெக்கைக் கட்டி பறந்துவரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, சட்டமன்றத்  தேர்தலைவிட, வரப்போகும் தேர்தலில் உதயநிதிக்கான முக்கியத்துவமும், பங்களிப்பும் சற்று கூடுதலாகவே இருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது .

 சிறுபான்மையினரி வாக்குகளால்  பலமடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது  தனை இழந்து தேர்தல்களில் தோல்வியடைகிறது. சிறுபான்மையின வாக்குகளைக் கவர்வதற்காகவே  பாரதீய ஜனதாவின்  கூட்டணியை எடப்பாடி முறித்தார். எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை. சிறுபான்மையினவாக்குகளைக் குறிவைத்து எடப்பாடி காய் நகர்த்துகிறார்.

 சிறுபான்மையினர் வாக்குகள்தான் திமுகவுக்கு தற்போதுவரை பலமாக உள்ளது.  எடப்பாடியின் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு உள்ளது. அதேபோல, லோக்சபா நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பெருவாரியாக பாஜக பெற்றிருப்பதையும் திமுக எச்சரிக்கையுடன் நோக்குகிறது. 

 . கொங்குவில் தற்போது  திமுக  பலமாக இருந்தாலும்கூட, அதிமுக, பாஜகவுக்கான வாக்குகளை அள்ளுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டிய சூழ்நிலையும் திமுகவுக்கு வந்துள்ளது.

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தெரிவித்துள்ளதால், அக்கட்சிக்கான வாய்ப்புகள் என்ன என்பதையும் திமுக ஆராய வேண்டியிருக்கிறது.விஜய்யுடன் அதிமுக கைகோர்க்க நேர்ந்து விட்டாலோ அல்லது விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்துவிட்டாலோ, திமுகவின் வாக்கு வங்கியில் கடுகளவு கூட, சரிவு ஏற்படாதவாறு, அந்த வியூகத்தையும் முறியடிக்க வேண்டிய தேவை திமுகவுக்கு எழுந்துள்ளது.

 திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருவதே, அதன் கூட்டணிதான் என்பதால், தற்போதுள்ள கூட்டணியுடனேயே த்ஜமிழக சட்டசபைத்  தேர்தலிலும் களமிறங்க திமுக முடிவு செய்திருக்கிறதாம். ஆனால், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற காங்கிரஸ் கட்சி விரும்புவதால், அது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வியூகம்: எப்படியும் 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக தனித்து 170-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெல்வது தொடர்பான ஆலோசனைகள்தான் திமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டால், திமுக 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை என்ற வரலாற்றையும் மாற்றியமைக்க ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

ரமணி 

No comments: