பரிஸ்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 338 விளையாட்டு
வீரர்கள் ,369 துணை ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவை கனேடிய ஒலிம்பிக் கமிட்டி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
14
வயதான ஸ்கேட்போர்டர் ஃபே டி ஃபாசியோ ஈபர்ட் கனடாவின் இளைய தடகள வீரர் ஆவார், டிரஸ்ஸேஜ்
ரைடர் ஜில் இர்விங் 61 வயதான மூத்தவராவார்.
2024 பரிஸ் ஒலிம்பிக்கில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெறும். பிரான்சின் தலைநகரம் லண்டனைத் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இரண்டாவது நகரமாக மாறும். ■
No comments:
Post a Comment