Friday, July 11, 2025

பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்?

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர  நண்பனும் இல்லை என்ற புதிய கலாசாரத்தை  வெளிப்படுத்தியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   மறைந்த‌  ஜெயலலிதா.

இந்த வசனத்தை கொஞ்சம் மாற்றிபார்த்தால் பாகிஸ்தானுக்கு கனகச்சிதமாகப் பிரதமரும்   இல்லை என்பதே பாகிஸ்தானின் அரசியல் வரலாறாகும்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்  பிரதமர்  பாகிஸ்தானின் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யவில்லை. இராணுவப் புரட்சியின் மூலம் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

இன்றைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கிடையில் அவரை தூக்கி எறிய சதித் திட்டம் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தானின் 23 ஆவது பிரதமராக கடந்த 2024 ஆம் ஆண்டு  பெப்ரவரியில் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.  இவர் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் சகோதரராவார்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம்  பெற்றது.  சுமார் அரை நூற்றாணடாக அந்த நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரைத் தூக்கி எறிந்து விட்டு இராணுவ ஆட்சியை அரங்கேற்றிய பெருமை ஜெனரல் அயூப் கானையே சாரும்.

1958  ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்த்த அன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் அயூப்கான் 1959 ஆம் ஆண்டுதன்னைப்  ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தார். அவரின் வழிவந்த இராணுவத் தளபதிகளும் அதனையே பின்  பற்றினார்கள். யகியாக்கான், முஹம்மது ஷியாகுல் ஹக், பர்வீஸ் முதாரப் என இப்பட்டியல்நீள்கிறது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி  ஜெனரல் அசிம்  முனீர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை  அகற்றி விட்டு அவர் ஜனாதிபடியாகப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. 

இந்தியாவுடன்  முரண்படுவது, மல்லுக் கட்டுவது எனபனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளின்  பிரதான வேலைத் திட்டமாகும்.


இந்தியாவில் கட்டவிழ்து விடப்படும் பயங்கரவாத்த் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியாவில் லக்நோவில்  சுற்றுலாததலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருபதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் வழக்கம்  போல்கையை விரித்தது.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லியது.

 இந்தியா இதனை ஏற்கவில்லை. ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாத முகாம்களை  விமானத் தாக்குதல் மூலம் அழித்ததாக இந்தியா கூறியது

 இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக  பாகிஸ்தான் மார் தட்டியது. நான்கு நாட்களில் யுத்தம்  முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளின்  முகாம்கள் அழிக்கப்படதையும், தலைவர்கள், தளபதிகள், குடும்பங்கள்  கொல்லப்பட்டதையும் பாகிஸ்தான்  ஒப்புக் கொண்டது.

ஒப்பரேஷன் சிந்தூர் முடிந்த சில நாட்களின்  பின்னர்   ஜெனரல் அசீம் முனீர்  பீல்ட் மார்ஷலாக பதவி  உயர்வு பெற்றார். 

 பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் தனியாக அமெரிக்காவுக்குச் சென்ரு  ட்ரம்பைச் சந்தித்தார். அப்போதே இது பற்றிய யூகங்கள்  வெளிவரத்தொடங்கின. அதிகாரிகள், ஆலோசகர்கள் யாரும் இல்லாமல் வாஷிங்டனுக்குச் சென்ற அசீம் முனீர் ட்ரம்புடன் என்ன பேசினார் என்ற தகவல் இது வரை வெளிவரவில்லை. ஆனால் ஏதோ ஒரு மாற்றம் வரப்போவதை அரசியல் வல்லுநர்கள்  தெரிவித்தனர்.

ஜனாதிபதி சர்தாரியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர் எஜாஸ் சயீத் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

லக்ஷர் இ தொய்பாக் கட்சித்தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்  இ முகமது தலைவர் மசூத் அசார்  ஆகியோர் கவலைக்குரிய நபர்கள் எனத் தெரிவித்த சர்தாரி அவர்களை நாடுகடத்த விரும்புவதாகத் தெரிவித்ததை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர் மிது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு மக்களா தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பூட்டோவை  இராணுவ பலத்தால்  தூக்கி எறிந்து விட்டு அட்சி அதிகாரத்தைக் கைப்பற்ரினார் ஜெனரல் ஜியாகுல் கான். அந்தச் சம்பவம் நடைபெற்று 48 வருடங்கள் நிறைவடையும் வேளை மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப்   போவதாக செய்தி  பரவி உள்ளது.

1999 ஆம் ஆண்டி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் இராணுவத் தள‌பதி பர்வேஸ் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டு வரை முஷாரப்   ஆட்சி செய்தார்.அப்போது  இதே சர்தாரிதான் ஜனாதிபதிப் பதவியில் இருஃதார்.

2008 ஆம் ஆண்டு சர்தாரியை ஜனாதிபதியாக்கிய  பாகிஸ்தான்  இராணுவம்  27 வருடங்களின்  பின்னர் அதே சர்தாரியை  ஜனாதிபதிப் பதவியில் இருந்து அகற்ற கங்கணம் கட்டியுள்ளது. 

No comments: