எம்ஜிஆர் இருகையில் தோல்விகாணாத கழகம், ஜெயலலிதாஅவும் அந்தப்
பெருமையைக் கட்டிக் காப்பாற்றினார்.வெற்றிக் கனி எடப்பாடியை விட்டு வெகுதூரம்
போய்விட்டது.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளுக்கு பாரதீய ஜனதாதான் காரணம் எனக் கண்டுபிடித்த
எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
பாரதீய
ஜனதாவுடன் தொடர்பு இல்லை என எடப்பாடி அறிவித்ததும் அதுவரை மெளனமாக இருந்த மெளனமாக இருந்த
இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாரதீய ஜனதாவை வறுத்து எடுத்தார்கள். ராயபுரத்தி
ராஜாவான நான் பாரதீய ஜனதாவால் தோற்றேஎன் என
ஜெயக்குமார் புலம்பினார்.
எடப்பாடியின்
சபதம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பாரதீய ஜனதாவின்
கூட்டனியில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் இணைந்த தாக தமிழகத்தில் அமித்ஷா பகிரங்கமாகத் தெரிவித்தார். மேடையில் இருந்த எடப்பாடி
தலை குனிந்தபடி இருந்ந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பாத
கூட்டணிக்கு எடப்பாடி துணை போகிறார்.
தமிழக
சட்டசபை தேர்தலுக்கு பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே,
'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது
அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்துகுள் பூசலைக்
கிளப்பி உள்ளது. தமிழக அட்சியில் பாரதீய ஜனதாவும் இடம் பெறும் என அமித்ஷா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.
கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்.
தமிழக அமைச்சரவையில் பாரதீய ஜனதா இருப்பதை
மக்கள் ஏற்ருக்கொள்ள மாட்டார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு இதுவே காரணமாக
அமையப் போகிறது.
,
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை
தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ்கத்தை வீழ்த்துவதே நோக்கம் என எடப்பாடியும், அமித்ஷாவும் அறிவித்துள்ளனர். மேலும் பல கட்சிகளை சேர்த்து,
பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு பின்பும்,
அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதே, அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின்
விருப்பமாக உள்ளது.
கூட்டணி
ஆட்சி எனக்கூறும் ஆமித்ஷா முதலமைச்சர் யாரெனக்
கூறவில்லை. முதலமைச்சர் பதவுக்காக சசிகலாவைத்
தூக்கி எறிந்தவர் எடப்பாடி. தனக்குப் போட்டியாக வந்து விடுமார் என்ற பயத்தால் பன்னீரை கட்சியில் இருந்து விரட்டியவர்.
மிக இலகுவில் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்க்க மாட்டார். இந்த
நிலை நீடித்தார் தேர்தல்வரை இந்தக் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான்.
2026
ஆம் ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க கூட்டணி வென்று
ஆட்சியமைக்கும். டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததுபோல,
தமிழ்நாட்டிலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமையும்...” என்று அடுத்த அரசியல் குண்டை வீசினார்
அமித் ஷா, அப்போது அமையாக இருந்த எடப்பாடி
இப்போது கன் விழித்த்ஹ்ஹு எதிர்வினையாற்றுகிறார்.
அண்னா
திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவற்றின் தலைவர்கள் தான் கூட்டனி பற்றிப் பேசுகிறார்கள். தொண்டர்கள் விலகியே நிற்கிறார்கள். அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் அமித்
ஷாவுக்குப் பதிலளிக்கிறார்கள்.
வடமாநிலங்களில்
பாரதீய ஜனதா செல்வாக்குடன் இருக்கிறது. தமிழகத்தில்
பாரதீய ஜனதா அறிக்கையில்தான் வளர்கிறது. அண்ணாமலை தினமும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி
தன்னை முன்னிலைப் படுத்துவார்.
தனிப்
பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத் தலைவர்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார் அமித்ஷா. கூட்டணிக்கும் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
மெகா
கூட்டணி என எடப்பாடியும் அமித்ஷாவும் சொல்கிறார்கள்.எந்தக் கட்சியுடன் கூட்டனியுடன் சேருவது எனத் தெரியாது இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் பிரேமலதா பேரம் பேசுகிறார்.
தந்தைக்கும்
மகனுக்கு இடையேயான பிரச்சனையால் பாட்டாளி மக்கள் கட்சி பிளவுபட்டுள்ளது. தனி ஒருவனான வாசன் பாரதீய ஜனதாவின்
பக்கம் சாய்ந்துள்ளார்.
மறு
புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி
மிகப்பலமாக இருக்கிறது. அங்கும் சில புகைச்சல்கள் உள்ளன. ஆனால், பாரதீய ஜனதாவுக்கு எதிரான பொதுக்கருத்தில்
ஒன்றுபட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி.
ரமணி
6/7/25
No comments:
Post a Comment