அமெரிக்காவின் மாநிலமான டெக்டாஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 104 பேர்
பலியானார்கள்.கெர் கவுண்டியில் 28 குழந்தைகள்
உட்பட 84 உடல்கள் மீட்கப்பட்டதாக கெர் கவுண்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்னும் பலரைக் காணவில்லை. அவர்கள் உயிருடன்
இருப்பார்கள் என்பதர்கான உத்தரவாதம்
எதுவும் இல்லை.
கடந்த
வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள்
பல அடித்துச் செல்லப்பட்டன. அழகாகக் காட்சியளித்த நிழல் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.
மழை பெய்யும், புயல் வரும் என எச்சரிக்கை விடுக்கப்படுவது
வழமையானதே. ஆனால், மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. புயலைத் தடுக்கும் சக்தி, அல்லது
திசை மாற்றும் வல்லமை இல்லை. இயற்கையின் பேரிடர்களை
எதிர்வு கூறலாம். அவற்றை இல்லாமல் செய்யமுடியாது.
மத்திய
கெர்கண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் 25 சென்ரி மீற்றர் மழை பெய்தது. பல மாதங்கள்
பெய்ய வேண்டிய மழை ஒரே இரவு கொட்டித் தீர்த்தது.
பெய்யாப்
பெருமழையால் ஆறு கரை புரண்டு ஓடியது. ஆற்றைங்கையில்
இருந்த கிறிஸ்தவ கோடைகால முகாமில் தங்கி இருந்த சிறுவர்களும், பெரியவர்களும்
அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
டெக்டாஸ்
மாநிலத்தில் உள்ள கெர் கவுண்டி, டிராவிஸ் கவுண்டி,
பர்னெட் கவுண்டி ஆகிய பகுதிகள் பெருமளவில்
பாதிக்கப்பட்டன.
மழை வெள்ள எச்சரிக்கை முன் கூட்டியே விடுக்கப்பட்டது. சில இடங்களில் தொலை தொடர்பு வசதிகள் இல்லாமையால் உரிய இடங்களுக்கு எச்சரிக்கை போய்ச் சேரவில்லை
காம்ப்
மிஸ்டிக் போன்ர முகாம்களில் இருந்த மக்கள் வெளியேறுவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை
எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
வெள்ள
எச்சரிக்கை கிடைத்து மக்கள் வெளி யேறுவதற்கிடையில் வெள்ளம் சூழ்ந்து விட்டது.
டெக்டாஸ்
ஹில் கவுண்டியின் நிலப்பரப்பும் நீர்வழிப்பாதைகளும் திடீர் வெள்ளப்
பெருக்கால் பாதிக்கப்படும் இடமாக அடையாளம் காண்ப்பட்டுள்ளது.
வாரத்தின்
தொடக்கத்தில் ஆறு அங்குல மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதாகவும், ஆனால், 10 அங்குல மழை பெய்ததால் நிலமை கைமீறிப் போனதாகவும்
டெக்சாஸ் அவசர மேலாண்மைப் பிரிவின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார்.
சமூக ஊடக்க்ன்களில் பகிரப்படும் வீடியோக்கல் அழிவுகளின்
உச்சத்தை வெளிப்படுத்துகின்றன. குவாடலூப் ஆற்று
வெள்ளப்பெருக்கால் கரை புரண்டு ஓடியதால் சிலமணி நேரங்கள் மீட்புப்பணி இடை நிறுத்தப்படது.
அப்பகுதியைல்
பெய்யும் மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும்
அபாயம் உள்ள்து.
டெக்டாச்
மாநிலத்தின் பாறை உள்ள நிலபரப்பு.அங்கு நிறைந்துள்ள
களிமன் நிலப் பரப்பும் வெள்ளப்பஎருக்குக்குக் கரணமாகும். களிமண்தரை நீரை உறிஞ்சாது நீர் ஓட்டத்தைத் தூண்டும் தன்மை உடையது.குவாடலூப் உட்பட அருகில் உள்ள நதிகளில் கடந்த 100 ஆண்டுகலில் ஒவ்வொரு தசாப்தத்துக்கும்
ஒரு முறை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை 5-10 அங்குல மழை பெய்தது.
1.82
அடியாக இருந்த நீர் மட்டம் சடுதியாக 34.29
அடியாக உயர்ந்தது.
ட்ரம்பின்
நிர்வாகம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்ஜெட், நிர்வாக ஊழியர் குறைப்பு என்பன வற்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மழை
தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்ப்படுவதால்
இன்னொரு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்
உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டெக்டாஸ்
வெள்ள அழிவு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்ப்பும்
என அறியபடுகிறது.டெக்டாசின் நிலை மோசமாகுவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment