Sunday, November 2, 2025

38 வயதில் முதலிடம் பிடித்த ரோஹித் சர்மா

  ஒருநாள்  கிறிக்கெற்  போட்டி துடுப்பாட்ட விரார்களி   தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 38 வயதான ரோஹித் சர்மா 121 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். தரவரிசை பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்திய அணியின் முன்னாள் கப்டன் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைபிடித்த மிக வயதான வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

  இந்திய அணிக்காக கப்டனாக ரி20 உலகக்கிண்ணம்,  ச‌ம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற கொடுத்த ரோகித் சர்மாவின் கப்டன் பதவியை அவுஸ்திரேலிய தொடருக்கு முன்பு இந்திய அணி நிர்வாகம் பறித்தது. அதற்கு துடுப்பால் பதிலளித்துள்ளார் ரோஹித்.

இதை அவரது ரசிகர்கள் காெண்டாடி வருகின்றனர். 2027 உலகக்  கிண்ண ஒருநாள் தொடரில்  ரோகித் சர்மாவிம், விராட் கோலியும்   விளையட மாட்டார்கள் என  அஜித் அகார்கர்  கூறிய நிலையில், ரோகித் சர்மா ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அவர்களுக்கு பதிலடி அளித்துள்ளார். விராட் கோலி ஒரு இடம் சரிந்து 6வது இடத்திற்கு சென்றுள்ளார்.   

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டொப் 10 வீரர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர்  ஆகிய இந்திய வீரர்கள்  உள்ளனர். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து வீரர்களும் இடம்பிடித்துள்ள நிலையில்  அவுதிரேலிய வீரர் ஒருவர் கூட  டொப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

ரோஹித்டின் சாதனையில்  33 சதங்கள், 59 அரைசதங்கள் அடங்கும். 37 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.  அதிகபட்சமாக 264 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஒருநாள்  கிறிக்கெற்றில்  3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும்  ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் அடுத்த மாதம் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் ரோகித் சர்மா இடம்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படி , எந்தவொரு வடிவத்திலும் 38 வயதை எட்டிய பிறகு ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஒரே வீரர் டெண்டுல்கர் ஆவார்.

சிலம்பு

9/11/25

 

 

ரோஹித், விளையாட்டு, கிறிக்கெற், இந்தியா, தமிழன், சச்சின்

No comments: