தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டிசம்பர் மூன்றாம் திகதி ராய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 359 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கப்டன் ராகுல் 66 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்கள்.
அடுத்து
விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி
இந்திய 49.2 ஓவர்களில் 6 விக்கெற்களை
இழந்து 326 ஓட்டங்கள் அடித்து வெற்றி
பெற்றது.
ஐடன்
மார்க்ரம் சதமடித்து 110, கப்டன் தெம்பா பவுமா
46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்கள்.
அதனால் இத்தொடரை சமன் செய்து
தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. -
அப்போட்டியில்
முதலில் விளையாடிய இந்திய அணிக்கு
விராட் கோலி – ருதுராஜ் கெய்க்வாட்
ஆகியோர் சிறப்பாக
விளையாடினார்கள். இந்தியத் தேர்வாளர்களால் ஓரம்
கட்டப்பட்ட ருதுராஜ் கிடைத்த
வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய 77
பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்
சதத்தை அடித்து அசத்தினார். அவருடன்
இணைந்து அசத்திய விராட் கோலி 53வது
சதத்தை அடித்து சில சாதனைகளைப்
படைத்தார்.
3வது
விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி
இந்தியா 358 ஓட்டங்களை
குவிப்பதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்தது. ஒருநாள்
கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு
விக்கெட்டுக்கும் அதிக ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி
என்ற வரலாற்றுச் சாதனையை ருதுராஜ் – விராட்
கோலி படைத்துள்ளனர்.
இதற்கு
முன் 2010ஆம் ஆண்டு குவாலியரில்
நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான
போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ,தினேஷ்
கார்த்திக் ஜோடி 194 ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.
அந்தப் போட்டியில் தான் சச்சின் முதல்
முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை
சதத்தை அடித்ததை மறக்க முடியாது.
தற்போது அந்த ஜோடியின் 15 வருட
சாதனையை விராட் கோலியுடன் சேர்ந்து
ருதுராஜ் உடைத்துள்ளார்.
ரமணி
7/11/25

No comments:
Post a Comment