Saturday, December 6, 2025

கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. 68 தொகுதிகள் கொண்ட கொங்கு மண்டலத்தை வென்றால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்பது தான் தமிழக அரசியல் கட்சிகளின்  எண்ணம். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்துஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக கொங்கு மண்டலம்  இருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளாக செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, செந்தில் பாலாஜி ஆகியோர்.  இருக்கின்றனர். ஒரு காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்தில் இருந்த இந்தத் தளபதிகள்  இப்போது பிரிந்து விட்டனர்.எஸ்.பி.வேலுமணி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போதும் இருக்கிறார். கடந்த மாதம் வரை அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்திக் இருந்த செங்கோட்டையன் விஜயைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அஎ.ஜி.ஆருடன்  இணைந்து பயணித்தவர்,  இரட்டை இலைச் சின்னத்தைக் கையில் பச்சை குத்தியவர்,  ஜெயலலிதாவின் படத்தை பொக்கற்றில்  வைத்திருப்பவர் செங்கோட்டையன்.செங்கோட்டஒயனின்  இந்த முடிவை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொங்குமண்டலத்தின் இன்னொரு தளபதியான செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தூணாக  இருக்கிறார்.. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது? என்பதுதான் கொங்கு மண்டலத்தில் பேசுபொருளாக இருக்கிறது.

 கொங்கு மண்டலத்தில் பாரதீய ஜனதாக் கட்சியும் வலுவாகக் கால் பதித்துள்ளது. 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்தது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டே பாஜகவும் தனது கட்சி வலிமையை சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மூலம் இங்கு கட்டியெழுப்பத் தொடங்கியது. தற்போது தங்கள் சொந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை தலைவர் ஆனதாலும் பாஜக கொங்கில் அதிக ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனால் "செங்கோட்டையன் வந்தாலும் கவலை இல்லை" என்ற மனநிலையில் பாஜக-அதிமுக கூட்டணி செயல்படுகிறது.

கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இங்குள்ள 44 தொகுதிகளை வென்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைத் தவிர, பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. கரூர்  செந்தில் பாலாஜியின் ராஜ்ஜியத்தில் உள்ளது.  செங்கோட்டையனின் வெளியேற்றம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விஜய்க்கும் கொங்கு மண்டலத்தில் ஒரு நிலையான ரசிகர் ஆதரவு வட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த ஆதரவை அரசியலாக்கும் பணியை செங்கோட்டையன் முன்னெடுத்து வருகிறார். தன்னை புறக்கணித்த பழனிசாமிக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் கொங்கு மண்டலத்தில் தவெக வளர்ச்சிக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காகவே சில மாவட்டங்கள் முழுமையாக அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 திமுகவும் கொங்கு மண்டலத்தை நோக்கி வேகமான நகர்வுகளைத் தொடங்கியுள்ளது. கடந்த முறை கரூரில் 4 தொகுதிகளையும் வெற்றி கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை கோவையை குறிவைத்து செயல்படுகின்றது. அதற்காகவே 'அரசியல் ஆக்சன் கிங்' என்று அழைக்கப்படும் செந்தில்பாலாஜியை கோவையில் தங்கவைத்து, அவருக்கு துணையாக அமைச்சர் சக்கரபாணியை அனுப்பி வைத்துள்ளது. மற்ற கட்சிகளில் சிறப்பாக செயல்படும் தளபதிகளை அடையாளம் கண்டு திமுகவில் சேர்க்கும் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கியுள்ளார். இதன் ஓர் எடுத்துக்காட்டு சிங்காநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல். சின்னசாமி திமுகவில் இணைந்தது.

 அதிமுக தரப்பில் எஸ்.பி. வேலுமணி மீண்டும் பத்துக்கு பத்து வெற்றி கோவையில் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக செயல்படுகிறார். பாஜக கூட்டணியில் திரும்பியதாலும், இரு கட்சிகளும் கொங்கில் வெற்றியை நிச்சயம் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளன. மொத்தத்தில், செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் என்ற மூன்று முக்கிய தளபதிகள் கொங்கு மண்டலத்தில் தங்கள் கட்சிகளை வெற்றிக்குச் இட்டுச் செல்ல வழி வகுக்க முயன்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே அதிமுகவில் அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு கோட்டையில் கொடி நாட்டப் போகும் 'கிங்' யார் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. 

தமிழகத்தில் ரோட்ஷோ நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கல் காரணமாக  புதுச் சேரியில் ரோட்ஷோ நடத்த தமிழக வெற்றிக் கழகம்  முயற்சித்தது. புஸ்ஸி ஆனந்த்  இரண்டு முற நேரடியாகச் சென்று அனுமதிகோரினார். அனுமதி மறுக்கப்பட்டது.புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் கட்சி நடத்தவிருந்த ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக்கூட்டம் நடத்துவதும் இரத்தாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த மாதம் பதினோராம் திகதி விஜயின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து அவரது அனைத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி ரோட்ஷோவும்  இரத்தானது.

  புதுச்சேரியில் பிரம்மாண்ட ரோடு ஷோவும் கூடவே பொதுக்கூட்டமும் நடத்த விஜய்யின் கட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக புதுச்சேரி  பொலிஸாரிடம் ரோட்ஷோ கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை  நிராகரிக்கப்பட்டது.  அண்டை மாவட்டங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு தருவது கடினம், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் ரோட் ஷோ நடத்த வாய்ப்பில்லை என்று  பொலிஸ்  தெரிவித்துவிட்டது. அதே சமயம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் விடாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரை சென்று தமிழக வெற்றி கழகம் முயற்சித்து பார்த்தது. ஆனால் ரங்கசாமியும் கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பொது கூட்டம் மட்டும் நடத்துவதற்கு கால அவகாசம் மிகவும் குறைவு என்பதால் தற்போது டிசம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தையும் ரோட் ஷோ நிகழ்ச்சியும் கைவிட்டுள்ளது தமிழக வெற்றிக்கழகம்.

விஜயும் அவரது கட்சி உறுப்பினர்கலும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் கூட விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் அவரைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அக்கட்சியினர் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ரமணி

7/11/25

  

No comments: