நியூசிலாந்துக்கு கிறிக்கெற் அணி இந்தியாவுக்கு எதிராகஎதிராக 3 ஒருநாள்
போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.
முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஜனவரி 14ஆம் திகதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெற்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
1
– 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி
கொடுத்துள்ளது. அத்துடன் 8 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு
ஒருநாள் போட்டியில் தோற்கடித்து நியூசிலாந்து அசத்தியுள்ளது. கடைசியாக 2017இல் இந்தியாவில்
வென்ற நியூசிலாந்து அதன் பின் சந்தித்த 8 தொடர்ச்சியான தோல்விகளை உடைத்துள்ளது.
1773 ஓட்டங்கள் சச்சினின் சாதனையை உடைத்த கோலி
பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட கோலி விராட் 23 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார்.நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய
வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் நியூசிலாந்துக்கு எதிராக அவர் 35 இன்னிங்ஸில்
1773* ஓட்டங்களை 55.40 சராசரியில் அடித்துள்ளார்.
1999 – 2009 காலகட்டங்களில் நியூசிலாந்துக்கு எதிராக
விளையாடிய 41 இன்னிங்ஸில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1750 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
அத்துடன் உலகளவில் ரிக்கி பாண்டிங்கிற்கு (1971)
பின் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில்
அதிக ஓட்டங்கள் அடித்த வீரரானார்.
கே.எல் ராகுலின் அசத்தலான சாதனை
ஐந்தாவது
இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 பந்துகளில்
11 பவுண்டரி , 1 சிக்சர் உட்பட 112 ஓட்டங்கள்
அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அசத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில்
தனது எட்டாவது சதத்தை பதிவு செய்த அவர் மேலும் ஒரு சாதனையாக எம்.எஸ்.டோனியை பின்னுக்கு
தள்ளி அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போட்டி நடைபெற்ற ராஜ்கோட் மைதானத்தில்
சதம் அடித்த இந்திய வீரரானார்.
சர்வதேச
ஒருநாள் போட்டிகளில் தனது சராசரியை 51.67 என்ற சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளார். இதன்
மூலம் டோனியின் சராசரியை (50.23) அவர் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில்
அதிக சராசரி வைத்திருக்கும் இந்திய வீரராக விராத் கோலி 58.45 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,
சுப்மன் கில் 56.34 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.



No comments:
Post a Comment