Friday, January 16, 2026

தலையிடி கொடுக்கும் தமிழக காங்கிரஸ் பொறுமை காக்கும் ஸ்டாலின்


 

அரசியல் பேசும் ஜனநாயகன், பராசக்தி ஆகிய படங்களால் தமிழக அரசியல் சூடாகி உள்ளது.

திமுகவின் பிரசார திரைப்படமான பராசக்தியை எதிர்க்கிறது காங்கிரஸ். பராசக்திக்கு வலுச் சேர்க்கிறது பாரதீய ஜனதா 

திராவிட முன்னேற்றக் கழகம் மிக வலுவாக இருப்பதாகஅரசியல் விமர்சகர்கள் அடிக்கடி  சொல்லி வந்தர்கள். இப்போது அந்தக் கூட்டணிகுள்  ஓட்டை விழும் கரியங்கள் நடைபெறுகின்றன. 2021 ஆம் ஆண்டுமுதல் பலமான கூட்டணியாக இருக்கிறது.விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டணிக்குள் சலசலப்பு எழவில்லை. அதிக தொகுதிகளைப் பெறுவதற்காக தமிழக காங்கிரஸ்காரர்கள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவது வழமையானது. டில்லியில் இருந்து உத்தரவு வந்ததும் அவர்கள் வாயைப் பொத்திக் கொள்வர்கள்.

ஆனால், இம்முறை டில்லித் தலைவர்கள் தமது திருவிளையாடலை ஆரம்பித்துள்ளார்கள். கனன்றுகொண்டிருக்கும் பிரச்சனையை தமிழகத்தலைவர்கள்  ஊதிப் பெரிதாக்குகிறார்கள். கூட்டணியில் இருகும் கட்சிகள் எழுப்பும் சாதாரண  பிரச்சனைதான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆட்சியில் பங்கு வேண்டும். முகியமான அமைச்சரவை வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும்  போன்ற கோஷங்களை காங்கிரஸ் கட்சி எழுப்புகிறது.ராகுலின் நெருங்கிய சகாக்களான . சோடங்கர், பிரவீண் சக்ரவர்த்தி போன்றவர்கள் கூட்டணி ஆட்சிக்குக் குரல் கொடுக்கிறார்கள்.இது ராகுலுகுத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி என்ற  கோஷத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலுவாகத் தூக்கிப் பிடிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான .சிதம்பரம் இந்த விஷயத்தில்  காங்கிரஸ்தலைவர்களின் கருத்துக்கு எதிராக  இருக்கிறார்.

விஜயின் பனையூர் அலுவலகத்துக்கு  காங்கிரஸ் பிரமுகரான பிரவீன் சககரவர்த்தி சென்ற போது  திராவிட முன்னேற்றக் கழகம் உஷாரானது. டில்லித் த்லைவர்கள் அதனைச் சமாளித்து விட்டார்கள். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள் என விஜய்  பேச்சு வார்த்தைக் கதவை மிக அகலமாகத் திறந்து வைத்துள்ளார். விஜயின் அறிவிப்பால் தமிழகக் காங்கிரஸ் பிளவு பட்டுள்ளது. அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு  என்ற மாய மந்திரம், தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. விஜயை வைத்து  அதிக தொகுதிகளைக் கேட்பதுதான் காங்கிரஸின் அஸ்திரமாக  இருந்திருக்க வேண்டும். பதவி ஆசையால்  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயின் பக்கம் சாயத்தொடங்கி விட்டார்கள். தெலுங்கானாவில்  விஜய் ரசிக்ர்கள் இருப்பதாக் தமிழகத்தில் விஜயுடன் கூட்டணி சேருமாறு  அந்த மாநிலத் தலைவர்கள் டெல்லிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் விஜயுடன் காங்கிரஸ் சேஎர்ந்தால் தெலுங்கானாவில் தாம் வெற்றி பெறலாம் ந்ன அந்த மாநிலத் தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.தெலுங்கானாவின் கோருக்கையைப் பரிசீலிக்க வேண்டிய நிலையில் ராகுல் இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து  காங்கிரஸ் வெளியேறினால் இரண்டு கட்சிகளுக்கும் இழப்பு ஏற்படும்அதனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரிய வாக்குகளை காங்கிரஸ் பிரிக்கலாமே தவிர எதிர் பார்க்கும் வெற்றி அதற்குக் கிடைக்கப்போவதில்லை.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அதனால் ஏற்படும் வாக்கு இழப்பை நிவர்த்தி செய்யும் திட்டத்தை ஸ்டாலின் வைத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர விரும்பும் பிரேமலதாவை காத்திருக்க வைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதுமட்டுமல்லாது விடுதலைச் சிறுத்தைகளுக்கும், கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதிக தொகுதிகளைக் கொடுக்கும் எண்ணமும் ஸ்டாலினிடம் இருக்கிறது.

 விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது வெறும் மக்கள் தொடர்பிற்காக மட்டும் அல்லாமல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மாற்றங்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை நோக்கமாகக் கொண்ட ஒரு சிக்னலாகவே அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பாடசாலையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வருவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில்  "ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்," என்று   குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸில் உள்ள ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்துடன்    தேர்தல் கூட்டணி கொள்ள விரும்புவதாக நிலவும் யூகங்களுக்கு மத்தியில் இந்த பதிவு வந்துள்ளது. ராகுல் காந்தியைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக் தாகூர், ஜோதிமணி , அகில இந்திய புரொபஷனல் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரும் படத்திற்கு ஆதரவாகவும், படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி தணிக்கை சபையை விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யைச் சந்தித்ததாக வெளியான செய்திகள், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு வலு சேர்த்தன. அதே நேரத்தில், காங்கிரஸின் ஒரு பகுதியினர் தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு ,கூடுதல் தொகுதிகளை  ஒதுக்கக் கோரி குரல் எழுப்பி வருகின்றனர்.

 இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைமை ஆளும் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எங்களது குழு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துள்ளது. கட்சியில் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இறுதி முடிவை தேசிய தலைமைதான் எடுக்கும்," என்றார். விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் இது குறித்து கூறுகையில், "ராகுல் காந்தியின் பதிவு மத்திய நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தே வெளியிடப்பட்டது. நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில் தான் உறுதியாக இருக்கிறோம்," எனத் தெளிவுபடுத்தினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, இந்தப் பதிவு தமிழ் கலாசாரம் பாரம்பரியம் என்பனவற்றைப்  பாதுகாப்பது தொடர்பானது மட்டுமே தவிர, இதில் தேர்தல் அரசியல் ஏதுமில்லை என்று கூறினார். இப்போதைக்கு காங்கிரஸ்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறாது என்ற செய்தியால் திராவிட முன்னேற்றக் கழகம் நிம்மதியடைந்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன், ‘பராசக்தி’ படத்தின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றது  அரசியலாகி உள்ளது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக வெளியாகியுள்ள பராசக்தி படக்குழுவினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மோடி அரசு ஹிந்தியைத் திணிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில் ஹிந்தி எதிர்ப்புப் ப்டமான பராஅசக்தியை மோடி ஆதரிப்பதும் அரசியல்தான்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகனுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  குரல் கொடுத்த   மறுநாளே பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பராசக்தி படக் குழுவினர் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்த தலை முறைக்குக் கடத்துவதற்காக  உதயநிதியின் தயாஅரிப்பில் வெளியான படம்அராசக்தி. அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் அரங்கேற்றப் பட்ட அரசியல் பழிவாங்கல்களை பராசக்தி படம் கூறுகிறது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கு  படத்தை பாரதீய ஜனதா  பாராட்டுகிறது.

தமிழ்க சட்டமன்றத் தேர்தல் நெருங்குகையில் இன்னும் பல அதிரடிகள் அரங்கேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

 

ரமணி

18/1/26

 

No comments: