Saturday, May 16, 2015

முதல் இடத்துக்கான போட்டி


ஐபிஎல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது  எட்டு அணிகளும் 13 போட்டிகளில் விளையாடிவிட்டன. டில்லியும் பஞ்சாப்பும் அடுத்த சுற்றை நினைத்துப்பார்க்க முடியாது   பின்தங்கி உள்ளன. ஐந்து வெற்றி எட்டுத்தோல்வி 10 புள்ளிகளுடன் டில்லி ஏழாவது இடத்திலும் மூன்று வெற்றி பத்து தோல்வி ஆறு புள்ளிகளுடன் பஞ்சாப் எட்டாவது இடத்திலும் உள்ளன. இடுத்த போட்டியினால் இவற்றுக்கு எந்த பிரயோசனமும் இல்லை ஆனால் எதிரணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பஞ்சாப்புடனான போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் நிம்மதியாக முதல் இடத்தில்  இருக்கலாம் மாறாக தோல்வியடைந்தால் மற்றைய போட்டிகளின் வெற்றி தோல்வியின் பின்னரே சென்னையின் இடம் உறுதி செய்யப்படும்.முதலாவது போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக192 ஓட்டங்கள் அடித்த சென்னை பஞ்சாப்பை 97 ஓட்டங்களில் முடக்கியது. ஆகையினால் சென்னை ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

   இரண்டாவது இடத்தில் இருக்கும்பெங்களூரும் இதேநிலையில் உள்ளது. டில்லியுடனான போட்டியில்   வெற்றி பெற்றால்  முதல் இடம் அல்லது   தோல்வியடந்தால் காத்திருக்க வேண்டும்   இவை இரண்டும்மோதிய முதல் போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றது. டில்லி 95 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தது..டில்லி வென்றால் பெங்களூரின் நிலை சிக்கல்தான். ஏழுவெற்றி  ஐந்து தோல்வி  மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு 15புள்ளிகளைப் பெற்றது பெங்களூரு.

ஏழு வெற்றி ஆறு தோல்வி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கொல்கத்தாவும் ஆறு வெற்றி ஐந்து தோல்வி மழையால் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டு 14 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தானும் மோத உள்ளன.ஏழு வெற்றி ஐந்துதோல்வி மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது கொல்கத்தா ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்தராஜஸ்தானுக்கு மழையும் சுப்பர் ஓவரும் சதிசெய்து ஆறாவது இடத்துக்கு தள்ளியது.
191 ஓட்டங்கள் அடித்த ராஜஸ்தானுக்கு பதிலடியாக பஞ்சாப் 191 ஓட்டங்கள் அடித்து சவால் விட்டது. சுப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெங்களூர்  200 ஓட்டங்கள் அடித்தது.மழை காரணமாகா    
  போட்டி கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.இவை இரண்டுக்குமிடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஏழு வெற்றி ஆறு தோல்வி 14 புள்ளிகளைப்பெற்ற ஹைதராபாத்  நான்காவது இடத்திலும் மும்பை ஐந்தாவது இடத்திலும் உள்ளன. வெற்றி பெற்றால் பிளே ஓவ் சுற்றில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகும் முதல் நான்கு  போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அடுத்து  ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இருக்கிறது.
 இவை இரண்டுக்குமிடையேயான் முதல் போட்டியில் மும்பை வெற்றி பெற்றது.


No comments: