Monday, July 5, 2021

நான்கு மாத கர்ப்பிணியின் ஒலிம்பிக் ஆர்வம்


 ஒலிம்பிக்  போட்டியில் கலந்து கொள்வதற்கு பல  வீரர்கள் தகுதி  பெற்றுள்ளனர். பல நாடுகளில்  தகுதிகாண்  போட்டிகள்  நடைபெறுகின்றன. அமெரிக்காவில் நடந்த  தகுதிகாண்  போட்டியில்  கலந்துகொள்வதற்கு சமூகமளித்த  நான்கு  மாத  கர்ப்பிணி  வீராங்கனையைப்  பார்த்து  அதிகாரிகள்  ஆச்சரியப்பட்டனர்.

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் ஹெப்டத்லெட் வீராங்கனைகலுக்கான  தகுதிகாண்  போட்டி நடைபெற்றபோது லிண்ட்சே ஃபலாச் எனும் கர்ப்பிணி  கலந்துகொண்டார்.

2012,2016 ஆம்  ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்  போட்டிகலில்  பங்கு  பற்றுவதற்காக  முயற்சி  செய்து  தோல்வியடைந்த லிண்ட்சே ஃபலாச் 2020  ஆம்  ஆண்டு  ஒலிம்பிக்  போட்டியில் கலந்துகொள்ள  விண்ணப்பித்தார். கடந்த  ஆண்டு  நடைபெற  இருந்த  ஒலிம்பிக்  போட்டிக் கொரோனா  காரணமாக நடைபெறவில்லை. ஒலிம்பிக் நடைபெறும் இந்த  வேளையில் லிண்ட்சே ஃபலாச் கர்ப்பமாக  உள்ளார்.

ஹெப்டத்லான் ஹெப்டத்லான் என்பது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 200 மீ, 800மீ ஓட்டப்பந்தயம்,ம் 100மீ தடைகள் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 விதமான போட்டிகளை கொண்டதாகும். இதில் 18 பேர் கலந்துக்கொண்டனர்.ஃப்லான்ச் 15வது இடத்தை பிடித்துள்ளார். அதுவும் 110 டிகிரி வெயிலில் இதனை செய்துள்ளார்.

மருத்துவர்களின்  ஆலோசனைப்படி  குழந்தைக்காக  மிகவும் எச்சரிக்கையுடன் தகுதிகாண் போட்டியில்  கலந்துகொண்டார்.

குண்டு எறியும் போட்டியில் மூன்று முறை முயற்சி செய்யலாம். ஆனால் ஃப்லாச் ஒரே ஒரு முறை மட்டுமே முயற்சித்தார். இதே போல 800மீ ஓட்டப்பந்தயத்தில் 100மீ தூரத்திலேயே ஃப்லான்ச் களத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஏன் இவ்வளவு ஆர்வம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இதில் கலந்துக்கொண்டீர்கள் எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த தகுதிச்சுற்றில் என்னால் வெற்றி பெற முடியாது என்பது எனக்கு தெரியும், எனினும் ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டவே இதில் கலந்துக்கொண்டேன்" எனக்கூறியது ரசிகர்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.

No comments: