சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.சன்ரைசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 113 ஓட்டங்களை எடுத்தது.10.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெற்களை இழந்து 114 ஓட்டங்கள் எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கிய ஐபிஎல்
சீசனின் இறுதிப்போட்டி 17 ஆம்திகதி சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது இ பேட் கம்மின்ஸ்
தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ,ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
நாணயச்
சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கப்டன் பேட் கம்மின்ஸ் முதலில்துடுப்பாட்டத்தைத் தேர்வு
செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா ,டிராவிஸ் ஹெட் களம் ஆகியோர் இறங்கினார்கள். அபிஷேக் சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ராவிஸ் ஹெட்டும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ராகுல் திரிபாதி எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்தார். திரிபாதி
9 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி மார்க்ரம் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். அந்தவகையில் 10 ஓட்டங்கள் களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
எய்டன்
மார்க்ரம் 20 ஓட்டங்கள்
எடுத்தார். 10.2 ஓவர்கள் முடிவில் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அடுத்து
வந்த ஹென்ரிச் கிளாசென் 17 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார்.
தலைவர்பேட்
கம்மின்ஸ் 24 ஓட்டங்கள்
எடுத்தார். 20 ஓவர்கள்
முடிவில் 113 ஓட்டங்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது கொல்கத்தா
நைட்ரைடர்ஸ் அணி.
தொடக்க
ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்டார் சுனில் நரைன். அடுத்த பந்துலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 6 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வெங்கடேஸ்
ஐயர். ரஹ்மானுல்லா குர்பாஸுடன் ஜோடி சேர்ந்து அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குர்பாஸ்
39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ஓட்டங்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். 10.3 ஓவர்கள்
முடிவில் 2 விக்கெற்களை
இழந்து 114 ஓட்டங்கள்
எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. ஐபிஎல் சீசனில் 3 வது முறையாக கோப்பை வென்றிருக்கிறது கொல்கத்தா அணி.
2012, 2014க்குப்பின் 3வது
கோப்பையை வென்ற கொல்கத்தா சென்னை, மும்பைக்கு பின் 2வது வெற்றிகரமான அணியாக வரலாற்று சாதனை படைத்தது. மறுபுறம் ஹைதராபாத் போராடாமலேயே தோற்றதால் தோனிக்குப் பின் உலகக் கோப்பையையும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற கப்டன் என்ற இமாலய சாதனையை படைக்கும் வாய்ப்பை பட் கமின்ஸ் தவற விட்டார்.
பிறந்தநாள் பரிசு
இந்த தொடரில் மொத்தம் 488 ஓட்டங்கள் , 17 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரேன் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். சென்னையில்
2012இல் முதல் முறையாக கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை வென்ற உணர்வு தற்போது உள்ளதாக சுனில் நரேன் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய பிறந்தநாளில் 3வது ஐபிஎல் கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
முக்கிய போட்டிகளில்
முடங்கிய
ட்ராவிஸ்
ஹெட்
நடப்பு
ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட்
ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 1 பந்தை மட்டுமே சந்தித்து ஓட்டம் எதுவும்
எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி உட்பட கடைசியாக நடந்த 4 போட்டிகளில் 3 டக் அவுட்டுடன் 34 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஹெட். மேலும், நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தாவிற்கு எதிரான 3 போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட், டக் அவுட் ஆகியுள்ளார்.
ட்ராவிஸ்
ஹெட் கடைசி நான்கு இன்னிங்ஸ்:
0(1) vs பஞ்சாப் கிங்ஸ்
0(2) vs கொல்கத்தா நைட்
ரைடர்ஸ்
34(28) vs ராஜஸ்தான் ராயல்ஸ்
0(1) vs கொல்கத்தா நைட்
ரைடர்ஸ்
ஏமாற்றிய ஹெட்
- அபிஷேக்
ஜோடி:
அதிரடி ஹிட்டுக்கு பெயர் போன தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட் அபிஷேக்
ஷர்மா, அதிர்ச்சியை
கொடுத்தனர். அபிஷேக் சர்மா 2 ஓட்டங்களிலும், ஹெட் ஓட்டம் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அபிஷேக், ஹெட் ஜோடி நடப்பு
ஐபிஎல் சீசன் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ஸ்டிரைக் ரேட்களில் ஒன்றாக அமைத்து கொடுத்தனர்.
அபிஷேக்
சர்மா 202.95 லிலும், ஹெட் 209.29 ஸ்டிரைக் ரேட்டிலும் விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
அபிஷேக்
சர்மா,ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் 15 ஆட்டங்களில் 3 சதம் மற்றும் 2 ஐம்பது பிளஸ் ஸ்டாண்டுகளுடன் 691 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். இந்த சீசனில் ட்ராவிஸ் ஹெட் 567 ஓட்டங்களுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 484 ஓட்டங்கள் குவித்துள்ளார் அபிஷேக் சர்மா.
24.75 கோடி ஆட்டநாயகன்
கொல்கத்தாவின் வெற்றிக்கு
மூன்ரு ஓவர்களில் 14ஓட்டங்கள்
மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 24.75 என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட போது பலரும் தம்மை கிண்டலடித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை வைத்து ஐபிஎல் தொடரிலும் அசத்தியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
முக்கிய அணிகள் இல்லாத இறுதிப் போட்டி
17 ஆண்டு
கால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி கூட இடம் பெறாத ஐபிஎல் இறுதிப் போட்டியாக இது நடைபெற்றது.
14 முறை
நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஐபிஎல் இறுதி போட்டியில் பங்கேற்று இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி உள்ளது. டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறது. அதில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.
மும்பை
இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆறு முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.
சரித்திரம் படைத்த
ஸ்ரேயாஸ்
ஐபிஎல்
கோப்பை வென்ற இந்திய கப்டன்கள் வரிசையில் ஐந்தாவது இந்திய கப்டனாக இடம் பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். முன்னதாக டோனி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் ,ஹர்திக் பாண்டியா ஆகிய நால்வர் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய கப்டன்கள் ஆவர்.
ஐபிஎல் 2024 விருது,
பரிசுத்
தொகை
வென்றவர்களின்
முழு
விவரம்:
எமர்ஜிங்
பிளேயர் ஆஃப் தி சீசன் – நிதிஷ்
குமார் ரெட்டி – ரூ.10 லட்சம்
ஃபேர்பிளே
விருது – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பர்பிள்
கேப் வின்னர் – ஹர்ஷல் படேல் (24 விக்கெட்டுகள்) – ரூ.10
லட்சம் .
ஒரேஞ்
கேப் – விராட் கோலி (741 ஓட்டங்கள், ரூ.10 லட்சம்) –
மதிப்புமிக்க
வீரர் – சுனில் நரைன் (488 ஓட்டங்கள், 17 விக்கெட்டுகள்), ரூ.10 லட்சம்
பிட்ச்
மற்றும் கிரவுண்ட் விருது – ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் – ரூ.50 லட்சம்
ஐபிஎல்
2024 2வது இடம் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.12.5 கோடி
ஐபிஎல் 2024 சம்பியன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஷ்ரேயாஸ் ரூ.20 கோடிக்கான காசோலையுடன் ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment