2011 உலகக் கிண்ண சம்பியன் அணியின் தொடர் நாயகனான ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் செவ்வாயன்று வெளியிட்ட வீடியோவில் மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் காண்பார் என்பது போல் சூசகமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் பதிவு செய்த வீடியோவில் ‘இட் இஸ் டைம் ஃபார் மை
செகண்ட் இன்னிங்ஸ்’ என்று கூறியுள்ளார், 2வது இன்னிங்ஸுக்குத்
தயார் என்று அவர் கூறுவது கிரிக்கெட் மட்டையை மறுபடியும் பிடித்து களமிறங்குகிறாரா,
அல்லது புதிய அணியில் எதுவும் பயிற்சியாளராக இணைகிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை.
ஒருவேளை ஐபிஎல்-க்கு வந்துள்ள இரண்டு புதிய அணிகள் அவரை வீரராகவே சேர்க்கிறதா என்பதெல்லாம்
போகப்போகத்தான் தெரியும்.தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே அவர் சூசகமாக முன்பு தெரிவிக்கும் போது பிப்ரவரியில் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய வீடியோவில், “It's that time of the year. Are you ready? Do you have what it takes? Have a big surprise for all you guys! Stay tuned!" என்று கேப்ஷன் போட்டுள்ளார் யுவராஜ்.
No comments:
Post a Comment