Showing posts with label ஐபிஎல்26. Show all posts
Showing posts with label ஐபிஎல்26. Show all posts

Sunday, April 5, 2026

ரிஸ்வி, ஸ்டப்ஸ் ஜோடி அதிரடி லக்னோவை வீழ்த்தியது டெல்லி


  ஐபிஎல்  தொடரின்  5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து  141 ஓட்டங்கள் எடுத்தது.    அப்துல் சமாத் 36   மிட்செல் மார்ஷ் 35  ஓட்டங்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் காயத்தி இருந்து மீண்ட நடராஜன்  சிறப்பாகப்ப் அந்து வீசி  நடராஜனும், . லுங்கி இங்கிடியும்  தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

142  ஓட்டங்களை விரட்டிய டெல்லி   4.3 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து  26 ஓட்டங்கள் மட்டும் எடுத்துத் தடுமாறியது.  கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா, பதும் நிசங்க, அக்சர் படேல் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.   5-வது விக்கெட்டுக்கு இணைந்த சமீர் ரிஸ்வி ,ஸ்டப்ஸ் ஜோடி, 119  இணப்பாட்டம் எடுத்து அணியைக் காப்பாற்றியது.

 . இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 17.1 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து   145 ஓட்டங்கள்  எடுத்து வெற்றி பெற்றது டெல்லி. சமீர் ரிஸ்வி, 47 பந்துகளில் 70  ஓட்டங்களும்,   ஸ்டப்ஸ், 32 பந்துகளில் 39  ஓட்டங்களும் எடுத்தனர்.

டெல்லி அணிக்காக சமீர் ரிஸ்வி, இம்பாக்ட் வீரராக விளையாடி இருந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றிருந்தார்.

 

 

 

.

Sunday, March 29, 2026

ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் சாதனை சன்​ரைசஸ் ஹைத​ரா​பாத் வெற்றி


   பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில்  நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் நடப்பு சம்​பியன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யும், 2016-ம் ஆண்டு சம்​பிய​னான சன்​ரைசஸ் ஹைத​ரா​பாத் அணி​யும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய  ஹைத​ரா​பாத் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201 ஓட்டங்கள்  எடுத்தது.  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 15.4 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து  6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 ஹைத​ரா​பாத் அணி​யின் டிரா​விஸ் ஹெட் 11, அபிஷேக் சர்மா 7, நித்திஷ்கு​மார் ரெட்டி 1, ஹெயின்​ரிச் கிளாசன் 31, சலில் அரோரா 9, ஹர்ஷ் துபே 3, அனிக்​கெட் வர்மா 43  ஓட்டங்​கள் எடுத்​தனர். டேவிட் பெய்ன் 6 ஓட்டங்​களும், ஜெய்​தேவ் உனத்​கட் 4 ஓட்டங்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே ஜேக்கப் டஃபி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ஹைதராபாத் அணியின் தற்காலிக கப்டன் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணியை மீட்டார்.

 202 ஓட்டங்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பெங்​களூரு அணி விளை​யாடத்​ தொடங்​கியது.விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

 பில் சால்ட் (8) ஏமாற்றம் அளித்தாலும், தேவ்தத் படிக்கல் , விராட் கோலி இணை ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட படிக்கல்,  26 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுபுறம் தனது கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 69  ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  அறிமுக வீரர் ஜேக்கப் டஃபி மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 இந்​தப் போட்​டி​யில் கப்​டன் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி 38 பந்​துகளில் 8 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 80  ஒட்டங்கள் அடித்தார். அவர் ஐபிஎல் போட்​டிகளில் 3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்​தார். இதன்​மூலம் குறைந்த பந்​துகளில் 3 ஆயிரம்  ஓட்டங்​களைக் கடந்த இந்​திய வீரர்​கள் பட்​டியலில் 6-வது இடத்​தைப் பிடித்​தார் கிஷன். அவர் 2,180 பந்​துகளில் 3 ஆயிரம் ஓட்டங்களை எடுத்​துள்​ளார்.

இந்​தப் பட்​டியலில் முதல் இடத்​தில் ரிஷப் பந்த்​தும் ​(2,028 பந்​துகள்), 2-வது இடத்​தில் யூசுப் பதானும் ​(2,082 பந்​துகள்), 3-வது இடத்​தில் சூர்​யகு​மார் யாத​வும்​ (2,130 பந்​துகள்), 4-வது இடத்​தில் சுரேஷ் ரெய்​னா​வும் ​(2,135 பந்​துகள்), 5-வது இடத்​தில் எம்​.எஸ்​.டோனி​யும் ​(2,152 பந்​துகள்) உள்​ளனர்.