Showing posts with label அர்ஷ்தீப் சிங். Show all posts
Showing posts with label அர்ஷ்தீப் சிங். Show all posts

Saturday, April 18, 2026

மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப்

 

மும்பை வான்கடே மைதானத்தில்  நடந்த ஐபிஎல்  24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. குயின்டன் டி காக்  சதம்  அடித்தும் வெற்றி பெற முடியவில்லை  இந்தத் தோல்வியின் மூலம் மும்பை அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடியமும்பை  6 விக்கெற்களை இழஎது 195 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 112 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்குத் துணையாக நமன் திர் 50 ஓட்டங்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து  195 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

196 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15) , கூப்பர் கான்னொலி (17) ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் ,க‌ப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை பந்துவீச்சைச் சிதறடித்தனர். பிரப்சிம்ரன் சிங்  39 பந்துகளில் 2 சிக்ஸர்கள்   11 பவுண்டரிகளுடன் 80  ஓட்டங்கள் அடித்து  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.

பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இழந்து  198 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எட்டியது. மும்பை தரப்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதுமின்றி 41  ஓட்டங்களிக் கொடுத்தார். இம்பாக்ட் பிளேயராக வந்த அல்லாஹ் கஜன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங்   பெற்றார்.