Showing posts with label உதைப்ந்தாட்டம். Show all posts
Showing posts with label உதைப்ந்தாட்டம். Show all posts

Tuesday, June 9, 2026

எரிக்ஸன் மயங்கியதால் இடை நிறுத்தப்பட்டபோட்டி


  டென்மார்க்கின் ஒடென்ஸில் உள்ள நேச்சர் எனர்ஜி பார்க்கில், டென்மார்க் ,உக்ரைன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் மீண்டும்   மயங்கி விழுந்ததால்   போட்டி இரத்துச் செய்யப்பட்டது..

இரண்டாம் பாதியில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, எரிக்சன் தனது மார்பைப் பிடித்தபடி தரையில் விழுந்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும், போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் டென்மார்க்  உதைப்ந்தாட்டச் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய அணியின் மருத்துவர் மோர்டன் போசென் ஒரு அறிக்கையில், “கிறிஸ்டியன் நலமாக இருக்கிறார், அவரே மைதானத்தை விட்டு நடந்து சென்றார். என் பார்வையில், பேஸ்மேக்கர் சரியாகச் செயல்பட்டது. அவர் சிறிது நேரம் சுயநினைவின்றி இருந்தார், ஆனால் மிக விரைவாக சுயநினைவு பெற்றார், நாங்கள் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டோம்,சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அவருக்கு தற்போது மருத்துவமனையில் மேலதிகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் அவருடனும் மருத்துவமனை மருத்துவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” என்று கூறினார்.

  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2020 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இதே வீரருக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. அப்போது அவரது இதயம் சுமார் ஐந்து நிமிடங்கள் நின்றுபோனது.கோபன்ஹேகனில் பின்லாந்துக்கு எதிராக டென்மார்க் விளையாடிய யூரோ 2020 போட்டியின்போது, எரிக்சன் ஆடுகளத்தில் சரிந்து விழுந்ததால், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே போட்டி இடைநிறுத்தப்பட்டது. தீவிர சிக்கிச்சையின் பின்னர் சுகமடைந்தார்.  

ஆறு மாதங்களுக்குப் பிறகு, எரிக்சன் பிரென்ட்ஃபோர்டில் தனது உதைப்ந்தாட்ட வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். 

டென்மார்க்கும் உக்ரைனும் இந்த ஆண்டுக்கான உலகக்  கிண்ணப் போட்டிக்குத்  தகுதி பெறவில்லை.

 

  

Tuesday, May 26, 2026

ஜெஸ்ஸி மார்ஷின் ஒப்பந்தத்தை 2030 ஆம் ஆண்டு வரை நீடித்தது கனடா


 தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் உடனான உப்பந்தத்தை  2030  ஆம் ஆம்டு உலகக் கிண்ணப் போட்டி வரை நீடிக்கும் வகையில் கனடாவுடன் நான்கு ஆண்டு கால ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜான் ஹெர்ட்மேனுக்குப் பிறகு 2024-ல் பொறுப்பேற்ற அந்த அமெரிக்கர், 2024 கோபா அமெரிக்காவில் கனடாவை நான்காவது இடத்திற்கும், கடந்த ஆண்டு அதன் மிக உயர்ந்த பீபா தரவரிசையான 26-வது இடத்திற்கும் வழிநடத்தினார்.

அமெரிக்கா  மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக்  கிண்ணப் போட்டியை  நடத்தவுள்ள கனடா, இத்தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்று, இந்த வார இறுதியில் தனது இறுதி அணியை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

 லீட்ஸ் யுனைடெட் , ஆர்.பி. லீப்ஜிக் அணிகளின் பயிற்சியாளராக இருந்த மார்ஷ், கனடா அணியுடன் 12 வெற்றிகள், 12 சமநிலைகள், ஐந்து தோல்விகள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.