Friday, June 1, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 4

ஸ்பெய்ன்  

ஸ்பெய்ன்
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் சாதிக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணி தகுதி பெற்றது. அதன் பின்னர் 2முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றும் தகுதியை இழந்தது. 12 வருடங்களின் பின் மீண்டும் ஸ்பெயின் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறது.
21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. ஐரோப்பிய கிண்ண சம்பியன் போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. முன்னதாக நடை பெற்ற அரை இறுதிப் போட்டியில் பெலாரஸுடன் விளையாடி 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செக் குடியரசு, உக்ரைனுடனான போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் இங்கிலாந்துடனான போட்டியைச் சமப்படுத்தியது.
அட்ரின், டேவிட் டி கி, செசர் அஸபிலியூட், அன்டர் ஹெராரே, ஒரி ஒல் ரொமியு ஆகியோர் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்கள். தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் சம்பியனான ஸ்பெயின் அணியில் விளையாடிய ஜுவன் மாதா, ஜவி மாட்டின் ஆகியோர் இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. அட்ரின் ஐந்து கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார்.
1920 ஆம் ஆண்டு அன்ட் வேட்பில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 1992 பார்ஸிலோனா ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் போலந்துடனான போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றது.
ஹொண்டூராஸ், ஜப்பான், மொராக்கோ ஆகியவற்றுடன் குழு "டி' யில் ஸ்பெய்ன் உள்ளது.
சுவிட்ஸர்லாந்து 
சுவிட்ஸர்லாந்து
ஒலிம்பிக் உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை 84 வருடங்களின் பின்னர் பெற்றுள்ளது சுவிட்ஸர்லாந்து. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் உதை பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் தாய் நாடு திரும்பினர் சுவிட்ஸர்லாந்து வீரர்கள். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ் டர் டமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விøயாடிய சுவிட் ஸர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. டென்மார்க்கில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 0  2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. 
முன்னதாக அரை இறுதியில் 2  0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வென்றது. ஐரோப்பாவின் பல கழகங்களில் விளையாடும் இளம் வீரர்கள் சுவிட் ஸர்லாந்து உதை பந்தாட்ட அணியில் உள்ளனர். 
மிக்கார்டோ லாட்றிக், ஒலிவர் பவ், சிகியூரி, வலன் ரின்ஸ் ரொக்கர் ஆகிய இளம் வீரர்கள் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பர். அட்மிர் மெஹதி மூன்று கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரைக் கட்டுப்படுத்துவது எதிரணி வீரர்களுக்கு சிரமமாக இருக்கும். 
மெக்ஸிகோ, வடகொரியா, கோபன் ஆகியவற்றுடன் குழு "பி'யில் உள்ளது சுவிட்ஸர்லாந்து
.ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12 

No comments: