Showing posts with label ர‌ஜினி. Show all posts
Showing posts with label ர‌ஜினி. Show all posts

Tuesday, November 18, 2025

கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம்


 கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி 

காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம் 

உலகநாயகன் கமலும், சூப்பர் ஸ்டார் ர‌ஜினியும் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் சூப்பரான வெற்ரிப் படங்கள் 1957 ஆம் ஆண்டு வெளியான அபூரவராகங்கள் படத்தில்  சிறிய வேடத்தில்  ரஜினி அறிமுகமானார்.

ஒரு சில காட்சிகளில்  மட்டும்  நடித்த ரஜினி  பின்னர் கமலுக்கு  இணையாகவும்  போட்டியாளராகவும் மாறினார். கமல், ரஜினி இருவரும் உச்சத்தித் தொட்ட நேரம் 13 படங்களில் மட்டும் நடித்து விட்டு இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என அறிவித்தனர். இவர்களின்  பிரிவு  ரசிகர்களை வருத்தப்பட  வைத்தது.  பின்னர் ரசிகர்கள்  மெளனமாக அதனி ஏற்றுக்கொண்டனர்.

 கமல், ரஜினி  இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை என்றாலும். அவர்களின் நட்பு பலமாக நீடித்தது.  ஆனாலும், இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள்.  சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்  முயற்சி செய்தார்கள். நட்பு வேறு நடிப்பு  வேறு என் பதில் இருவரும்  உறுதியாக இருந்தார்கள்.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கமலஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நஷனல் நிறுவனம் வெறியிட்டச் அரிவிப்பு  இந்தியத் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினியின் 173 ஆவது படத்தை ராஜ்கமல் இன்ரர் நஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர் சி இயக்குவார் என்ற‌ அறிவிப்பு திரை உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியி 173 ஆவது படம் வெளியாகும். அந்தப் படத்தில் படத்தில் கமல் நடிக்கவில்லை. தக்லைவ் படத்தின் மூலம் கமலுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே கம‌லுக்கு உதவி செய்ய ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சியில் திரை உலகம் மூழ்கியது. இரண்டு நாட்களாக இந்தச் செய்தி தீயாக வலம் வந்தது.

பழைய  இயக்குநர்களைக் கைவிட்டு, புதிய இயக்குநர்களை நாடிச் செல்லும் ரஜினி சுந்தர் சியின்  இயக்கத்தில் நடிக்க இருப்பது பேசு பொருளானது. நடிகரைப் ப் அற்றிக் கவலைப் படாமல் திரைக்கதையை நம்பிப் படம் எடுப்பவர்களில் சுந்தர் சியும் ஒருவர். சிரிப்பு, சென்ரிமென்ற்  போன்ரவற்றால் நசிகர்களைக் கட்டி வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர் சுந்தர் சி

அருணசலம் என்ற பிரமாண்டமான வெற்றிப் படத்தை  ரஜினிக்குக் கொடுத்தவர் சுந்தர் சி.  ரஜினியும் சுந்தர் சி யும் ஏற்கெனவே  இணைந்து  வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்கள்.

அன்பே சிவம் என்ற காவியத்தை கமலுகுக் கொடுத்தவர் சுந்தர் சி. கமலுடன் மாதவனும் அன்பே சிவம் படத்தில் நடித்தார். 

கமல், ரஜினி, சுந்தர் சி ஆகிய மூவரும் இணைந்து  பலமுறை  பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இந்த அறிவிப்பு  வெளியாகி இருக்கும். ஆகையால்  2026 ஆம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தார்கள்.

சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புப்பு  பேரிடியாக வந்தது சுந்தர் சியின்  அறிவிப்பு.

 தவிர்க்க முடியாத காரணங்காளைனால் ரஜினியின் 173 ஆவது படத்தில் இருந்து கனத்த  இதயத்துடன் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார். 

கமலின் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது தனது  வாழ்வில் மிகப்பெரிய கனவு என வும் சுந்தர் சி தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்த எல்லாம் சில நேரங்களில் நடப்பதில்லை. நாம் மூவரும்  பேசிக்கொண்டது என் வாழ்க்கையில் மற‌க்க முடியாத அனுபவம் எனவும் சுந்தர் சி தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் என்ன நடந்தது என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

சுந்தர் சி இயக்குவதை ரஜினி ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. கமலின் கட்டாயத்தினால்தான் ரஜினி ஒப்புக்கொண்டார் என சிலர் சொன்னார்கள்.  ஊகங்களும் யூகங்களும்  இந்தப் பிரச்சனையை பூதாகரமாக்கின. 

ஒதுக்கிய பட்ஜெட்டில், திட்டமிட்ட நாளில் படத்தி  வெளியிடும் திறமை சுந்தர் சி யிடம் இருக்கிறாது. அதனால்தான் கலம் அவரைத் தேர்வு செய்தார்.

கனவுப் படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேறக் காரணம் சம்பளப்ப் இரச்சனை  என சிலர் சொல்கிரார்கள்.  ரஜினிய இயக்கும் இன்ரைய இயக்குநர்களுக்கு 50 கோடி  ரூபா கொடுக்கப்படுகிறதாம்.  சுந்தர் சிக்கு 10 கோடி ஒதுக்கப்பட்டதாம். அவர் அதிகமாகக் கேட்டதைக்  கொடுக்க கமல் மறுத்துவிட்டாராம்.

கமலுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயுண்ட் நிறுவனம்  இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கமலும், திமுகவும்  இணையும் படத்தில் சுந்தர் சி இருக்கக்கூடாது என  பாரதீய ஜனதா குட்டையைக் குழப்பியதாகவும்  சில பதிவுகள் வெளியாகின. சுந்தர் சியின் மனைவி குஷ்பு  பாரதீய ஜனதாவின் தலைவர்களில் இருவராக  இருக்கிறார். ஆகையினால் சிலர் இதனை அரசியலாக்குகின்றனர். 

அரசியல் பதிவுகளால் ஆத்திரமடந்த  குஷ்பு டுவிட்டரிஒல்  காரசாரமான பதிவுகளை போட்டபின்னர் அதனை நீக்கினார்.

சுந்தர் சி  சொன்ன இரண்டு கதைகளும் ரஜினிக்குப் பிடிக்கவில்லை. ரஜினிக்குக் கதை பிடிக்கும் வரை கதை கேட்போம் என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.

ரஜினியிடம் சுந்தர் சி இரண்டு கதைகளைச் சொன்னாராம். இரண்டு கதைகளும் ரஜினிக்குப் ப்டிக்க வில்லையாம். அதனால்தான்  சுந்தர் சி விலகினார் என சாரப்பட கமல் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி போன்ற மாஸ் படத்தை ரஜினி விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான கதைகள்  சுந்தர் சியிடம் கட்டாயம் இருக்கும். ஆனால்,    ரஜினிக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக  உள்ளது.

10  வருடங்களுக்கு முன்னர் சுந்தர் சி இயக்கிய படம்  பெட்டிக்குள்  முடங்கி இருந்து இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. மூக்குத்தி அம்மன் 2 பட வேலையில் சுந்தர் சி மும்முரமாக  இருக்கிறார். அடுத்ததாக விஷாலின் படத்தை  இயக்க்ப் போகிறார்.அரண்மனை 5 கைவசம்  உள்ளது.

ரஜினி நிராகரித்த கதைகளை சுந்தர் சி   கட்டாயமாக வெளியிடுவார்.


Friday, October 18, 2013

அவமானப்பட்ட தமிழ் சினிமா

இந்தியாவில் சினிமா அறிமுகமான நூற்றாண்டு விழா என்ற பெயரில் தமிழகத்தில் நடந்த விழாவில் தமிழ் சினிமா அவமானப்படுத்தப்பட்டு  ஜெயலலிதாவின் புகழ் ஓங்கி ஒலித்தது. பத்துக்கோடி ரூபா செலவில் தமிழக அரசால் நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசியலை முன்னிறுத்தி கலைஞர்கள் புறக்கணிக்கப்படார்கள்.சினிமா நூற்றாண்டு விழா தமிழகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுமா  இல்லையா  என்ற பட்டிமன்றம் களைகட்டியது.
கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற நெருக்கடி அதிகரித்ததனால் நிலைமையைச் சமாளிப்பதற்காக கடைசி நேரத்தில் ஒப்புக்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழுடன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று அழைப்பிதழைப்பெற்று தனது மானத்தைக் காப்பாற்றிக்கொண்டார் கலைஞர் கருணாநிதி.

த‌மிழ‌க‌ அர‌சிய‌லும் சினிமாவும் ஒன்றையொன்று விட்டுப்பிரியாது பின்னிப்பிணைந்துள்ள‌ன‌.பேர‌றிஞர் அண்ணாவின் த‌லைமையிலான‌ திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் நாட‌க‌ம், சினிமா ஆகிய‌வ‌ற்றின் மூல‌ம் தன‌து கொள்கைக‌ளை வெளிப்ப‌டுத்தி ஆட்சிபீட‌ம் ஏறிய‌து.அறிஞ‌ர் அண்ணாவின் பின் க‌லைஞ‌ர் க‌ருணாநிதி முத‌ல்வ‌ரானார். க‌ருணாநிதியுட‌னான‌ ம‌ன‌க்க‌ச‌ப்பினால் க‌ட்சியை‌விட்டு வெளியேறிய‌  எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தை ஆர‌ம்பித்து ஆட்சியைக்கைப்ப‌ற்றினார். எம்.ஜி.ஆர் மறை‌ந்ததும் அவ‌ர‌து சினிமா ஜோடியான‌ ஜெய‌ல‌லிதா அர‌சிய‌லில் த‌ன‌து சுய‌ரூப‌த்தை வெளிப்ப‌டுத்தினார்.எம்.ஜி.ஆரின் ம‌னைவி ஜான‌கியையும் மூத்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளையும் புற‌ம் த‌ள்ளிய‌ ர‌சிக‌ர்க‌ள் ஜெய‌ல‌லிதாவை முன்னிலைப்ப‌டுத்தின‌ர்.
தமிழக அரசியலைப் போன்றே தமிழக சினிமாக் கலைஞர்களும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். கருணாநிதியும் ஜெயல‌லிதாவும் முதல்வராகும் போது அரசியலில் தம்மை வெளிப்படுத்தாத கலைஞர்கள் விழா எடுத்து மகிழ்வார்கள்.ஜெயலலிதா முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் சார்பில் விழா எடுக்க முயற்சி செய்யப்பட்டது. அதற்கான அனுமதியை ஜெயலலிதா வழங்கவில்லை. சினிமா நூற்றாண்டுவிழா தமிழகத்தில் நடைபெறும் என அரசு அறிவித்தது. அந்தப் பொன்னான நாளை எதிபார்த்துக் காத்திருந்த கலைஞர்களின் மனதை த‌மிழ‌க‌ அர‌சு  புண்ணாகிவிட்டது.


பாடல்கள் தான் தமிழ் சினிமா
வின் உயிர்நாடி.பாடல்கள் இல்லாது திரைப்படம் தயாரிக்க முடியாது.பாடத்தெரியாதவர்களினால் நடிக்க முடியாது என எழுதப்படாத விதி இருந்த காலத்தில் தனது கனல் தெறிக்கும் வசனத்தால் தமிழ் சினிமாவின் த‌லைவிதியை மாற்றி அமைத்த‌வ‌ர் கலைஞ‌ர் க‌ருணாநிதி.ப‌ராச‌க்தி,அர‌சிள‌ங்கும‌ரி,பூம்புகார் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் த‌மிழ்சினிமா புதிய‌ அத்தியாய‌த்தினுள் நுழைந்த‌து.பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே இசைத்த‌ட்டாக‌ வெளிவ‌ந்த‌ கால‌த்திலே க‌லைஞ‌ரின் திரைப்ப‌ட‌வ‌ச‌ன‌ங்க‌ளும் ஒலித்த‌ட்டாக‌ வெளியாகி ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ விற்ப‌னையாகின‌.க‌ருணாநிதி இல்லாத‌ சினிமா நூற்றாண்டுவிழா ம‌ண‌ம‌க‌ன் இல்லாத‌ திரும‌ண‌ வைப‌வ‌ம் போல‌ இருந்த‌து. இவ‌ர‌து க‌தை வ‌ச‌ன‌த்தில் உருவான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் எவையும் நூற்றாண்டு விழாவில் திரையிட‌ப்ப‌ட‌வில்லை.அறிஞ‌ர் அண்ணாவின் ப‌ட‌ங்க‌ளும் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.


 த‌மிழ் சினிமாவில் இன்று முன்ன‌ணியில் இருக்கும் க‌ம‌ல்,ர‌ஜினி,விஜய் அகிய மூவ‌ரும் திட்ட‌மிட்டு புற‌க்கணிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.முன் வ‌ரிசையில் அம‌ர‌வேண்டிய‌ சினிமாக் க‌லைஞ‌ர்க‌ள் பின்வ‌ரிசைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ன‌ர்.அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் முன் வ‌ரிசையில் இருந்து வேடிக்கை பார்த்த‌ன‌ர்.ஒஸ்கார் விருதின் மூல‌ம் இந்திய‌ சினிமாவை உல‌க‌ அர‌ங்கில் உய‌ர்த்திய‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான்,ராசூல் ஆகியோருக்கு அழைப்பித‌ழ் அனுப்ப‌ப்ப‌ட‌வில்லை. விருது பெறும் த‌குதி இவ‌ர்க‌ளுக்கு இல்லை என‌ த‌மிழ‌க‌ அர‌சு க‌ருதிய‌தால் விருது பெறுப‌வ‌ர்க‌ளின்பெய‌ர் ப‌ட்டிய‌லில் இவ‌ர்க‌ள‌து பெய‌ர் சேர்க்க‌ப்ப‌ட‌வில்லை.எம்.எஸ்.விஸ்வநாதன்,பாலும‌கேந்திரா,பார‌திராஜா,க‌வுண்ட‌‌ம‌ணி,வ‌டிவேல்,நாச‌ர்,சுசீலா,ஜான‌கி , ஸ்ரீ தேவி  போன்ற‌ ப‌ல‌ருக்கு விருது வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.

ந‌டிக‌ர் ச‌ங்க‌த்தின் முன்னாள் த‌லைவ‌ரும் எதிர்க்க‌ட்சித்த‌லைவ‌ருமான‌ விஜ‌ய‌காந்த்,வைர‌முத்து,விஜ‌ய‌குமார்,பிலிம்நியூஸ்ஆன‌ந்த‌ன்ஆகியோரைத்த‌மிழ‌க‌ அர‌சு க‌ண்டுகொள்ள‌வில்லை.எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த‌ அன்புவைத்திருந்த‌சாண்டோசின்ன‌ப்பாதேவ‌ர்,என்.எஸ்.கிருஷ்ண‌ன்,பி.யு.சின்ன‌ப்பா,தியாக‌ராஜ‌பாக‌வ‌த‌ர்,எம்.எஸ்.சுப்புல‌க்ஷ்மி,க‌ல்கி,முக்தாசீனிவாச‌ன்,ஆகியோரும் கால‌ ஓட்ட‌த்தில் ம‌ற‌க்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

ச‌ன்,க‌லைஞ‌ர் தொலைக்காட்சிக‌ளில் ப‌ங்குப‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ள் அனைவ‌ரும் புற‌க்கணிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.மீனா,சிம்ர‌ன்,விவேக் ஆகியோர் சிற‌ந்த‌ க‌லைஞ‌ர்க‌ளாக‌க்கணிக்க‌ப்ப‌ட்டு விருது வ‌ழ‌ங்கி கெளரவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.த‌மிழ‌க‌ அர‌சின் இந்த‌ எதேச்சாதிகார‌ போக்குக்கு எதிராக‌ எடிட்ட‌ர் லெனின் த‌ன‌து டுவிட்ட‌ரில் ப‌திவு செய்துள்ளார்.ம‌ற்றைய‌ அனைவ‌ரும் ம‌ன‌ம் குமுறினார்களேத‌விர‌ கொதித்து எழ‌வில்லை.அநியாய‌த்துக்கு எதிராக‌ வீராவேச‌மாக‌ப்போராடும் க‌தாநாய‌க‌ர்கள் அனைவரும்  கைக‌ட்டி மெள‌ன‌மாக‌த் த‌லை குனிந்து நின்றார்க‌ள்.