தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸுடன்
இணைந்து பலமான கூட்டணி அமைத்து
இரண்டு நாடாளுமன்றத்தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம், யாருடன்
கூட்டணிசேருவது எனத்தெரியாதுதடுமாறுகிறது.திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ்
ஆகியவற்றுக்கிடையேயான உறவு ஆட்டம் கண்டுள்ளது.
கூட்டணியை விட்டு யார் முதலில்
வெளியேறுவது என்ற சந்தேகத்துடனேயே இரண்டு
கட்சிகளும் உள்ளன.
இந்தியாவின் வடமாநிலத்தில் மோதும் மோடி அலை
தென் மாநிலத்தையும் பற்றிப்பிடித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற மோடியின் கூட்டத்தில் மற்றைய கட்சிகள் வியக்கும்
வகையில் மக்கள் திரண்டனர். மோடியால்
கவரப்பட்ட இளைஞர்கள் அதிகாலையில் கூடினர்.ஜெயலலிதாவல் புறக்கணிக்கப்பட்ட வைகோ, பாரதீய ஜனதாக் கட்சியில்
இணைவதற்குத் தயாராக இருக்கிறார். ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட விஜயகாந்துக்கு பாரதீயஜனதா வலை
விரித்துள்ளது.
ராகுல் காந்திக்குப் பிடிக்காத
அரசியல் தலைவர்களில்
கருணாநிதி முதலிடத்தில் உள்ளார்.
டில்லியிலிருந்து தமிழகத்து7க்கு விஜயம் செய்யும்
காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியைச் சந்திப்பதை
கொள்கையாகக் கொண்டுள்ளனர்.தமிழகத்துக்கு பல தடவைகள் விஜயம் செய்த
ராகுல் இதுவரை கருணாநிதியை சந்திக்கவில்லை.
ஆனால்,டில்லியிலிருந்து விஜயகாந்துக்கு
பிறந்த நாள் வாழ்த்து
தெரிவித்தார். கருணாநிதியைக் கைவிட்டு
விஜகாந்தின் முதுகில் சவாரி செய்வதற்கு விரும்புகிறார்
ராகுல்
ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப்படைத்தது காங்கிரஸ் கட்சி.
இலங்கையில் நடைபெறும் பொது
நல மாநாட்டைக்கையில்
எடுத்து காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைக்கிறது திராவிட முன்னேற்றக்கழகம். தமிழக அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்காரணமாக இலங்கையில்
நடைபெறும் மாநாட்டில்
மன்மோகன்
சிங் கலந்து
கொள்ளவில்லை.
மதிய அரசைத்தீர்மானிக்கும்
பலம்மிக்க
மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று.
இலங்கையை ஆபத்து
சூழ்ந்த வேளைகளில் எல்லாம் ஆபத்
பாந்தவனாக கை
கொடுத்து காப்பாற்றியது காங்கிரஸ்
அரசு. காங்கிரஸ்
கட்சியின் செல்வாக்கு
தமிழகத்தில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கூட்டணிக் கட்சியின்
ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாத
நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இலங்கையில்
நடைபெறும் மாநாட்டில் மன்மோகன்
சிங் கலந்து
கொண்டால் தமிழகத்தில் உள்ள கட்ட்சிகள் அனைத்தும்
காங்கிரஸைப் புறக்கனித்து விடும்
.
ஏற்காடு
இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு
ஆதரவு தரும்படி
கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பி உள்ளார்.
திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ,கருணாநிதிக்கு
ஆதரவு தெரிவிப்பார்கள். கருணாநிதியின் வேண்டுகோளுக்கு மத்திய மாநிலத்தலைவர்கள் யாரும்
இதுவரை பதிலளிக்கவில்லை.
காங்கிரஸின்
பிடியைக்கைவிட்டு மத்தியில் கூட்டணி அமைக்கக் காத்திருக்கும்
கரிணாநிதி தனது கடிதத்துக்கான பதிலை
ஆர்வமுடன் எதிர் பார்க்கிறார். இந்த
இஅடைத்தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிடம்
உள்ளது. தோல்வியடைந்தாலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்
என கருணாநிதி நினைக்கிறார்.
விஜயகாந்த
வேட்பாளரைநிறுத்தினால் ஏற்காடு இடைத்தேர்தலில்
இரண்டாவது இடம் யாருக்கு என்பதிலே கருணாநிதிக்கும்
விஜயகாந்துக்கும் இடையே
போட்டி இருக்கும் இந்த இடைத்தேர்தலில்
இரண்டாவது இடம் பெற்றால் இந்திய
நாடாளுமன்றத்தேர்தலின்
போது கூட்டணிக்கட்சியிடமிருந்து அதிக தொகுதைகளைப்பெறுவதற்காக பேரம் பேசலாம்
என விஜயகாந்தின்
கட்சியினர்
நம்புகிறார்கள்.கடந்த
வியாழக்கிழமைவரை
போட்டியிடுவதா இல்லையா என்றமுடிவை விஜயகாந்த் அறிவிக்கவில்லை.
இலங்கை மாநாட்டில் இந்தியப்பிரதமர் கலந்து கொள்ளாததற்கு தனது கட்சித்தலைவர்தான் காரணம் என்று
திராவிட முன்னேற்றக்கழகமும் ,அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகமு இடைத்தேர்தலில் முழங்கப்போகின்றன. ஏற்காடு இடைத்தேர்தலில் முள்ளிவாய்க்கால் நினைவு
முற்ற சுற்றுச் சுவர் இடித்தழிக்கப்பட்டது, முதலிடம் பெறப்போகிறது. இந்த
நினவு முற்றத்தை
உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்த பழ.நெடுமாறன்,வைகோ ஆகியோர் தேர்தல் களத்தில் இல்லை.நினவு முற்றத்துக்கு
ஆதரவு வழங்கிய இடதுடாரிகள் ஜெயலலிதாவின் அணியிலே உள்ளனர். இடத்தேர்தல் பிரசாரத்தின்போது இடது சாரிகள் இதைப்பற்றி
வாய்திறக்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத கருணாநிதிக்கும் விஜயகாந்துக்கும்
இது பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
மூன்று வருடங்களுக்குமுன்னர் முள்ளிவாய்க்கால் நினவு முற்ற கட்டட
வேலை ஆரம்பமானது.சட்டத்தை மீறிசுற்றுச்சுவர் அமைக்கப்பட இருப்பதாக அப்போது குற்றம் சுமத்தாதவர்கள்
திறப்பு விழாவின் பின்னர் இடித்தழித்ததன் பின்னணியில்
அரசியல் உள்ளது.
முள்ளி வாய்க்கால் நினைவு
முற்றத்திறப்பு விழாவைத்தடை செய்வதற்கு அரசு
பல நெருக்கடிகளைக்கொடுத்தது. தமிழக அரசின் முட்டுக்கட்டைகளுக்கு
மத்தியிலேயே திறப்பு விழா நடைபெற்றது.மன்மோகன் சிங் இலங்கைக்குச் செல்லக்கூடாது
என்று தமிழக சட்டசபையில் இரண்டு
முறை தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. இதற்காக தமிழ் ஆர்வலர்கள்
ஜெயலலிதாவுக்கு புகழ் மாலை சூட்டினார்கள்.
அந்த மாலை வாடுவதற்கிடையில் நினைவு
முற்ற சுற்றுச்சுவரில் கைவைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தை அரசியல்வாதிகள்
புரிந்து கொண்டனர். அப்பாவி மக்கள் ஜெயலலிதா
என்ற மாயையில் மூழ்கி உள்ளனர்.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தை
பிரபல்யப்படுத்தும் வேலைத் திட்டத்தை ஜெயலலிதா
முன்னெடுத்துள்ளார். எம்.ஜி.ஆர்
சமாதியில் பறக்கும் குதிரையில்ன் உருவில் இரட்டை இலை.
அந்த இரட்டை இலை பறக்கும்
குதிரயின் சிறகு என்றார்கல். அம்மா
குடிநீரில் இரட்டை இலை, தமிழக
சொகுசுப்பேரூந்தில் இரட்டை இலை. மக்களின்
கவனத்தில் இரட்டை இலையைப் பொறிப்பதில்
வெற்றியடைந்துள்ளார் ஜெயலலிதா.
வர்மா
சுடர் ஒளி 17/11/03
No comments:
Post a Comment