Sunday, November 24, 2013

சர்ச்சையில் விருது


சச்சின் என்றால் சாதனை. சர்ச்சையில் சிக்காதவர் என்று அவரது ரசிகர்கள் குதூகலித்துக் கொண்டிருக்கும் வேளையில் சச்சினுக்கு வழங்கப்பட்ட விருது தொடர்பாக  சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்ற அன்று அவருக்கு பாரத‌ரத்னா விருது வதாக அறிவித்து கெளரவித்தது இந்திய அரசு. இந்தவிருதை சில அரசியல் வாதிகள் அரசியலாக்கியுள்ளனர்.
சமூகசேவகர்கள் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாரத‌ரத்னா  விருது விளையாட்டு வீரர் ஒவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.விளையாட்டிலே சச்சினை விட சாதனை படைத்த விளையாட்டு  வீரர்கள்  இருக்க எதற்காகச் சச்சினுக்கு வழங்கப்பட வேண்டும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய  அரசாங்கத்தால் வழங்கப்படும் விருதுகளில் பாரத‌ரத்னா விருது  சிறப்பானது அன்னைதெரேஸா,   அர் அம்பேத்கார், எம்.ஜி.ஆர்.வீ. இராதாகிருஷ்ணன் ராஜாஜி, இந்திரா காந்தி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். நரேந்திரமோடி பிரதமராக  வேண்டும் என  பேட்டியளித்த லதா  மங்கேஷ்கரிடம் இருந்து பாரதரத்னா  விருதைப்பறிக்க  வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய மேல் சபையின் நாடாளுமன்ற  உறுப்பினராக சச்சினை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.ஆகையினால் இந்த விருது அரசியலாக்கப்பட்டுள்ளது.  கிரிக்கெட்டிலிந்து ஓய்வு பெற்ற சச்சின் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வார் என்ற செய்தி பரவியது. இதனை மறுத்த சச்சின் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஏன் இன்னனும் பாரதரத்னாவிருது வழங்கப்படவில்லை என்று கேட்டுள்ளார். மாநிலங்க ள‌வைத் துணைத்தலைவர் ரவிசங்கர்பிரசாந்த் மத்திய அமைச்சரான பாரூக் அப்துல்லாவும் வாஜ்பாயை சிபார்சு செய் கிறார். வாஜ்பாய்க்கு விருது வழங்காததை சுட்டிக்காட்டிய பாரூக் அப்துல்லா சண்டீஸ் கார் மாநிலம் உருவாவதற்கு வாஜ்பாய் செய்த சேவையை நினைவூட்டினார். மத்திய அமைச்சர்நிதீஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒலிம்பிக்போட்டியில் மூன்று முறை தங்கம் வென்று இந்தியா தலை நிமிர வழி வகுத்த‌ ‌ ஹொக்கி அணித்தலைவர் தியான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.இந்திய ஹொக்கி ஹாக்கி கூட்டமைப்பு இதற்கு  பரிந்துரை செய்துள்ளது.தியான்    சந்காலமாகிவிட்டார்.இறந்தவர்களுக்கும் இந்த  விருது வழங்கலாம் என்று 1945 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.


சச்சின்டெண்டுல்கார் பணம் வாங்கி கொண்டுதானே விளையாடினார்.கோடீஸ்வர ரான‌    சச்சினுக்கு இந்தவிருது வழங்கப்படக்கூடாது என்று  குமுறுகிறார். ஐக்கிய ஜனதாதலைவர்  சிவானந்திவாரி, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய இருவருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.செஸ்சம்பியன் ஆனந்துக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற  அபி ன‌வ் முகுந்துக்கும்  வழங்கலாம் என்ற கரு த்தும் எழுந்துள்ளது.

அர்ஜுன விருது துரோணாச்சாரிய விருது தியான் சந்த் விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்பன விளையாடடில் திறமையை  வெளிபபடுத்தும் இந்திய வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்படுபவை.
பாரத ரத்னா விருதுடன் பணம் வழங்கப்படுவதில்லை.பெயருக் கு  முன்னாலோ அல்லது பினன்னாலோ பட்டப் பெயரைப் பொறிக்க முடியாது. பிரதமரின்  பரிந்துரையின் பேரில் விருது  பெறுபவர்களின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார். ஒரு வருடத்தில் மூவருக்கு மாத்திரமே இந்த விருது வழங்கப்படும். இதுவரை 41பேர்இந்த விருதை பெற்றுள்ளனர். கலை, இலக்கியம், அறிவியல்,பொதுச்சேவை என்பனவற்றுக்காக வழங்கப்படும் இந்த விருதின் விதிமுறை சச்சினுக்காக மாற்றப்பட்டது..
இநிதியர்கள் அல்லாதநெல்சன் மண்டேலா கான் அப்துல் கான் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஈ.வே.ரா பெரியார் அறிஞ் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.ஆகையினால் அவர்களுக்கும் இந்த விருது வழுங்கவேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழத்தொடங்யுள்ளது. என்.டி. ஆருக்கு வழங்கவவேண்டும் என்று சந்திரபாயு நாடு கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானி  சி.என்.ஆர். ராவ்வுக்கும்  பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்க்பட்டுள்ளது. சச்சினின் பெயர் முன்னணியில் இருப்பதனாலட சீற்றமடைந்த அவரை அரசியல்வாதிகள் முட்டாள்கள் எனக் கூறியுள்ளார்

ரமணி

சுடர் ஒளி 24/11/13

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

இந்தியாவில் எல்லாவற்றிலும் அரசியல். சுருங்கச் சொல்லி விளக்கமாக சொன்னீர்கள்.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா.