Wednesday, November 27, 2013

குற்றவாளிக் கூண்டில் டெஹெல்காகா

இந்திய அரசியல்வாதிகள் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு வெளிப்படுத்திய   டெஹெல்கா வாரஇதழ் இன்று பாலியல் புகாரில் சிக்கி தவிக்கிறது.இணைய தளமாக ஆரம்பித்து புலனாய்வு மூலம் பிரபலமாகி  வாரவெளியீடாகவும்  வெளிவரும்  வின் டெஹெல்காநிறுவனத்தலைவர் தருண்தேஜ்பாலுக்கு எதிராகவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லக்ஷ்மண் இலஞ்சம் வாங்குவதை ஒளிப்பதிவு செய்து டெஹெல்கா . கெம்மில் வெளியட்டார் தருண்தேஜ் பால். அந்த ஒளிப்பதிவு இந்திய அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தருண்தேஜ் பாவின் பெயரை கேட்டதும் அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளும் அலறியடித்தனர். பங்காடு லக்ஷ்மணின் விவகாரத்தினால் இந்திய நாடாளுமன்றம் அல்லோல கல்லோப்பட்டது.
பேனை, சூட்கேஸ் ஆகிளவற்றில் பொருத்தப்பட்ட இரகசியக் கமராக்கள் மூலம் அந்தரங்கத்தில் நடப்பவற்றை  டெஹெல்கா அரங்கத்தில் ஏற்றியதால் தருண்தேஜ் பாலுக்கு பேட்டி கொடுக்க பலரும் பின்னடித்தார்கள். அரசியல் பலம், பணபலம் என்பனவற்றுக்கு எதிராகப் போராடி தக்கென ஒரு இடத்தைஉயரத்தில்  பிடித்து வைத்திருந்த   டெஹெல்கா பாலியல்புகாரினால் சரிந்து விழுந்துவிட்டது.
கோவாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெயஹல்காவில் பணிபுரிபவர் சென்றிருந்தனர். அப்போது தனது குழுவிலுள்ள இளம் பெண் பத்திரிக்கையாளர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தருண்ஜேபால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிப்டில் இருவரும் செல்லும்போது கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றதாகவும், அறைக்குள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தருண்பால் மீது குற்றம் சாட்டி அப்பெண் தனது தலைமையகத்துக்கு  தெரிவித்துள்ளார்.
அலுவலகத்துக்குள் மிக இரகசியமாக இருந்த இச்சம்பவம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.இளம் பெண்ணின் புகாரை விசாரித்த செய்தி ஆசிரியை சோமா  செளத்ரிரி இச்சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்த தருண்ஜேபால் மன்னிப்புக்கேட்டாகவும் இக்குற்றத்துக்குத் தண்டனையாக தருண்ஜேபால் ஆறு மாதங்கள் பணியிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக  பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ்ப்புVர் செய்யவில்லை. விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக டெயஹல்காவின் சோமா சாத்திரி கூறியுள்ளார்.
டெஹெல்கா    வினால் பாதிக்கப்பட்ட பலர் வெளியில் உள்ளனர்.அவர்கள் இதனை இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.டெயஹல்காவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு உள்ளது.ஆகையினால் இச்சம்பவம் மூடிமறைக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.அலுவலகங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விசாரணை விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.அப்படிப்பட்ட குழு டெஹெல்கா   .  நிறுவனத்தில் இல்லை என்றுசட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பெண் பொலிஸில் புகார் செய்யாவிட்டாலும் இதனை விநாரிப்பதற்கு உத்தரவிட் டுள்ளார். கோவாவின் முதமைச்சர் மனோஜ் பாரிக்.உத்தரவிட்டுள்ளார். தருண்ஜேபால் மீது குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. தருண்தேஜ்பாலுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்குதல் எல்லா பக்கங்களில் இருந்தும் முனைவிடத் தொடங்கியுள்ளது.புலனாய்வாய்  புகழ்பெற்றவர்அற்ப ஆசையில் அகப்பட்டுள்ளனர்.

 சுடர் ஒளி

24/11/13

No comments: