தமிழதமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற மகுடத்துடன் அரசியலை மறந்து இருந்த விஜயகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கண்விழித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்தித்தார்.விஜயகாந் தின் சுறுசுறுப்பைக்கண்ட ஊடகங்கள் அவரைப்பின் தொடர்ந்தன.அன்றைய தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் பிரகாசித்தார்..அடுத்தநாள் திங்கட்கிழமை வெளியான பத்திரிகைகளின் பக்கங்கள் விஜயகாந்தின் படங்களால் நிர ப்பினக சட்டசபைத்
தேர்தலின் போதும் இந்திய நடாளுமன்றத் தேர்தலின் போதும் விஜகாந்தின் வருகைக்காக துண்டு
போட்டு காத்திருந்தார் கருணாநிதி. இரன்டு முறையும் விஜயகாந்த் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவுடனும் நாடளுமன்றத்தேர்தலின்
போது பாரதீய ஜனதாக்கட்சியுடனும் இணைந்து கருணாநிதியை
குப்புறத்தள்ளிய விஜயகாந்த். கருணநிதியை தேடிச்சென்று
சந்தித்தார்.
கர்நாடக அரசு கட்டமுயற்சிக்கும்
மேகதூது அணை, தமிழக மீனவர் பிரச்சினை,செம்மரக்கடத்தல்
நிலம் கையகப்படுத்தல் முல்லைபெரியாறு ஆகியன
பற்றி பிரதமரை சந்திப்பதற்கு செல்லும் குழுவுக்கு
தான் தலைமை தாங்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் ஆசை ராமதாஸைத்தவிர அனைத்து தமிழகத்
தலைவர்களும் விஜயகாந்தின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை.
செங்கம்பளம் விரித்து
காத்திருந்தபோது அவமானப்படுத்திய விஜயகாந்தை மலர்ந்த முகத்துடன் கருணாநிதி வரவேற்றார்.
10 வருடங்களின் பின்னர் கருணாநிதியும் விஜயகாந்தும் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்ததாக கணிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு முன்னர் கட்சியை ஆரம்பித்தபோது கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்தார். விஜயாந்தின்
திருமண மண்டபம் வீதி அபிவிருத்திக்கு இடைஞ்சலாக இருப்பதனால் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின்போது கருணாநிதியைச்சந்தித்த
விஜயகாந்த இடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தினத்தந்தி
அதிபர் ஆதித்தனாரின் மறைவின் போது எதேச்சையாகச் சந்தித்து வணக்கம் தெரிவித்தனர்.
விஜயகாந்துடன்
கூட்டணி வைக்க கருணாநிதி பல முறை முயன்றும் வளைந்து கொடுக்காதவர் இப்போ கீழே இறங்கிவந்து கருணாநிதியை அவரது வீட்டில்
சந்தித்தார். இது விஜயகாந்துக்கு காட்டப்பட்ட சமிக்ஞையாகவும் கருத இடம் உண்டு திருமாவளவன் .ஜி.கே.வாசன்,இளங்கோவன்,சிதம்பரம்,வைகோ,தமிழிசை
செளந்தரராஜன் ஆகியோடையும் அவர் சந்தித்தார். தமிழக எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரயும்
சந்தித்து பிரமிப்பை ஏற்படுத்திஉள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸை
விஜயகாந்த் சந்திக்கவில்லை. சந்திக்க முயற்சி செய்ததாக அவர் கூறி உள்ளார். ராமதாஸ் தரப்பு அதனை மறுத்துள்ளது.
ராமதாஸுக்கும்
விஜயகாந்துக்கும் ஏழாம் பொருத்தம்.விஜயகாந்தின் தலைமையை ராமதாஸ் விரும்பமாட்டார். ஆகையினால் அவர் சந்திப்பை
தவிர்த்திருப்பார்.தமிழக மக்களின் பிரச்சினைக்காக தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும்
ஓரணியில் திரண்டதால் அரசியல் நோக்கர்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை
நல்ல பிள்ளையாக இருந்த விஜயகாந்த திங்கட்கிழமை
தனது சுய ரூபத்தைக்காட்டிவிட்டார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,கனிமொழி,திருச்சிசிவா,
தமிழிசை உட்பட 20 தமிழக அரசியல் பிரதமர் மோடியைச்
சந்தித்த விஜயகாந்த் பத்திரிகையாளர் மாநாட்டில்
தனது சண்டித்தனத்தைக் காட்டிவிட்டார்.
ஜெயா ரிவி தினமலர்
ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியினால் பாதியிலேயே வெளியேறினார். மைத்துனர் சுதீஷ் திரும்ப
அழைத்து வந்தார். பொது இடங்களி;ல் எப்படி நடப்பது
என்று விஜயகாந்துக்கு இன்னமும்தெரியவில்லை. பத்திரிகையாளர் முன்னிலையில் விஜயகாந்த்
கோபபடுவது புதிய விசயமல்ல. டில்லி,சென்னை, திநுச்சி என பட்டியல் மலேசியா வரை நிளூகிறது.
தமிழக மக்களுக்கான
நல்ல முயற்சியை இறுதியில் கெடுத்து விட்டார்.
தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க கருணாநிதி வகுக்க
உள்ள வியூகத்தில் விஜயகாந்த விழுந்து விட்டார்.
No comments:
Post a Comment