இந்தியாவில் நடைபெறும் பெப்ஸி ஐபிஎல்போட்டியில் கடைசி இடம் பிடித்த மும்பையும் பஞ்சாப்பும் முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையில் உள்ளன. சென்னை சுப்பர் குங்ஸ்,ராஜஸ்தான் ரோயல்ஸ்,ரோயல் சலஞ் பெங்களூர்,கொல்கத்தா நைற்ரைடர்ஸ்,சன்றைஸ் ஹைதராபாத்,டெல்லி டேர்டெவில்ஸ்,மும்பை இந்தியன்ஸ், கிங்லெவன் பஞ்சாப் ஆகிய ஆகிய எட்டு நகர அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் ஒன்பது போட்டிகளிலும் ஏனையவை ஏழு போட்டிகளிலும்விளையாடிவிட்டன. மும்பையும் பஞ்சாப்பும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு புள்ளிகளுடன் முறையே எழாம் எட்டாம் இடங்களில் உள்ளன.
ஹைதராபாத்,டில்லி ஆகியன ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தன ஆறு புள்ளிகளுடன் முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களில் உள்ளன.
பெங்களூர் கொல்கத்தா ஆகியன ஏழு போட்டிகளில்விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தன.ராஜஸ்தானுக்கு எதிராக இவை இரண்டும் விளையாடிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆகையால் ஏழு புள்ளிகளுடன் மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளன.
ஒன்பது போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தாந்தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.மழக் காரணமாக இரன்டு போட்டிகள் கைவிடப்ப்ட்டன. 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு ஆகியவறில் க்லக்கும் சென்னை 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.ஏழு போட்டிகளில் விளையாடிய சென்னை ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றது.குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் சென்னை ஆட்டமிழந்ததனால் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் களம் இறங்கிய எதிரணிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment