தமிழகத்துக்கும்
கர்நாடகாவுக்கும் இடையேயான அணைக்கட்டு பிரச்சினை மீணடும் பூதாகரமாக புறப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் அணைகட்டுவதற்கு
கர்நாடக அரசு முயற்சி செய்கிறது.
அந்தத்திட்டத்தை கர்நடக அரசு கைவிட மத்திய
அரசு வலியுறுத்த
வேண்டும் என தமிழகம் கோரிக்கை
விடுத்துள்ளது.
காவிரியின்
குறுக்கே இரண்டு இடங்களின் குறுக்கே
அணைகட்டுவதற்கு கர்நடக் அரசு திட்டமிட்டுள்ளது.முதலில் மேகதாது என்னுமிடத்தில்
அணைகட்டுவதற்கு நடவடிக்கை எடுகப்போவதாக அறிவித்துள்ளது.காவிடியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்டுவதை தடிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட
வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.அந்தத்
தீர்மானத்தை பிரதமரிடம் கையளீப்பதற்கு தமிழக எம்பிக்கள் அனைவரும்
செல்ல வேண்டும் என ஓ;பன்னீர்ச்ச்செல்வம்
வேன்டுகோள் விடுத்தார்.
தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க சகலம் கட்சி
எம்பிக்களும் இணைந்து பிரதமரை சந்தித்து
மகஜரை கையளித்தனர்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,சுதர்சன நாச்சியப்பன்,கண்ணதாசன்
ஆகியோர் இதிக் கலந்து கொள்ளவில்லை.
தமிழக முதல்வரின் கோரிக்கையை திராவிட முன்னேற்றக்கழக எம்பிக்கள்
அனைவரிம் ஏற்ருக்கொண்டு ஆச்சரியப்படுத்தி உள்ளனர். ஜெயலலிதா முதல்வர் ஸ்தானத்தில் இருந்திருந்தால் இப்படியான கோரிக்கையே விடுக்கப்பட்டிருக்காது.
தமிழக மக்களுக்காகாக அனைத்துக்கட்சிகளும்
ஒன்றிணந்து குரல் கொடுத்துள்ளன. இதே
நிலை நீடித்தால்
தமிழகம் முன்னேறிவிடும்.ஆனால் அடுத்த கட்டத்தில்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பின்வாங்கிவிட்டது.கர்நாடகத்துக்கு எதிரக தமிழகத்தில் பந்த்
நடைபெற்றது சகல கட்சிகளும் ஆதரவு
தெரிவித்தன.அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் மெளனமாக இருந்தது தமிழக
பாரதீய ஜனதாக் கட்சியும் ஒப்புதல்ளிக்கவில்லை.
கர்நாடக
மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே காவிரியின் குறுக்கே அணை கட்ட உத்தேசித்துள்ளதாக
கர்நாடகா கூறுகிறது. கர்நாடக மக்க்ளின் குடிநீர்
பிரச்சினையா தமிழக மக்களின் விவசாயப்
பிரச்சினையா முக்கியம் என்பதை தீஎமானிக்கவேண்டிய பொறுப்பு
மத்திய அரசின் தலையிலே சுமத்தப்பட்டுள்ளது.
காவிரியின்குறுக்கே
அணை கட்ட கர்நாடக அரசு
அனுமதி கோரவில்லை என மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்கூறி உள்ளார்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும்
காவிடிப்பிரச்சினை தொடர்கதையாகவே இருக்கும்
சூரன்.ஏ.ரவிவர்மா
No comments:
Post a Comment