கனவான் விளையாட்டுஎன்ற
மகுடத்துடன் உலகை வலம் வரும் கிரிக்கெற்றில் கனவான்கள் ஒரு சிலரே உள்ளனர். கிரிக்கெற்
ரசிகர்கள் பலர் கனவன்கலாக இல்லை. தனது நாடு வெற்ரிபெற வேண்டும் என்ற வெறித்தனம் அவர்களிடம்
உள்ளது.தனக்கு பிடிப்பு இல்லாத நாடு ஒருபோதும் வெற்ரியடையக்கூடது என்ற வெறுப்புணர்வு
பல ரசிகர்களிடம் உள்ளது. நடந்து நுடிந்த உலகக்கிண்ணப்போட்டியில் இந்திய கிரிக்கெற்
அணிமீது பல ரசிகர்கள் தமது வெறுப்புணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
பாகிஸ்தான்,தென்
ஆபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,,மேற்கு இந்தியத்தீவுகள், அயர்லாந்து.சிம்பாவ்வே
,பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றி
பல எதிரிகளை இந்தியாவுக்கு எதிராக உருவாக்கியது.பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய இரண்டு
நாடுகளும் இந்தியாவை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தன.அந்தநாட்டு ரசிகர்கள் இந்தியாவை
எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.ஆனால் இலங்கை ரசிகர்கள் இந்தியாவை எதிர்ப்பதற்கான
வலுவான காரனம் எதுவும் இல்லை.
பகிஸ்தான்.பங்களாதேஷ்,இலங்கை
ஆகிய நாட்டு ரசிகர்கள் இந்தியாவை வறுத்து எடுத்து விட்டனர். பேஷ் புக்,டுவிட்டர்,இளையதளம்
ஆகியவற்றில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கோலியும், அனுஷ்கா சர்மாவும் மிக மோசமாக
நையாண்டி பண்ணப்பட்டனர்.பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் நோ போல் கொடுத்த பாகிஸ்தானம்பயல்
அலிம் தாகிரையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை.
அவுஸ்திராலியாவிடம்
இந்தியா தோற்றதை வெற்றி விழாவாக கொண்டாடினார்கள்.தமது நாடு வெற்றி பெற்றதைப்போல் மகிழ்ந்தார்கள்.அரை இறுதியுடன் இந்தியா வெளியேறியதும்
தமக்கு ஆதரவு வழங்குமாறு நியூஸிலாந்து தலைவர் இந்திய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்தியாவை எதிர்க்கும்ரசிகர்களுக்கு
அது கோபத்தை உண்டாக்கியது. நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கினார்கள்.இந்திய ரசிகர்களிட்ம்
ஆதரவு கேட்ட நியூஸிலாந்து சம்பியனாகக்கூடது
என விரும்பினார்கள்.
இந்தியா பாகிஸ்தான்
ஆகிவற்றுக்கிடையே அரசியல் முரண்பாடு உள்ளது. பங்கலாதேசுக்கும் இந்தியவுக்கும் இடையேயான
பகைமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்ட பங்கலாதேஸுடன் பகமை பாராட்டு கிறது பாகிஸ்தான்.பாகிஸ்தானும் பங்களாதேஸும்
இந்தியாவை எதிரியாகவே பார்க்கின்றன.தமக்குள்ளே பகமை இருந்தாலும் இந்தியாவை எதிர்க்கும் போது ஒன்றகின்றன. இலங்கை ரசிகர்களும்
இந்தியாவுக்கு எதிராக இவர்களுடன் கைகோர்க்கின்றனர்.
இங்கிலாந்துக்கும்
அவுஸ்திரேலியாவுக்குமிடையேயானபோட்டி உலக மகா யுத்தம் போன்றது. ஆஷஷ் கிண்ணத்தை இழந்தால்
அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பத்திரிகைகளும் நார்நாராக கிழித்து விடுவார்கள்.நியூஸிலாந்துக்கும்
அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பகைமை வருடங்கள் பல கடந்தும் மறையவில்லை.
பகைமைகளின் மொத்த
உருவமான விளையாட்டை கனவான் விளையாட்டு என எப்படிக்கூறுவது?
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=44681&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=44681&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
No comments:
Post a Comment