கனவான் விளையாட்டான கிரிக்கெற்றில் புகுந்துள்ள ஆட்ட நிர்ணயசதி, ஊழல் என்பனவற்றை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கொன்சி குரெஞ்ஜே, அசாருதீன் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இவை இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.ஐபி எல் லில் அவ்வப்போது தலை காட்டிவந்த முறைகேடு நீதிமன்றத்தில் நிரூ பிக்கப்பட்டதால் சென்னை சுப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடுவதற்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான மெய்யப்பன்,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை நிர்வாகி ராஜ்குந் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுகள் நிரூபணமானதால்சென்னை ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இரண்டுவருட தடை விதிக்கப்பட்டது.
சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் சென்னை ரசிகர்களே அதிகம்.சென்னை விளையாடும் போட்டியைக்காண வரும் ரசிகர்களினால் மைதானம் நிரம்பிவிடும். சூதாட்டமும் உச்சக்கட்டத்தை அடைந்துவிடும்.
அணித்தலைவர் மாறாத ஒரே அணி சென்னைதான். டோனியின் தலைமையும் வீரர்களின் ஒற்றுமையும் சென்னையை அதிக இறுதிப்போட்டிகளில் விளையாட வகைசெய்தது. டோனி,ரெய்னா,ஜடேஜா,அஸ்வின்,பிராவோ என அணியின் நிரந்தர வீரர்களால் சென்னை பலமாக இருந்தது.பயிற்சியாளரின் பங்கும் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது.
சென்னைக்கு தடை விதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அணிக்குதான் நீதிமன்றம் தடைவிதித்ததே தவிர வீரர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.ஆகையினால் வீரர்கள் வேறு அணியில் விளையாட தடை இல்லை.சென்னை வீரர்கள் வேறு அணியில் விளையாடுவதை சென்னை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். ஐபிஎல் என்பது வருமானம் கொ ழிக்கும் விளையாட்டு இரண்டு வருடங்களுக்கு விளையாடாமல் இருக்க வீரர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகமே.
ரசிகர்களின் விருப்பமும் வீரர்களின் விருப்பமும் ஒன்றல்ல. இரன்டும் இரு வேறு திசைகளில் செல்வன.ராஜஸ்தானுக்கு விதிக்கப்பட்டதடை பற்றிஅதன் ரசிகர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தம்து ஆதங்கங்களை கொட்டித்தீர்த்துவிட்டனர்.சென்னை இல்லாத ஐபிஎல்லை எப்படிப்பார்ப்பது என ஆதங்கப்படுகின்றனர். சென்னையின் நட்சத்திர வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்க மற்றைய அணி உரிமையாளர்கள் தயாராக உள்ளனர்.
No comments:
Post a Comment