தலைவனின் கட்டளையை சிரமேல் தாங்கி
சிறப்பாக செய்து முடிப்பவர்களே தொண்டர்கள். தலைவன் இட்ட கட்டளையை மறுபேச்சில்லாது நிறவேற்றிய தொண்டர்களினால் தான் அரசியல்
கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்தன. ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது.
அதுபோல ஒரு கட்சியை இரண்டு தலைவர்கள் வழிநடத்த முடியாது. ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியில் இரண்டு தலைவர்கள்
இருப்பது போன்ற தோ ற் ற பாடு எ
ழுந்துள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்குமிக்க
சில அரசியல்வாதிகளும்
தோழமைக்கட்சித்தலைவர்களும்
ஜனாதிபதி மைத்திரியின் தமைமைத்துவத்தை விரும்பவில்லை. அவர்கள் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்தவை முன்னிலைப்படுத்த வேன்டும் என விடாப்பிடியாக நிற்கின்றனர்.
மஹிந்த இழந்த அதிகாரங்களை மீண்டும் அவரின் கையில் திணிக்க வேன்டும் என கங்கணம்
கட்டுகிறார்கள்.
அரசியல் சூழ்நிலைக்கைதிபோன்று
அவர்களின் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி இருப்பது போன்ற தோற்றப்பாடு
எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகுலுக்க விரும்பாத ஜனாதிபதி
மைத்திரி அவருக்கு வேட்புமனு வழங்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு
பொய்த்துப்போனது.பொதுத்தேர்தலில் மஹிந்த
போட்டியிடுவார் அடுத்த பிரதமர் அவர்தான் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்துக்கூறி
வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் மஹிந்த
போட்டியிடுவ்பது உறுதியானதும் ஜனாதிபதியின் கருத்தை அறிய அனைவரும்
விரும்பினர். நீண்ட மெளனத்தின் பின்னர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தர மாட்டேன் என வாய்திறந்தார் ஜனாதிபதி
மைத்திரி. ஜனாதிபதியின் வார்த்தையினால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கலக்கமடைந்தது.
ஐக்கிய தேசியக்கட்சி மகிழ்ச்சியின் உச்சத்துக்குச்சென்றது.
தனது கட்சியில் போட்டியிடுபவருக்கு
ஆதரவு தரமாட்டேன் என கட்சித்தலைவர் ஒருவர் கூறுவது எத்தகைய கசப்பான
சொல் என்பதை சாமானியரும் அறிவர். தேர்தலில்
போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் கட்சி இரண்டாக
உடைந்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் வெள்ளிப்படையாக கூறினர். மஹிந்தவுக்கு
அனுமதி வழங்கப்பட்டதனால் ஹிருணிகாவும்
செல்வாக்குமிக்க சிலரும் ஐக்கியதேசியக் கட்சிக்கு மாறிவிட்டனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி இரண்டாகிவிட்டது இப்போது செல்வாக்கு மிக்க இன்னும் சிலர்
வெளியேறிவிட்டனர். கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் பரவாயில்லை. அடுத்த பிரதமர் மஹிந்ததான் என்று அவரது ஆதரவாளர்கள்
உறுதியாகக் கூறுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் கட்சித்தலைவரினாலேயே
முன்னெடுக்கப்படுவது வழமை. கட்சித்தலைவர் ஜனாதிபதி மைத்திரிக்கு விருப்பம்
இல்லாத மஹிந்தவின் தலைமையில் பரப்புரை நடைபெறுகிறது. அநுராதபுரத்தில் நடைபெற்ற
முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கட்சித்தலைவர் மைத்திரியின் கட்டவுட்கள் கண்ணில் தெரியவில்லை.
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்க
சட்டத்தில் இடம் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ. பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
இல்லை என முன்னாள் அமைச்சர்களான ஜி.எல் பீரிஸ், பந்துலு குணவர்தன ஆகியோர்
தெரிவிக்கின்றனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால் மஹிந்ததான் பிரதமர்
என்பதில் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.ஜனாதிபதி மைத்திரி பால
சிறிசேன இதற்கு எதிர் மாறான கருத்தைக்கொண்டிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தோழமைக்கட்சிகளும்
மஹிந்த பிரதமராகக்கூடாது என்பதை மனதில் வைத்து காய்நகர்த்துகின்றன.
ஜேவிபியும் மஹிந்தவுக்கு எதிராக களத்தில் நிற்கிறது. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு
ஆதரவு தெரிவிக்கவில்லை.ரணிலின் தலைமையில் தேசிய அரசாங்கம் என்பதே ஐக்கிய
தேசியக்கட்சியின் தாரக மந்திரம். இத்தாரக மந்திரத்தால் கவரப்பட்ட கட்சிகள்
ரணிலின் கரத்தைப் பலப்படுத்த தயாராக உள்ளன.
No comments:
Post a Comment