இலங்கை அரசியல் வரலாற்றில் காணாமல்போன
சைக்கிளை மீண்டும் மக்களின் முன்னால்
காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த
சைக்கிள் உதய்சூரியனின் வெளிச்சத்தில் சந்திக்குவந்தது.உதய சூரியனின் ஆதரவு இல்லாமையால் புதியவர்களுடன் வீடு
அணிசேர்ந்தபோது சைக்கிளும் ஒட்டிக்கொண்டது. ஆசன ஒருக்கீட்டில் திருப்தியடையாத
சைக்கிள் தனிப்பயணம் செய்தது. தேர்தலில்
தோல்வி நிச்சயம் எனத்தெரிந்ததனால் தேர்தல்களைத் தவிர்த்து வந்தது.பல சகாப்தங்களாக
ஓடாமல் முடங்கி இருந்த சைக்கிளில் பாராளுமன்றத்துக்கு ப்போகலாம் என்ற நப்பாசை
சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
திருவிழாக்கால கடைகள் போன்று தேர்தல் காலத்தில் சில அரசியல் கட்சிகளும்
சுயேட்சைகளும் கடை விரிப்பது வழமை. தமிழ்
வாக்குகளைச் சிதறடிக்க பலதிசைகளிலும் இருந்து வேலைத்திட்டங்கள் முடுக்கி
விடப்பட்டுள்ளன.சைக்கிளும் தன் பங்குக்கு வாக்குகளைத்திசைதிருப்ப சுயநிர்ணயம்,தாயகம்,தேசியம்
என்ற கோஷ்ங்களை முன்வைத்துள்ளது,
சைக்கிளுக்கு விழும் வாக்குகளை வைத்துக்கொண்டு
தாயகம் தேசியம், சுயநிர்ணயம்
என்பனவற்றை தமிழ் மக்கள் எப்படி நேசிக்கிறார்கள் என எதிரிகள் சிலாகிப்பதற்கு
வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். தாயகமும் சுயநிர்ணயமும் வடக்கு மக்களுக்கு
மட்டும்தான் வேண்டுமா கிழக்கு மக்களுக்கு வேண்டாமா என்ற கேள்விக்கான பதில்
இவர்களிடம் இல்லை.
ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் கருத்து பேதம்
ஏற்பட்டதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தந்தை செல்வா வெளியேறி தமிழரசுக்கட்சியை
ஆரம்பித்தார். அன்று காணாமல் போன சைக்கிள் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற கட்சியுடன்
மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தது.எதிரும் புதிருமாக இருந்த தந்தை
செல்வாவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் ஒன்றாகியது தமிழர்களில் பலத்தை வெளி உலகுக்கு
வெளிப்படுத்தியது.இவர்களுடன் மலையக அரசியல் தலைவர் தொண்டமான்
கைகோர்த்தது இலங்கை தமிழர்களின் ஒற்றுமையை
வெளிப்படுத்தியது. அரசியல் கால நீரோட்டம் மூன்று கட்சிகளையும்
பிரித்தது.
தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு
பாராளுமன்றத்தினால் முடியாது என முட்டுக்கட்டை போட்டவர்கள் பாராளுமன்றம்
செல்லும் வழி பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் கொடுக்கும் ஆணையின் வாக்குப் பலத்தை குறைப்பதே சைக்கிள் சின்னத்தில்
தேர்தலில் நிற்பவர்களின் குறிக்கோள். பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை, மாகாணசபை
தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி
பெறுவோம் என்ற நம்பிக்கை எப்படி ஏற்படும்?
இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பதைவிட தமிழ்
தேசிய கூட்டமைப்பை எதிர்ப்பதே இவர்களின் குறிக்கோள். தேதலில் வெற்ரிபெற்றால்
என்ன செய்யப்போகிறோம் என இவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை. தம்து
அரசியல் திட்டம் பற்றி தெளிவுபடுத்தவில்லை. சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு
ஆங்காங்கே சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
தமிழ் மக்களி வாழ்வாதாரம்
திருப்திகரமாக இல்லை அவர்களின் அடிப்படித்தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
முகாம் வாழ்க்கை முற்றுப்பெறவில்லை சொந்த நிலத்தில் குடியேற நீதிமன்றபடி ஏற
வேண்டி உள்ளது.இவைகளில் சிலவற்றையாவது பூர்த்தி செய்திருந்தால் சைக்கிளை மக்கள்
திரும்பி பார்த்திருப்பார்கள்.
No comments:
Post a Comment