பாராளுமன்ற்த்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் களம்
சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்திருந்தவர்கள்
சுறுசுறுப்பாக வேட்புமனுவைத்தயாரிக்கத்தொடங்கி விட்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில்
உள்ள அரசியல் கட்சிகள் விழிப்புடன் பணியாற்றுகின்றன.
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் களம் பல
முனைகளில் திறக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக கடையை விரிக்கும் சுய
இச்சைக்குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளன. இன்னொருவரின்
இச்சையைப்பூர்த்தி செய்ய சுயேட்சைக்குழுக்கள் பாராளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத்தயாராகிவிட்டன.
யாழ்மாவட்டத்தில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் மாவை
சேனாதிராஜா, எஸ்.சிறீதரன்,சுரேஸ்
பிறேமச்சந்திரன்,ஈ.சரவணபவன்,அ.விநாயகமூர்த்தி ஆகிய
ஐந்துபேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள். ஜன நாயக மக்கள் சுதந்திர கூட்டணியில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் தேவானந்தா,முருகேசு சந்திரகுமார், செல்வஸ்திரி
தேவானந்த அலஸ்ரின் ஆகிய மூன்று ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஐக்கியதேசியக்கட்சியின் சார்பில் விஜயகலா
மகேஸ்வரன் வெற்றி பெற்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்
பட்டியலில் உள்ள மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சுமந்திரன்,
ஈ.சரவாணபவன்,எஸ்.சிறீதரன், சுரேஷ் பிறேமச்சந்திரன்,சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டக்ளஸ் தேவானந்தா தனது கட்சி
சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார்
இத்தனை காலமும் கதிரையில் அடைமானம் வைக்கப்பட்டிருந்த வீணை
தூசிதுடைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.சுதந்திரக்கட்சியின்
தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய ஈபிடிபி சுதந்திரமாக தேர்தல் சந்திக்கிறது.
ஈபிடிபியின் ஆதரவு இருந்தபோது ஒரு
உறுப்பினரைக்கூட பெறமுடியாத ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி தனியாக களம் இறங்கி தனது பலத்தை பரிசோதிக்க உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய அங்கஜன் மைத்திரி
ஜனாதிபதியானதும் அவரின் பக்கம் சாய்ந்தார். சுதந்திரக்கட்சியின் பலம்
என்ன என்பதை தேர்தலின் பின்னர் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
எப்படியாவது ஒரு இடம் கிடைக்கும் என
விஜயகலா எதிர்பார்க்கிறார்.ஐக்கிய தேசியக்கட்சியும் அவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளது.தேசியம் என்ற கோஷ்த்துடன் கஜேந்திரகுமார் வெளிப்படுகிறார்.இவர்களுக்கிடையில்
அனந்தியும் முன்னாள் போராளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு வித்தியாதரனும் தேர்தலுக்கு
முகம் கொடுக்க தயாராகின்றனர்.
No comments:
Post a Comment