இந்திய இலங்கை கிரிக்கெற்
அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையின் ஆரம்பமாகவும் சங்ககாரவின் கிரிக்கெற் வாழ்க்கையின்
முற்றுப்புள்ளியாகவும் அமைய உள்ளதுஇந்திய
கிரிக்கெற் அணிக்கு தலைமை ஏற்ற கோலியின்
முழுமையான முதல் டேஸ்ட் தொடர் இது. . அவுஸ்திராலியாவில் இந்திய அணி தடுமாறியபோது
அப்போதைய அணித்தலைவர் டோனியின் மீது கடும் விமர்சனங்கள் விழுந்தன.டெஸ்ட் தொடர்
முடியுமுன்னரே தலைவர் பதவியில் இருந்து டோனி விலகினார். கோலி தலைவராக
உயர்த்தப்பட்டார்.பங்களாதேஷுடனான ஒரே ஒருதொடர் மழைகாரனமாக கைவிடப்பட்டது
அப்போட்டியில் இந்தியா எழுச்சி பெற்றது.
கோலி
தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு
வந்துள்ளது. கோலியின் தலைமையில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள்போட்டி,ரி20,டெஸ்ட்
ஆகியமூன்றிலும் தோல்விடைந்த நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை.பாகிஸ்தானின்
ஸ்பினர் யாஷின்ஷா இலங்கையின் விக்கெற்களை தனது பொக்கெற்ரில் நிரப்பினார்.
இந்திய ஸ்பின்னர்களான அஸ்வின்,ஹர்பஜன்சிங், அமித்மிஸ்ரா ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
அஸ்வின்மீது கோலி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அனுபவ வீரர் ஹர்பஜன் கலக்குவார்.
நான்கு வருடங்களுக்குப்பின் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மிஸ்ரா இடத்தை தக்கவைக்க
போராடுவார்.ஷிகர் தவன், முரளி விஜய், புஜாரா ,விராட்
கோலி, அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல். வேகப்பந்துவீச்சாளர்கள்: வருண் ஆரோன், புவனேஷ்வர்
குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய அணி வீரர்களாவர்.
ஓய்வுபெறப்போகும் சங்ககாரவுக்கு டெஸ்ட்
வெற்றியை பரிசளிக்கப்போவதாக இலங்கைஅணித்தலைவர்மத்தியூஸ்அறிவித்துள்ளார்.மத்தியூஸ்,திரிமானே,சமீரா சண்டிமால்,சங்ககார,ரங்கணஹேரத
கெளசால் உபுல்தரங்க என வலுவான வீரர்கள் இலங்கை அணியில் உள்ளனர்.
பிரட்மனின் இரட்டைசதத்தை சங்ககார சமப்படுத்த இன்னமும் ஒரு இரட்டை சதம் மட்டும்
தேவை. அந்த சாதனை மைல்கல்லுடன் சங்ககார விடைபெற வேண்டும் என அவரது ரசிகர்கள
எதிர்பார்க்கின்றனர்.இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றி 22 வருடங்களாகின்றன. அந்த சாதனையை நிலை
நாட்ட துடிக்கிறார் கோலி
No comments:
Post a Comment