இந்தியப்பிரதமர் மோடியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்தது இந்திய அரசியல் அரங்கில்
சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைகளை உருவாக்குவதில் இருவரும் வல்லவர்கள்.
சர்ச்சைகளை தமக்கு சாதகமாக்கி வெற்றி பெறுவதில் இருவரும் அசகாய சூரர்கள்.
ஆகையினால் இந்தச்சர்ச்சைகளை எப்படிச்சமாளிப்பது என்பதை இரண்டு தலைவர்களும் நன்கு
அறிவார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு
நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா
மேன்முறையீட்டின் மூலம் விடுதலையனார்.நீதிபதி குமாரசாமியால் ஜெயலலிதா விடுதலை
செய்யபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா
விடுதலை செய்யப்பட்டதற்கு நீதிபதி குமாரசாமி கூறிய கணக்கு வழக்கை சாதாரண மக்களே
ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இரண்டு தலைவர்களின் சந்திப்பும் அரசியல் அரங்கில்
புதிய சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இந்தியப்பிரதமர் தமிழகத்துக்கு விஜயம்
செய்யும்போது முதலமைச்சர் விமானநிலையத்துக்குச்சென்று வரவேற்பது மரபு.ஜெயலலிதாவும்
அதையே பின்பற்றினார். ஆனால் அவர் விமானநிலையத்துக்ச் சென்ற நேரம்தான் சரியில்லை.
எதற்கும் நேரகாலம் பார்த்து செயற்படும் ஜெயலலிதாவின் நேரத்தை அவரது அரசியல்
எதிரிகள் சுட்டிக்காட்டியுளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் இருந்து
விடுபட்ட ஜெயலலிதா பொது இடங்கள் எங்கேயும் வெளிப்படவில்லை.
முதல்வரானது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என அவரது விசுவாசிகள்
எதிர்பார்த்தனர். அவற்றை எல்லம் பொய்யாக்கிவிட்டு அமுக்கமாக தனது கடமைகளை
செய்துவருகிறார் ஜெயலலிதா. இந்தநூற்றான்டின் இணையற்ற அரசியல்வாதியான
அப்துகலாமுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவே ராமேஸ்வரத்தில் திரண்டிருக்க ஜெயலலிதா ராமேஸ்வரப்பக்கம் எட்டியே பார்க்காது பிரதமரை
வரவேற்க விமானநிலையம் சென்றதை அவரது அரசியல் எதிரிகள் கெட்டியாகப்பிடித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஒருபடிமேலே போய் சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து
ஜெயலலிதாவின் வீட்டுக்குச்சென்று அவரைச் சந்தித்தார்.
பிரதமரைத் தேடிச்சென்று முதலமைச்சர் சந்திக்கும் வழமையான நடைமுறை உடைத்தெறியப்பட்டு
முதல்வரை வீடுதேடிச்சென்று பிரதமர் சந்திக்கும் சடங்கு அரங்கேறி உள்ளது.
ஜெயலலிதாவின் உதவி மோடிக்கு மிக அத்தியாவசியமாகத்தேவைப்படுகிறது.அதனால்தான்
அரசியல் விதிமுறைகளை எல்லாம் மீறி ஜெயலலிதாவின் வீடுதேடிச்சென்றார். பாரதீய
ஜனதாக் கட்சியின் வெற்றிகளின் பின்னால் இருக்கும் அமித்ஷா தமிழகத்தில் கட்சித்தொண்டர்களைச்சந்தித்து
ஊழல் அரசியலை அடியோடு அகற்ற வேண் டும் என சபதம் எதுத்த வேலயில் ஜெயலலிதாவை
மோடி தேடிச்சென்றது அரசியலில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் மோடிபலமானவராக இருந்தாலும் மேல்சபையில்
பலமில்லாதவராகவே இருக்கிறார். ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால் மேல்சபையிலும்
மோடி தனது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டலாம். பாரதீய ஜனதாக்கட்சி அண்ணா
திராவிட முன்ன்னேற்றக்கழகம் ஆகியவற்ருக்கிடையே ஒப்பந்தம் எதுவும் இல்லை.
ஆயினும் இரன்டும் ஒன்றை ஒன்று அரவணைத்தே செல்கின்றன.
ஜெயலலிதாவும் மோடியும் சந்தித்தது புதிய அரசியல் கூட்டணிக்கு
அச்சாரமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.தமிழகத்தில்கால்
பதித்து கட்சியை வளர்க்க வேன்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. தன்னுடன் இணந்திருந்த
செல்வாக்கு மிக்க கட்சிகள் எல்லாவற்றையும் ஜெயலலிதா புறம் தள்ளி
விட்டார்.தமிழக சட்ட மன்றத்தேர்தலிலும் தனித்து போட்டியிடும் எண்னத்திலேயே இருக்கிறார் ஜெயலலிதா.
No comments:
Post a Comment