தமிழகத்தில்
மதுக்கடைகளை மூடி பூரணமது விலக்கு அமுல் படுத்த வேண்டும் எனப்போராடிய
காந்தியவாதி சசி பெருமாளின் உயிர் போராட்ட
களாத்திலேயே பிரிந்தது. மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் அவ்வப்போது எழுவதும்
பின்னர் அடங்குவதும் வழமையானது. அரசியல் கட்சிகள் மதுவிலக்குக்காக போராடிவிட்டு அமையடைந்து
விடுகின்றன. சசி பெருமாள் போன்ற காந்தியவாதிகள் தனிமனிதர்களாக ஆங்காங்கே போராட்டத்தை
ந டத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள
உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் மதுக்கடை ஒன்று உள்ளது. கோயில், பாடசாலை ஆகியன இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை
அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன்
தலைமையில் அந்த ஊர் மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு இயந்திரம்
செவிசாய்க்காத நிலையில், கடையை அகற்றக்கோரி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, கடையை அகற்ற உத்தரவு பெற்றார்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் மதுக்கடையை கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும்
ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில்
குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் திகதிக்குமுன் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும்
உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் திகதி வரை கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக
அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள்
மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் 31ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர். அப்போது, மண்ணெண்ணெய் மற்றும்
தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில்
ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.
தகவல் அறிந்து தீயணைப்பு
வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார்.
ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில்
இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில்
தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர்
மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி
எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக
சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த
மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம்
இளம்பிள்ளை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சசிபெருமாள். அவருடைய
தந்தை மூலம் சிறு வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். விவசாயமும்
சித்த மருத்துவமும் செய்து வந்தார். ''அப்பாவிடம் சிகிச்சைக்கு வரும்
பல நோயாளிகள் குடிகாரர்களாகவே இருந்தனர். அவர்களைத் திருத்த அப்பா ரொம்பவும்
கஷ்டப்பட்டார். சம்பாதித்த பணத்தை எல்லாம், மது குடிப்பவர்களைத் திருத்தவே
செலவு செய்தார். ஆனாலும், அவருடைய முயற்சியில் வெற்றிபெற
முடியவில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகள் பெருகிக்கொண்டே போக, பலரும் சம்பாதித்த பணத்தை
எல்லாம் குடும்பத்துக்குத் தராமல் குடிக்கவே செலவு செய்தனர். மதுவால் ஏராளமானோர்
பாதிக்கப்படுவதை, அப்பாவால் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. இவர்கள் எல்லாம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பூரண மதுவிலக்குத் தேவை என்று
அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார்'' என்கிறார் சசிபெருமாளின் மகள்
விவேக்.
மதுக்கடைகளை உடனே
மூடச்சொல்லி சசிபெருமாள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், முதலில், தீவிர மதுக்கட்டுப்பாட்டையாவது
கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ''மதுக்கடைகளின் எண்ணிக்கையைக்
குறைக்க வேண்டும். விற்கும் நேரம் குறைக்கப்பட வேண்டும். புதிய இடங்களில் கடைகள்
திறக்கப்படக் கூடாது. பார்களை மூட வேண்டும். பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்சசிபெருமாளின்
தகப்பன் கந்தீயவாதி. அவர் வழியில் வந்த சசிபெருமாளும் காந்தீயத்தில் அசையாத
நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய வாழ்வு மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில்
பிரிந்துவிட்டது.உயிரைக்கொடுத்து மதுக்கடைக்கு எதிராக சசிபெருமாள் போராடினாலும்
அவற்றை அகற்ற தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுக்கடைகளுக்கும் மதுப்பிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
மதுவிலக்கை
அமுல்படுத்துமாறு ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
அரசியல் கட்சிகள் சசிபெருமாளை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை நடத்துகின்றன. கல்லூரிமாணவர்களின் போராட்டம்
வன்முறையாக உருவெடுத்துள்ளது. மதுகடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக
மாறியதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக அரச இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசியல்தலைவர்கள்,தொண்டர்கள்,மாணவர்கள்,மாணவிகள் என அனைவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
உணர்வுபூர்வமான
தொடர்ச்சியான போராட்டங்களினால் அடுத்து என்ன செய்வதெனத்தெரியாதுதடுமாறுகிறது
தமிழக அரசு.அரச ஊழியர்களின் போராட்டத்தை பொலிஸாரின் அராஜகத்தின் மூலம்
அடக்கியதால் அண்ணா திரவிடமுன்னேற்றக்கழகம் முன்னர் ஆட்சியை இழந்தது.
அதேபோன்ற ஒருநிலமை இப்போதும் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான கட்சிகள்
இதனை திட்டமிட்டு தமக்கு சாதகமாக மாற்றுகின்றன.இடதுசாரிககட்சிகள்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலைச்சிறுத்தைகள் ஆகியன் இணைந்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
விஜயகாந்தும் காங்கிரஸ்கட்சியும் தாமாகவே முன்வந்து போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்தன. திராவிட முன்னேற்றக்கழகம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி போராட்டத்துக்கு
அழைப்பு விடுத்துள்ளது. இந்தக்களேபரங்களுக்கிடையில் ஜெயலலிதாவைச் சந்திக்க மோடி தமிழகத்துக்கு
வருகிறார்.
மதுவுக்கு
எதிரான போராட்டம் ஜெயலலிதாவை மட்டுமல்லாது டாக்டர் ராமதாஸையும் கிலிகொள்ள
வைத்துள்ளது.ம்து, புகைத்தல் என்பனவற்ருக்கு எதிராக
தான் மட்டும் தான் போராட வேண்டும் என எண்ணி உள்ள ராமதாஸ் இதனை ரசிக்க
வில்லை. தமிழக முதலமைச்சராக அன்புமணி பதவி ஏற்றதும் மதுவிலக்கை அமுல்படுத்தும் கோப்பில்
கையெழுத்திடுவார் என அறிவித்த ராமதாஸ் கலங்கிப்போயுள்ளார்.
மதுபானக்கம்பனிகளின்
உரிமையாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசியல்வாதிகளின் பாதுகாப்பு அவர்களுக்கு
உள்ளது அரசியல் வாரிசுகளும் உரிமையாளர்களாக உள்ளனர். திமுகவின் வாரிசுகளும்
உரிமையாளர்களாக உள்ளனராம் வைகோவின் மகன் புலையிலை கொம்பனியின் பங்குதாரராம்.
மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு
தமிழக அரசு ஏழு இலட்சம் ரூப நஷ்ட ஈடாக வழங்கி உள்ளது. அவரின் மனைவிக்கு
அரசு வேலை கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. மதுக்கட்ஃபைகளுக்கு எதிரான
போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment