Wednesday, December 9, 2015

கொட்டித்தீர்த்தது மழை முடங்கியது சென்னை

 சீர்மிகு சிங்காரச் சென்னையில் பெய்யாப்பெருமழை பெய்ததால் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்துள்ளது. மழை வெள்ளம் ஆற்றுநீர் என்பவற்றினால் சென்னையில்  முடங்கியது.  சென்னையில் 40 மணிநேரத்துக்கும் மேலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவு வெள்ள நீர் கரைபுரண்டோடியது
வானத்து சுனாமிபோல்இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால்தமிழகத்தின் தலைநகரானசிங்கார சென்னைசீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பிஉபரி நீர் திறந்து விடப்பட்டுஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால்இயல்பு வாழ்க்கை முடங்கிமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன்தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில்வடகிழக்கு பருவ மழைஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில்மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில்சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம்கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்துகொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. முழுமையாக மீளாத நிலையில்வங்கக்கடலில்அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால்இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 'வானத்து சுனாமிபோல் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது.
எப்போதும் இல்லாத வகையில், 24 மணி நேரத்தில்காஞ்சிபுரம் மாவட்டம்தாம்பரத்தில், - 49; திருவள்ளூர் மாவட்டம்,செம்பரம்பாக்கம் - 47; சென்னையில் பரவலாக, 29 செ.மீ.மழை பெய்துள்ளது.  விடாது மழை கொட்டித் தீர்த்ததால்தலைநகர் சென்னை தண்ணீரில்தத்தளிக்கிறது. 
சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம்பூண்டிபுழல் ஏரிகள் உட்படஅனைத்து ஏரிகளிலும் இருந்துஉபரிநீர்எப்போதும் இல்லாத வகையில்அபரிமிதமாக திறந்து விடப்பட்டுள்ளதால்நிலைமை சிக்கலாகி விட்டது.அடையாறுபக்கிங்ஹாம் கால்வாய்,கூவம்கொற்றலைஓட்டேரி நல்லா எனஅனைத்து ஆறுகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. எப்போது கரை உடைத்து ஆபத்து ஏற்படுமோ எனஅஞ்சும் அளவுக்குபடுமோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் திறப்பால்தாம்பரம்வேளச்சேரிமுடிச்சூர்சோழிங்கநல்லுார்ஓ.எம்.ஆர்.எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலைகுன்றத்துார்,பள்ளிக்கரணைசைதாப்பேட்டை எனதென் சென்னைமத்திய சென்னையில் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தரைத்தளம்முதல் மாடி வரை வெள்ளம் 

சூழ்ந்ததால்மொட்டை மாடிகளில் ஏறிதங்களை மீட்க யாராவது வருவரா எனலட்சக்கணக்கான மக்கள் அபய குரல் கொடுத்த வண்ணம்உள்ளனர்.
மீனவர்கள் உதவியுடன்பொதுநல அமைப்பினர் தங்கள் பகுதிக்குள்மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவம் உள்ளிட்ட முப்படைகள்கடலோர காவல் படைதீயணைப்புப் படை எனகளத்தில் ஏராளமானோர் குவிந்ததாலும்உரிய இடங்களுக்கு மீட்புக்கு செல்ல முடியவில்லை. மின் தடையால்மொபைல் போன் நிறுவனங்களின் டவர்கள் செயல் இழந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்வெள்ளத்தில் சிக்கித் தவிப்போர்யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். உதவி கோரி அழைப்பு வந்த பகுதிகளில் உள்ளோரைமீட்பு படையினரும்தொடர்பு கொள்ள முடியாமல் திணறினர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும்தகவல் தொடர்பு துண்டிப்பால்மீட்புப்பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கின.


சென்னையில்புறநகர் ரயில் போக்குவரத்துவெளி மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்தும் முடங்கியது. தண்ணீர் புகுந்ததால்,சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில்அண்ணா சாலை உள்ளிட்ட, 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் கால் டாக்சிகளின் செயல்பாடும் முடங்கி உள்ளது. பாதுகாப்பு கருதிசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை        ஒரே நாளில் மட்டும்   சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை இப் போது பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 3ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருமாதம் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை வீழ்ச்சியால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒக்டாபர் மாதம் 28  ஆம் திகதி வடகிசக்கு பருவமழை  ஆரம்பித்தது. நவம்பர் மாதம் வங்கக்கடலில் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்தம் தொடர் மழைக்கு வழிவகுத்தது. 90 சதவித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
வீதிகளில் 10 அடிக்கு மேல் வெள்ளம்  பாய்வதால் போக்குவரத்து முடங்கியது..  வெள்ளத்தில் மூழ்கிய சில  பகுதிகளுக்கு மீட்புக்குழு செல்லமுடியாத நிலை உள்ளது. தன்னார்வத்தொண்டர்களும்  உதவும் மனம் படைத்தவர்களும் தமது உயிரையும் பொருட்படுத்தாது  துணிச்சலுடன் மீட்புப்பணியைச் செய்கிறார்கள். சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீவிர மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிர மீட்பு பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, கடலோர படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் வீரர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணிகளுக்காக பெங்களூரில் இருந்து 2 கம்பெனிகளின் 80 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  


பலத்த மழைவெள்ளம் ஆகியவற்றால் இலட்சக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் தங்க இடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.  உணவு குடிதண்ணீர் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஹெலிகொப்டர் மூலம் உணவுப்பொதிகள் போடப்படுகின்றன.
மழையால் தமிழகத்தில், 269 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். தமிழக மழை சேதம் பற்றி லோக்சபாவில் அறிக்கை சமர்ப்பித்து அவர் கூறியது: வெள்ள சேதத்தால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 என தெரியவந்துள்ளது. சென்னையில் 40 சதவீத தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. என்றார்.
 


    வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 2வது நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன், தொலைபேசி, ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டுள்ளது

 
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனால் மக்களால் செல்போன்லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியவில்லை. செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் வெளிமாவட்டங்கள்மாநிலங்களில் வசிக்கும் உறவினர்களால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிய முடியவில்லை. சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்து ஏ.டி.எம். மையம் சென்றவர்கள் சேவை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். ஒரு சில இடங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுகின்றனர்.

சென்னை வாசிகளின் பிரதானமாக பயன்படுத்தி மின்சார ரயில் சேவைகள் மற்றும் மாநகரப்பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கியது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் கொட்டித்தீர்க்கும் கன மழை காரணமாக   டிசம்பர் -3  டிசம்பர் -4 ஆகிய இருதினங்களும்   பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு தினங்களிலும் விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களை  அரசு அறிவுறுத்தியுள்ளது.


பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் ஹெலிக்கொப்டரிலிருந்து தனித்தனியாக வெள்ள சேதங்களைப்பார்வையிட்டனர்.   தமிழக வெள்ள நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகொப்டரில் அமர்ந்தபடி சுற்றி பார்த்தார். இதன்பிறகு தமிழக ஆளுநர், ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை, அடையாறு ஐஎன்எஸ்-ல் சந்தித்து ஆலோசித்தார். பிறகு மோடி கூறியதாவது: நான் பார்வையிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் மிக அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. தமிழக மக்களின் இந்த துயர நேரத்தில், மத்திய அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்.
 உடனடியாக, தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.940 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.  பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களும்  தமிழாக அரசுக்கு  உதவ முன்வந்துள்ளன, 
சென்னையின்  சீரழிவுக்கு  மசிவேழம், ஆறுகள், ஏரிகள் உடைப்பெடுப்பு என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. வரைமுறையற்ற  கட்டுமானப்பணிகளும் சனப்பெருக்கமுன் முக்கிய காரணிகள் என்பதை வசதியாக அனைவரும் மறந்துவிட்டனர்.  சென்னையின் சராசரிமழை 1468 மி ,மீ  ஒருமாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒருநாளில் பெய்து முடித்தது.    மழை வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வல்லமை சென்னைக்கு இல்லை.
 1976 ஆம் ஆண்டு  452.4 மி.மீ மழை பெய்தது. அன்று அந்த மழை வெள்ளத்தி சென்னை தாங்கியது. இன்று   வளர்ச்சி என்ற பெயரில் சென்னை சீரழிந்துவிட்டது. அதனால்தான் இந்த நிலைமை. சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை  இப்போது  பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 3– ஆம் திகதி  ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது2வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது
Add caption
பெருமளவு மக்கள் தொகை அதிகரித்த நகரத்தில் சென்னை முதலிடத்தைப் பிடித்தது.  அதிகரித்த மக்கள் தொகையும் சீரழிவுக்கு ஒரு காரணம். சதுப்பு நிலங்கள்,நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டமையும் இன்றைய அவலநிலைக்கு   சான்றாகும். சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து நான்கு ஆறு வழி திவீக பாதை அமைக்கப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடிகள்  வணிக வளாகங்கள் என்பன கட்டப்பட்டன.

கிறனிற் முரகீடு குறித்து சகாயம் ஆய்வு செய்தபூது தமது பகுதியில் இருந்த ஏரிகள், வாய்க்கால்கள் என்பன அழிக்கப்பட்டதாக அவரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டது.  இந்த அத்து மீறல்களை கடந்தகால தமிழக அரசுகள் கண்ண்டும் காணாது விட்டன.  அந்த சிறிய சலுகைகள் இன்று விச்வறுபம் எடுத்து மக்களை நிர்க்கதியாக்கி உள்ளன.

அடையாறு,கூவம் கரைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டமையினால் வெள்ளம் வடிந்து ஓட  வழி இல்லாது  ஊருக்குள் நுழைந்து ஊரை வெள்ளக் காடாக்குகிறது.
இன்றைய அவலத்தை கவனத்தில் எடுத்து  இயற்கை சஈர்ரங்களின்  பூத்து நகரத்தையும் மக்களையும்  பாதுகாக்கும் நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க வேண்டும்.
தமிழ்த்தந்தி
06/12/15




2 comments:

Nagendra Bharathi said...

வேதனை

UNMAIKAL said...

அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவிக்கிறார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் கரசேவை செய்வோம்.
.
1. சொடுக்கி >>>> சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1. << < படிக்கவும்.
.
2. சொடுக்கி >>>> தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2. <<< படிக்கவும்.
.
3. சொடுக்கி >>>> தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3. <<< படிக்கவும்
.
4. சொடுக்கி >>>> வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4. <<< படிக்கவும்.
.
5. Posted by S.Raman, Vellore .சொடுக்கி >>>> காவிகளின் கயவாளித்தனம் <<< படிக்கவும்.
.
சொடுக்கி >>>> கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம். பகுதி 5. <<< படிக்கவும்.
.