அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தர்மசாலாவில்
நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில்
அறிமுக வீரராக களம் இறங்கிய குல்திப் யாதவ்
சைனா மேன் பந்து வீச்சின் மூலம் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இவர் 228 ஆவது வீரராக
இந்தியா சார்பில் அறிமுகமானார்.
அஸ்வின் ஓஃவ் ஸ்பின்னர், ஜடேஜா லெஃப்ட் ஆம்
ஸ்பின்னர், குல்தீப் யாதவ் சைனா மேன் லெஃப்ட் ஆம் ஸ்பின்னர். மதிய உணவு வரை 31 ஓவர்களில் 131 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையுடன் இருந்த
அவுஸ்திரேலிய வீரர்கள் குல்தீப் நாதரின் பந்து வீச்சில் சரிந்தனர் மதிய உணவு
இடைவேளைக்குப் பின் நான்காவது ஓவரில்
ஆட்டத்தின் போக்கு மாறியது. 35 ஆவது ஓவரை குல்தீப்
நாயர் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட வானர், ரகானேயிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார். ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி
முடிவடைய காரணமான ஹேண்ட்ஸ் காம்,, ஸ்வெல்
ஆகியோர் தாலா எட்டு ஓட்டங்களில் குல்தீப்
யாதவின் பந்தி வீச்சில் ஆட்டமிழந்தனர். முக்கியமான மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
சைனா மேன் பந்தில் பல்வேறு மாறுபட்ட கூக்ளி. ஓஃவ் ஸ்பின்,லெக் ஸ்பின் வீசி அவுஸ்திரேலிய வீரர்களைத்
திணறடித்தார்.
குல்தீப் நாயர் வேகப் பந்து வீச்சாளராகப்
பயிற்சி பெற்றார். பயிற்சியாளர் கபில் பாண்டேயின் ஆலோசனையின் பின்னர் லெக் ஸ்பின்னராக
மாறினார். 22 முதல் தர போட்டிகளில் 81 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்
1993 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் மேற்கு இந்தியத்
தீவுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில்
சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட எல்லிஸ் அச்சாங்
அன்பவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த இங்கிலாந்து வீரரான வால்டர் ரொபின்ஸ்
, கோபமடைந்து ப்ளடி சைனா
மேன் எனத் திட்டினர். அன்றில்
இருந்து மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் இடதுகைப் பந்தி வீச்சை சைனா மேன் பந்து வீச்சு என்பார்கள். போல்
அடம்ஸ், மைக்கல் பெவன், பிராட் ஹோக், சாமுவேல் பத்ரி போன்றவர்கள் இப்படியான
பந்து வீச்சாளர்கள் ஆவர்.
No comments:
Post a Comment