அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றுவதற்கு சசிகலா செய்த சதியால் அந்தக் கட்சியின்
இரட்டை இலைச்சின்னத்தையும் கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கி விட்டது. எம்.ஜி.ஆருக்கும்
ஜெயலலிதாவுக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்த இரட்டை இலைக்கு அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அணிகளும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம்
அதனைமுடக்கிவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் மனதில் ஆழமாகப்
பதிந்துள்ள இரட்டை இலை இல்லாததால் இரண்டு அணிகளும் வெற்றி பெற முடியாத நிலை
உள்ளது.
தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கட்சியின் சின்னம் மிக முக்கியமானது.
கட்சித் தலைமை அடையாளம் கட்டும் வேட்பாளருக்கு வாக்களித்துப் பழக்கப்பட்டவர்கள்
புதிய சின்னத்துக்கு வாக்களிக்க
நிர்ப்பந்தப் படுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்றால் கட்சிமாறி
சின்னம் மாறினாலும் வெற்றி பெறுவார்.
பன்னீர் அணியில் போட்டியிடும் மதுசூதனன் ஆர்.கே. நகரில் இரட்டை இலைச் சின்னத்தில்
போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இப்போது
இரட்டை இலை இல்லை. நான் நியமித்த வேட்பாளர் இவர்தான் என அடையாளம் காட்ட ஜெயலலிதாவும் இல்லை. ஆர்.கே.நகரின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்பதனால்
அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.
சசிகலாவின்
அணியின் வேட்பாளரான தினகரன்
ஆர்.கே.நகருக்குப் புதியவர். இரட்டை இலைச் சின்னம் இல்லை. ஜெயலலிதாவின்
மன்னார்குடி குடும்பத்தவர் என்ற பிரசாரம் அவருக்கு எதிராக தீவிரமடையும் நிலை
உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் எனத் தெரிந்து கொண்டு தீபா
போட்டியிடுகிறார். அரசியல் பின்புலம் எதுவும் இல்லை.ஆர்.கே.நகர் தொகுதிக்குப்
புதியவர். இவர்கள் மூவரும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக வாக்கைப் பிரிக்கப்போகிறார்கள். அதனால் திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர்
தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 40 சதவீதமான வாக்கு
இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட்டபோது முதல்வரின் தொகுதி ஜெயலலிதாவின் செல்வாக்கு என்பனவற்றின்
காரணமாக 55 சதவீத வாக்கைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அடுத்துவந்த
பொதுத்தேர்தலில் 22 சதவீவித வாக்கு குறைந்தது. ஆர்.கே.நகரில் ஜெயலளிதைரண்டு
முறை போட்டியிட்டபோதும் தேர்தல் வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை.இவை
எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அமையப்போகின்றன.
பன்னீரின் அணி இரட்டை மின்கம்ப சின்னத்தைத் தெரிவு
செய்துள்ளது. இந்தச்சின்னத்தைப் பார்க்கும் போது இரட்டை இலை போன்று
தோற்றமளிப்பதால் விபரம் தெரியாதவர்கள் இரட்டை இலை என நினைத்து அதற்கு
வாக்களிப்பார்கள். அதிமுக புரட்சித்தலைவி அம்மா என பன்னீர்ச்செல்வத்தின் அணிக்கு
பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக அம்மா என
கட்சிக்குப் பெயரிட்ட தினகரனுக்கு தொப்பிச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தொப்பியின்
மூலம் எம்.ஜி.ஆரை ஞாபகப்படுத்த ஆனால்,
எம்.ஜி.ஆரின் தொப்பிக்கும் தினகரனின் தொப்பிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இரண்டு அணிகளின் கட்சிப் பெயர்களிலும் அதிமுகவும் அம்மாவும் இடம்பிடித்துள்ளன. பன்னீர்ச்செல்வத்தின்
தரப்பு இரட்டை மின் கம்பச்சின்னத்தைக் கேட்டுப் பெற்றது. தினகரனுக்கு முதலில்
ஆட்டோ சின்னம் கொடுக்கப்பட்டது. தமக்குத் தொப்பி வேண்டும் என அவர்கள் கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர் புதிய கட்சியை ஆரம்பித்த பின்னர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நான்குமுறை உட்கட்சிப் பூசல்கள்
நடைபெற்றன. அவற்றில் இரண்டு முறை
கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு எதிராக 100குற்றச்சாட்டுகளை முன்வைத்த எஸ்.டி சோமசுந்தரம்
போராட்டம் நடத்தினார். .நமது கழகம் என்றபெயரில் கட்சியை ஆரம்பித்தர். கடைசியில்
எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். 1988 ஆம் ஆண்டு
நெடுசெழியன், பண்டிருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், அரங்கநாயகம் ஆகியோர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தார்கள். ஒரு வருடத்தில் எம்.ஜி.ஆரிடம்
தஞ்சமடைந்தனர்.பண்டிருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்தின் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் இணைந்தார். எம்.ஜி.ஆர்
காலத்தில் நால்வர் அணி. ஜெயலலிதாவின் காலத்தில் ஐவர் அணி. இப்போ தினகரனுக்கு
ஆலோசனை சொல்வது நால்வர் அணி என்கிறார்கள்.
எம்,ஜி ஆரின் மீது அதிருப்பதியடைந்த
திருநாவுக்கரசர், கட்சியைக் கைப்பற்றப் போவதாக 1996 ஆம் ஆண்டு அறிவித்தார். அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்14 நாடாளும்மன்ற உறுப்பினர்கள்
இருந்தார்கள்.அவர்களில் 7 பேர் திருநாவுக்கரசரின் பின்னால் நின்றார்கள்.
ஒரு வருடத்தில்எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார் திருநாவுக்கரசர். எம்.ஜி ஆர்.இறந்தபோது
ஜானகியும் ஜெயலலிதாவும் முட்டி மோதியதால்
கட்சி இரண்டாகி சின்னம் முடக்கப்பட்டது.
ஜானகி அரசியலை விட்டு விலகியதால் பிரிந்தவர்கள் சேர்ந்தனர். முடக்கப்பட்ட
சின்னம் விடுவிக்கப்பட்டது. இப்போது ஜெயலிதாவின் மரணத்தின் பின்னர் சசிகலாவின்
பதவி ஆசையால் அண்ணா திரவிட முன்னேறக் கழகம் இரண்டானது. இரண்டு அணிகளும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்துக்க் உரிமை கோரியதால் கழகப் பெயர்,கொடி,சின்னம் ஆகியவை
முடக்கப்பட்டன.
எம்.ஜி.ஆரின்
நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் அவர் ஆரம்பித்த கட்சிக்கு சோதனை
ஏற்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் மருது கணேஷுக்கும் மதுசூதனனுக்கும் இடையில் தான் போட்டி நடைபெறும்.திரவுட
முன்னேற்றக் கழக வாக்குகள் சிதறாமல் இருந்தால் அக் கட்சியன் வேட்பாளர் மருது
கணேஷ் வெற்றி பெறுவார்.
வைகோ,திருமாவளவன்,வாசன், முத்தரசன்
ஆகியோரின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கு ஆதரவு இல்லை
எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தக் கட்சிகளின் வாக்குகள் வெற்றியை
தீர்மானிக்கும் என்பதால் வேட்பாளர்களின் கவனம் அங்கே திரும்ப வாய்ப்புள்ளது.
தமிழக மக்களின் மன
உணர்வை வெளிப்படுத்த நிலையில் ஆர்.கே. நகர வாக்காளர்கள் இருக்கின்றனர்.தமிழகத்தின்
எதிர்காலம் ஆர்.கீ.நகர் வாக்காளரின் விரல் நுனியில் தங்கியுள்ளது.
வர்மா
No comments:
Post a Comment